ட்ரம்பின் வரிகள் சட்டவிரோதமானது – அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு.. ”கேன்சல் பண்ணிட்டா..” வார்னிங்

161 0

அதிபர் ட்ரம்ப் மற்ற நாடுகள் மீது விதித்துள்ள வரிகள் சட்டவிரோதமானது என அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

புதிய வரிகள் ரத்து செய்யப்பட்டால் பெரும் பேரழிவை ஏற்படுத்தும் என, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சருஇத்துள்ளார்.

”பேரழிவை ஏற்படுத்தும்” என ட்ரம் வார்னிங்

உலக நாடுகள் மீது புதியதாக அமல்படுத்தப்பட்ட வரிகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உறுதிபடுத்தியுள்ளார். ஒருவேளை அவற்றை நீக்கினால், அது நாட்டிற்கு பேரழிவை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளார். சர்வதேச வர்த்தகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள ட்ரம்பின் புதிய வரி அறிவிப்புகளில் பெரும்பாலானவை சட்டவிரோதமானது என, அமெரிக்க நீதிமனறம் தீர்பளித்த அடுத்த சிறிது நேரத்திலேயே அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். அதேநேரம், தற்போதைய சூழலில் இந்த வரி அப்படியே தொடருமெனவும், ட்ரம்ப் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ட்ரம்ப் சொல்வது என்ன?

நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக தனது சமூக வலைதள கணக்கில் ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், “ஒரு உயர் பாகுபாடான மேல்முறையீட்டு நீதிமன்றம் நமது வரிவிதிப்புகளை நீக்க வேண்டும் என்று தவறாகக் கூறியது, ஆனால் இறுதியில் அமெரிக்கா வெற்றி பெறும் என்பது அவர்களுக்குத் தெரியும். இந்த வரிவிதிப்புகளை நீக்கினால் அது நம்மை நிதி ரீதியாக பலவீனப்படுத்தும்,  நமது உற்பத்தியாளர்கள், விவசாயிகள் மற்றும் மற்ற அனைவரையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் மிகப்பெரிய வர்த்தக பற்றாக்குறைகள், நியாயமற்ற வரிகள் மற்றும் பிற நாடுகள், நண்பர் அல்லது எதிரிகளால் விதிக்கப்படும் வரி அல்லாத வர்த்தக தடைகளை அமெரிக்கா இனி பொறுத்துக்கொள்ளாது. இந்த முடிவு ஏற்றுக்கொள்ளப்பட்டால், அமெரிக்காவையே அழித்துவிடும். தொழிலாளர்களுக்கு உதவவும், ‘அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட’ பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களை ஆதரிக்கவும் இந்த வரிகள் சிறந்த கருவியாகும்” என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற தீர்ப்பில் இருப்பது என்ன?

ட்ரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைகள் சட்டவிரோதமானது என மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதில், டிரம்ப் வரிகளை விதிப்பதன் மூலம் தனது அதிகாரத்தை மீறியதாகவும், அதன் மூலம் வர்த்தக பேச்சுவார்த்தைகளில் வெளிநாட்டு அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுப்பதில்பயன்படுத்தி வருகிறார் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், அறிவிக்கப்பட்ட தேசிய அவசரநிலையின் போது அதிபருக்கு பரந்த அதிகாரங்கள் இருந்தாலும், அந்த அதிகாரங்களில் வெளிப்படையாக வரிகளை விதிப்பது அல்லது இதுபோன்ற பரஸ்பர வரிகளை விதிப்பது ஆகியவை அடங்காது என்று நீதிமன்றம் விளக்கமளித்துள்ளது.

அதேநேரம், உச்சநீதிமன்றத்தினை அணுக ட்ரம்ப் நிர்வாகத்திற்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதால், தற்போதைய சூழலில் வரிகள் ஏதும் ரத்து செய்யப்படாது. குறிப்பாக இந்தியா மீது விதிக்கப்பட்டுள்ள 50 சதவிகித வரிகள் அப்படியே தொடர உள்ளது. மற்ற நாடுகளை போன்று இந்தியாவிற்கு 25 சதவிகிதம் வரி விகிதத்தோடு, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதற்காக அபராதமாக கூடுதலாக 25 சதவிகிதம் வரியும் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Post

வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்… இனி க்ரூப் சாட்டில் எவ்வளவு பேர் ஆன்லைனில் இருக்காங்கன்னு பார்க்கலாம்…

Posted by - December 10, 2024 0
குரூப் சாட் செய்யும்போது க்ரூப்பில் ஆன்லைனில் உள்ளவர்களின் எண்ணிகையை பார்க்கும் வசதியை வாட்ஸ்அப் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. பிரபல வாட்ஸ்அப் மெசஞ்சர் செயலியானது முக்கியமான இரண்டு புதிய…

இந்திய பெருங்கடலில் அதி பயங்கர சூறாவளி- மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு

Posted by - February 21, 2023 0
இந்திய பெருங்கடலில் அதிபயங்கர வெப்பமண்டல சூறாவளி உருவாகியிருப்பதாக சர்வதேச விண்வெளி மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் இந்தியப் பெருங்கடல் தீவான மொரிஷியசை நோக்கிச் செல்கிறது. புயல் இன்று…
Generated Image November 17 2025 11 15AM

சவூதி அரேபியாவில் பேருந்து விபத்து – 42 இந்திய யாத்ரீகர்கள் பலி!

Posted by - November 17, 2025 0
சவூதி அரேபியாவில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 42 இந்திய யாத்ரீகர்கள் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. பேருந்து ஒன்று மெக்காவில் இருந்து மதீனாவுக்குப் சென்று கொண்டிருந்தது, இதில் இந்திய …

அடங்காத ரத்தவெறி..

Posted by - July 26, 2025 0
#Gaza #Trump #IsraelIsrael #GazaWar #WorldNews காசாவில் இறக்க வேண்டும் என்ற ஹமாஸின் ஆசையை இஸ்ரேல் பூர்த்தி செய்ய வேண்டும் என, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசியுள்ளார்.…

அமெரிக்காவின் பித்தலாட்டம்.! ட்ரம்ப்பை சந்திக்கும் பாக். ராணுவ தளபதி-பாகிஸ்தானியர்கள் எதிர்ப்பு

Posted by - June 18, 2025 0
பாகிஸ்தான் ராணுவ தளபதியை நாங்கள் அழைக்கவே இல்லை என்று அமெரிக்கா கூறிய நிலையில், அமெரிக்காவில் ட்ரம்ப்-அசிம் முனிர் சந்திப்பு நிகழ இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க ராணுவத்தின்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *