Generated Image November 13 2025 5 00PM

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஜாக்பாட்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

188 0

ஜூலை 1ஆம் தேதி முதல் முன் தேதியிட்டு, இந்த அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட உள்ளது.

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அகவிலைப் படியை உயர்த்தி, முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதன்படி, 55 சதவீதமாக இருந்த அகவிலைப் படி, 58 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது.  ஜூலை 1ஆம் தேதி முதல் முன் தேதியிட்டு, இந்த அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட உள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

தமிழ்நாட்டு மக்கள் நலனில் அன்பும் அக்கறையும் கொண்டு, பல சீரிய முன்னோடி நலத் திட்டங்களைத் தீட்டி தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகின்றது. மக்களுக்காக வகுக்கப்படும் பல்வேறு நலத் திட்டங்களைத் தீட்டுவதிலும். அத்திட்டங்களை முழுமையாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் களப்பணியாற்றுவதிலும் முக்கியப் பங்கு வகிப்பவர்கள் அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள்.

58 சதவீதமாக உயர்வு

அத்தமைய அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மாநில அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன் பெறும் வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் 01.07.2025 முதல் மாநில அரசுப் பணியாளர்களுக்கும் ஒன்றிய அரசு அறிவித்துள்ள அகவிலைப் படிக்கு இணையாக உயர்த்தி வழங்கிட ஆணையிட்டுள்ளார். இதனால் தற்போது 55 சதவீதமாக உள்ள அக விலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டு 01.07.2025 முதல் 58 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.

ஆண்டுக்கு ரூ.1,829 கோடி கூடுதல் செலவு

இந்த அகவிலைப்படி உயர்வால் சுமார் 18 லட்சம் அரசு அலுவலர்கள் பயன்பெறுவார்கள். இந்த அகவிலைப்படி உயர்வால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,829 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்கரை ஆண்டு காலமாக கூறப்பட்டு வரும் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம், பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம், இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் என்ன ஆகின? தேர்தல் நெருங்கும் சூழலில், இத்தகைய அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளதா? என்று ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மத்தியில் குரல்கள் எழுந்து வருகின்றன.

Related Post

சூடான, சுவையான ‘பாப்கார்ன்’ உடல் எடை அதிகரிக்குமா? popcorn

Posted by - December 2, 2022 0
பாப்கார்ன்’ (popcorn)சாப்பிட, பெரியவர்கள்-சிறியவர்கள் என்ற வித்தியாசம் தேவையில்லை. பொரித்து, அவித்து, வறுத்து மக்காச்சோளம் சாப்பிடப்படுகிறது. சாதாரண ஒரு கோப்பை பொரித்த மக்காச்சோளத்தில் (பாப்கார்ன்) 31 கலோரி ஆற்றலே…

சூரி முதல் விஜயபாஸ்கர் வரை.. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் களமாடிய விஐபிக்களின் காளைகள்…!

Posted by - January 18, 2023 0
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் களமிறங்கிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சூரி உள்ளிட்டோரின் காளைகள் வெற்றிபெற்றன. உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிகட்டு இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது.…
Generated Image November 13 2025 10 04AM

இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்

Posted by - December 2, 2025 0
சென்னையில் கடந்த 24 மணி நேரமாக வெளுத்து வாங்கிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (02.12.2025) நள்ளிரவு எண்ணூர்-மாமல்லபுரம் இடையே சென்னைக்கு தெற்கே கரையை கடக்கும்…

டெய்லி ‘இத்தனை’ மணி நேரத்திற்கு மேல உட்கார்ந்து இருக்கீங்களா? அப்ப உங்களுக்கு இந்த ஆபத்து காத்திருக்கிறதாம்!

Posted by - October 18, 2023 0
இன்றைய நாளில் பெரும்பலான மக்கள் உட்கார்ந்த வாழ்க்கை முறையை கொண்டிருக்கிறார்கள். நீண்ட நேரம் உட்கார்ந்து செய்யும் வேலை மற்றும் வாழ்க்கை முறையால் ஆபத்தான சுகாதார நிலைகளை நீங்கள்…

ஊதுவத்தி கம்பெனியில் ரூ.10 கோடி பொருட்கள் நாசம்- வானில் இருந்து விழுந்த எரி கற்களால் தீ விபத்து

Posted by - April 19, 2023 0
வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம் ராமநாயக்கன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வாசு. இவர், தெக்குப்பட்டு பகுதியில் ஊதுவத்தி தொழிற்சாலை பெரிய அளவில் நடத்தி வருகிறார். இந்த தொழிற்சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *