3ஆவது முறையாக பதவியேற்ற பிரதமர் மோடி – கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை அமைச்சர்கள்?

332 0

கேரள மாநில வரலாற்றில் பாஜக சார்பில் முதல் எம்பியாக தேர்வாகியுள்ள நடிகர் சுரேஷ் கோபிக்கு மத்திய இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

நாட்டின் பிரதமராக மோடி 3ஆவது முறையாக பதவியேற்றுக் கொண்டார். அவருடன் சேர்த்து 72 பேர் பதவியேற்ற நிலையில், மாநில மற்றும் கூட்டணி வாரியாக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளவர்கள் யார், யார் என விவரிக்கிறது இந்தச் செய்தித் தொகுப்பு!

மோடி 3.0 அமைச்சரவையில் 21 மாநிலங்கள் மற்றும் டெல்லி, ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிர்தேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அமைச்சரவை பட்டியல் அமைந்துள்ளது.

அதன்படி, அதிகபட்சமாக நாட்டிலேயே பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் இருந்து 9 பேர் அமைச்சர்களாகியுள்ளனர்.

பாஜக தவிர கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளுக்கு 5 கேபினட் அமைச்சர், ஒருவருக்கு தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர், 5 இணை அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

ஆந்திராவில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி சார்பில் இருவருக்கும், பாஜக சார்பில் ஒருவருக்கும் அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.இதே போல, மற்றொரு முக்கிய கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் உள்ள பிகார் மாநிலத்தில் இருந்தும் பலர் அமைச்சர்களாகியுள்ளனர்.

குறிப்பாக, பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்கப்பட்ட கர்பூரி தாகூரின் மகன் ராம்நாத் தாக்கூருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கேரள மாநில வரலாற்றில் பாஜக சார்பில் முதல் எம்பியாக தேர்வாகியுள்ள நடிகர் சுரேஷ் கோபிக்கு மத்திய இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்டவர்களான நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் உள்ளிட்டோரும் அமைச்சரவையில் இடத்தை தக்க வைத்தனர். மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்த போதும், எல்.முருகனுக்கு மீண்டும் அமைச்சர் பதவி கிடைத்துள்ளது.இதே போல, பஞ்சாப் மாநிலத்தில், காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து மக்களவை தேர்தலில் தோல்வியடைந்த ரவ்னீத் சிங் பிட்டு-விற்கும் அமைச்சர் பொறுப்பு கிடைத்துள்ளது.மேற்கு வங்க மாநில பாஜக தலைவராக உள்ள சுகந்தா மஜூம்தார் மற்றும் தெலங்கானாவில் பாஜகவின் வளர்ச்சிக்கு காரணமாக இருந்த பன்டி சஞ்சய் ஆகியோருக்கும் மத்திய இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

Related Post

பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி

Posted by - January 2, 2026 0
அரசு ஊழியர்கள் கோரிக்கை புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட  10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் மூத்த ஐஏஎஸ் அதிகாரி ககன் தீப் சிங் பேடி தலைமையில் குழு ஒன்றை அமைத்தார். இந்த குழு அரசு ஊழியர்கள், நிதி ஆலோசக அதிகாரிகள் என பல கட்ட ஆலோசனை…

திமுக மாணவரணி செயலாளர் மாற்றம் – காரணம் என்ன ?

Posted by - March 15, 2026 0
நாம் தமிழர் கட்சியில் மாநில இளைஞர் அணி செயலாளராக இருந்த வழக்கறிஞர் ராஜீவ் காந்தி, 2021ம் ஆண்டு திமுகவில் இணைந்தார். அவருக்கு திமுக செய்தி தொடர்பு இணை…

ஒருவழியாக..! முதல்முறையாக ”திமுக” பெயரை சொன்ன விஜய் – ”வீட்டிற்கு அனுப்ப உறுதி”

Posted by - March 8, 2025 0
திமுக தலைமையிலான அரசை 2026ல் மாற்றுவோம் என, மகளிர் தின வாழ்த்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார், சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி தமிழக…

திமுகவில் அதிரடி மாற்றம்.! பொன்முடிக்கு மீண்டும் பொறுப்பு – இது தான் காரணமா.?

Posted by - November 4, 2025 0
சர்ச்சை பேச்சு காரணமாக திமுக துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து பொன்முடி நீக்கப்பட்டிருந்த நிலையில் சுமார் 6 மாதங்களுக்கு பிறகு மீண்டும் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான காரணமும்…

‘‘திமுக ஆட்சி எப்போது போகும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்’’ – பொங்கல் விழாவில் பழனிசாமி பேச்சு

Posted by - January 16, 2026 0
மேட்டூர்: “எங்களது கூட்டணி வலிமையான கூட்டணி. சில கட்சிகள் வரும், இவற்றையெல்லாம் பகிரங்கமாக கூற முடியாது. வலிமையான கட்சிகள் ஒன்று சேர்ந்து தேர்தலை சந்திக்க இருக்கிறோம். திமுக ஆட்சி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *