தமிழ்நாடு பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள 10 முக்கிய அறிவிப்புகள்?

332 0

2024–25ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.

2024–25ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இதில் இடம்பெற்றுள்ள  டாப் 10 அறிக்கைகள் குறித்து பார்க்கலாம்.

‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டம்

8 லட்சம் கான்கிரீட் வீடுகள் குடிசையில்லா தமிழ்நாட்டை உருவாக்க ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டம் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் அடுத்த 6 ஆண்டுகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். இத்திட்டத்திற்கு ரூ.3500 கோடி ஒதுக்கீடு. ஒரு வீட்டின் மதிப்பீடு ரூ.3.5 லட்சமாக நிர்ணயம்

காலை உணவு திட்டம் விரிவாக்கம்..!

காலை உணவுத் திட்டத்திற்கு ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டை விட கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக மேலும் 2 லட்சம் மாணவ மாணவிகள் பயனடைவார்கள்.

3 ஆம் பாலினத்தவர்களுக்கான உயர்கல்வி செலவை அரசு ஏற்கும்..!

உயர்கல்வி பயில விரும்பும் 3 ஆம் பாலினத்தவர்களுக்கான முழு செலவையும் அரசு ஏற்கும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

மாணவர்களுக்கும் மாதம்தோறும் ரூ.1000 உதவித்தொகை

அரசு பள்ளிகளில் 6-12 வகுப்பு வரை படித்து உயர் கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதம்தோறும் ₹1000 உதவித்தொகை! அரசு பள்ளிகளில் 6-12 வகுப்பு வரை படித்து உயர் கல்வியில் சேரும் மாணவர்களின் கல்வியை மெருகேற்ற தமிழ்ப் புதல்வன் திட்டம். இத்திட்டத்தில் மாதந்தோறும் மாணவர்களுக்கு ரூ.1000 வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

தமிழ்ப்புதல்வன் என்ற புதிய திட்டம் அறிமுகம்

ஒரு லட்சம் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க ₹2500 கோடி ஒதுக்கீடு. நான் முதல்வன் திட்டத்திற்கு ₹200 கோடி ஒதுக்கீடு. தமிழ்ப்புதல்வன் என்ற புதிய திட்டத்திற்கு ₹360 கோடி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.

அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கு புதுமை பெண் திட்டம் விரிவாக்கம்..!

பெண்களின் உயர்கல்விக்கு உதவும் புதுமை பெண் திட்டத்தை வரும் நிதியாண்டில் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம் உருவாக்கப்படும்..!

தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம் ஏற்படுத்தப்படும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

வெளிநாடு சென்று ஆராய்ச்சி படிப்பு படிக்க புதிய திட்டம்..!

அரசு பள்ளி மாணவர்கள் பட்டம் மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை வெளிநாட்டு சென்று மேற்கொள்ள உதவித்தொகை வழங்கும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு மெட்ரோ…

சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ ரயிலை நீட்டிக்க விரிவான திட்ட அறிக்கை ரூ.4,625 கோடியில் பெறப்பட்டு மத்திய அரசின் பங்களிப்புக்காக ஒப்புதல் கோரப்படும்.

தஞ்சாவூர், சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடியில் நியோ டைடல் பார்க்…

தஞ்சாவூர், சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நியோ டைடல் பார்க் அமைக்கப்படும். இதன் மூலம் 13,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்

Related Post

திமுக அரசின் நிர்வாகத் தோல்வியே வெள்ளத்திற்கு காரணம்: சீமான் காட்டம்…

Posted by - December 6, 2023 0
சென்னை: திமுக அரசின் தோல்வியே சென்னை வெள்ளப்பெருக்கிற்குக் காரணம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.இது குறித்து சீமான் கூறியிருப்பதாவது: இயற்கைச் சீற்றத்தை…

கூட்டணி கட்சி தலைவர்கள் குறித்து கருத்து தெரிவித்தால் நடவடிக்கை – பாஜக நிர்வாகிகளுக்கு சிடிஆர் நிர்மல் குமார் எச்சரிக்கை

Posted by - December 28, 2022 0
நேற்று பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உடனான ஆலோசனைக்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாஜக நிர்வாகிகள் தங்களின் சொந்த கருத்துக்களை கட்சியின் கருத்து போல சமூக…

நம்ம சென்னைதான் கெத்து! ஹைபர்லூப் டெக்னிக்கில் எலான் மஸ்க்கையே அதிர வைத்த ஐஐடி மெட்ராஸ் மாணவர்கள்

Posted by - October 13, 2023 0
சென்னை: ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வடிவமைத்த ஹைபர்லூப் மணிக்கு 1000 கி.மீ. வேகத்தில்தான் செல்லுமாம், ஆனால் சென்னை ஐஐடி மாணவர்கள் உருவாகிய ஹைபர்லூப் வாகனத்தில் மணிக்கு 1200…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தூத்துக்குடி செல்கிறார்: இன்று மத்திய குழு ஆய்வு செய்கிறது

Posted by - December 20, 2023 0
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் கடந்த 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த கனமழையின்…

ICUவில் இருக்கும் அறந்தாங்கி நிஷாவின் மகள்- ஆனாலும் அவர் செய்த வேலை, வாழ்த்தும் மக்கள்

Posted by - December 11, 2023 0
அறந்தாங்கி நிஷா திருமணத்திற்கு பின் ஒரு பெண் ஜெயிக்கிறாள் என்றால் அவருக்கு துணையாக அவரது கணவர் இருக்கிறார் என்பது தான் உண்மை. அவரது உதவி இல்லாமல் ஒரு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *