520 கிமீ தூரம்.. 12கிமீ வேகம்.. நெருங்கி வரும் மாண்டஸ் புயல்.. வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அலெர்ட்!

228 0

Cyclone Mandous | டெல்டா மற்றும் கடலூரில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு அதிகம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்க கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று நள்ளிரவு புயலாக வலுப்பெற்றது. தொடர்ந்து கடந்த ஆறு மணி நேரத்தில் வடமேற்கு திசையில் மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் இந்தப் புயலானது , சென்னைக்கு தென்கிழக்கில் 550 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

தொடர்ந்து இது வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகம் புதுவை மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதியை நோக்கி நெருங்கி வரும் ஒன்பதாம் தேதி நள்ளிரவு புதுச்சேரிக்கும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா விற்கும் இடையே 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 85 கிலோ மீட்டர் வேகத்திலும் பலத்த காற்றுடன் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக இன்று கடலோரப் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும் நாளை தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் மிக முதல் அதிக கனமழையும் பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது

மீனவர்கள் 10ஆம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும்

நாளை இரவு புயல் கரையை கடக்கக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி ஸ்ரீ ஹரிகோட்டா இடையே நாளை இரவு புயல் கரையை கடக்கக்கூகும் என வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் சென்னையில் நாளை முதல் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் எனவும் திருப்பத்தூர் ராணிப்பேட்டை ஆகிய இடங்களில் 2 நாட்களுக்கு மிக கனமழை பெய்யுக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்டா மாவட்டங்களில் நாளை ஒரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை . திருவள்ளூர் ராணிப்பேட்டையில் ஒரிரு இடங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு அதிகம் என்றும்  கள்ளக்குறிச்சி திருப்பத்தூர், தி. மலை வேலூரில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல தருமபுரி, திருச்சி , சேலம் ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  டிசம்பர் 10ஆம் தேதி வரை தமிழகட்தில் கனமழை பெய்யும் எனவும் காற்று சிமார் 60 கிலோ மீட்டர் தூரத்திற்கு வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

முற்றிலும் மழைவிட எத்தனை மணி நேரம் ஆகும்? எப்போது கரையை கடக்கும்?

Posted by - December 4, 2023 0
கடந்த 3 மணி நேரத்தில் மிக்ஜாம் புயல் வலுவடைந்துள்ளதாக கூறியுள்ள தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மிக்ஜாம் புயல், நாளை அதிகாலையில் ஆந்திரா மாநிலம் நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினம் இடையே கரையைக்…

கோவில்களுக்குள் செல்போன், கேமராக்கள் கொண்டு செல்ல அனுமதிக்கக்கூடாது- அறநிலையத்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவு

Posted by - September 2, 2023 0
சென்னை: பழனி தண்டாயுதபாணி கோவில் கருவறைக்குள் எடுக்கப்பட்ட புகைப்படம் என ஒரு படம் சமூக வலைதளங்களில் உலாவி வருவதாக சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்த…

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஜாக்பாட்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

Posted by - November 13, 2025 0
ஜூலை 1ஆம் தேதி முதல் முன் தேதியிட்டு, இந்த அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட உள்ளது. தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அகவிலைப் படியை உயர்த்தி,…

தவெக இரண்டாம் ஆண்டு தொடக்கம் – விஜயின் ஓராண்டு அரசியல் பயணம் – தமிழக அரசியலில் தாக்கம்?

Posted by - February 2, 2025 0
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாமாண்டு தொடக்கநாளை ஒட்டி, அக்கட்சி தலைவர் விஜய் இன்று பல்வேறு தலைவர்களின் சிலையை திறந்து வைக்க உள்ளார். தலைவர்கள் சிலையை திறக்கும் விஜய்:…

கனமழைக்கு வாய்ப்பு

Posted by - September 26, 2023 0
#Rain | #RainAlert | #ChennaiRains | #Weather | #pixeltv | #pixelmedia தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *