12 பிரம்படி, 18 வருடங்கள் சிறை: பணிப்பெண்ணிடம் அத்துமீறிய இந்தியருக்கு, சிங்கப்பூரில் தண்டனை

222 0

சிங்கப்பூரில் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுவது வழக்கம்.

சமீபத்தில் பல மனித உரிமை அமைப்புகளின் எதிர்ப்பையும் மீறி போதை மருந்து கடத்தல் வழக்கில் ஒரு பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. சில குற்றச்சாட்டுகள் உறுதியானால் இங்கு பிரம்படி வழங்குவதும் வழக்கம். ஒரு குற்றத்திற்கு தண்டனை பெற்று அதனை அனுபவித்த பிறகும் மீண்டும் அதே குற்றத்தை ஒருவர் புரிந்தால் அவர் மீது சிங்கப்பூரில் கடுமையான தண்டனைகள் கிடைக்கும். இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவருக்கு இத்தகைய கடுமையான தண்டனைகள் தற்போது வழங்கப்பட்டிருக்கிறது.12 years, 18 years in jail: Indian man sentenced for raping maid in  Singapore

சிங்கப்பூரில் வசித்த மார்க் கலைவாணன் கலையரசன் (44) என்பவர் பாலியல் குற்றச்சாட்டுக்களுக்காக 16 வருடங்கள் சிறை தண்டனை பெற்றவர். 2017-ம் வருடம் சிறையில் இருந்து வெளியே வந்தார். சில நாட்களிலேயே, சிறையிலிருந்து வெளியே வந்த கலையரசன் ஒரு அபார்ட்மெண்ட் பகுதியில் உள்ள ஒரு ஃப்ளாட்டில் அத்துமீறி நுழைந்தார். அந்த வீட்டில் ஒரு பணிப்பெண் துணிகளை மடித்துக்கொண்டு வீட்டு வேலை செய்து கொண்டிருந்தார். போதையில் இருந்த கலையரசன், அந்த பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறினார்.

அப்பெண்ணின் கூக்குரலால் பிடிக்கப்பட்ட மார்க், கைது செய்யப்பட்டு விசாரணையை எதிர் கொண்டார். இதன்படி, கலையரசன் சமூகத்தில் உள்ள பிறருக்கு தீங்கு விளைவிக்க கூடியவர் என வாதிடப்பட்டு அவருக்கு 18 வருடம் தடுப்பு காவல் சிறை தண்டனை (Preventive Detention) வழங்கப்பட்டது. இத்துடன் சிங்கப்பூரின் தண்டனை சட்டத்தின்படி 12 பிரம்படிகளும் கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சமுதாயத்தை கட்டுக்கோப்பாக வைத்திருக்க இத்தகைய கடுமையான தண்டனைகள் அவசியம் என அந்நாட்டு அரசாங்கம் பலமுறை கூறி வந்திருக்கிறது.

Related Post

ட்ரம்பின் வரிகள் சட்டவிரோதமானது – அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு.. ”கேன்சல் பண்ணிட்டா..” வார்னிங்

Posted by - August 30, 2025 0
அதிபர் ட்ரம்ப் மற்ற நாடுகள் மீது விதித்துள்ள வரிகள் சட்டவிரோதமானது என அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்துள்ளது. புதிய வரிகள் ரத்து செய்யப்பட்டால் பெரும் பேரழிவை ஏற்படுத்தும் என,…

அடங்காத ரத்தவெறி..

Posted by - July 26, 2025 0
#Gaza #Trump #IsraelIsrael #GazaWar #WorldNews காசாவில் இறக்க வேண்டும் என்ற ஹமாஸின் ஆசையை இஸ்ரேல் பூர்த்தி செய்ய வேண்டும் என, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசியுள்ளார்.…

பிரபல கூகுள் CEO…சுந்தர் பிச்சை அவர்களின்…ஒரு வினாடி சம்பளம் எவ்வளவு தெரியுமா…?

Posted by - January 6, 2025 0
மதுரையில் பிறந்த பிச்சை சுந்தர் ராஜன் என்ற சுந்தர் பிச்சை, தனது பள்ளிப் படிப்புகளை மதுரையில் கொஞ்சம் சென்னையில் கொஞ்சம் என முடித்து விட்டு ஐஐடி கரக்பூரில்…

சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி 24-ந்தேதி சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீரை வெளியேற்றுகிறது ஜப்பான்

Posted by - August 22, 2023 0
ஜப்பானில் 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், ஒரு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் விளைவாக ஏற்பட்ட சுனாமியினால் பெரும் கடல் அலைகள் ஜப்பானின் புகுஷிமா அணுமின் நிலையத்தின்…

“ஆட்டம்” காண துவங்கிய “ஆயிரம்” வருட கோபுரம்

Posted by - December 2, 2023 0
வட இத்தாலியில் உள்ள போலோனா (Bologna) நகரில் இரு மிக பெரிய கோபுரங்கள் அருகருகே உள்ளன. உலக அளவில் பல வரலாற்று நூல்கள், குழந்தைகளுக்கான பாடல்களிலும், பயண…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *