asdfghnm e1777009634491

85%-ஐ கடந்த வாக்குப்பதிவு – ஸ்டாலின் Vs எடப்பாடி Vs விஜய் Vs சீமான் – CM வேட்பாளர்களின் நிலை என்ன?

119 0

Tamilnadu Assembly Election 2026 Vote Percentage: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளவர்களின், தொகுதிகளில் பதிவான வாக்குகளின் விவரங்களை இங்கே அறியலாம்.

Tamilnadu Assembly Election 2026 Vote Percentage: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் ஒட்டுமொத்தமாக சுமார் 85.15 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையத்தின் செயலியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் எந்த விதமான அசம்பாவிதங்களும் இன்றி, தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் நேற்று வாக்குப்பதிவு நடந்து முடிவடைந்துள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை பொதுமக்கள் தங்களது ஜனநாயக கடைமையை ஆற்றினர். 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்குள் வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். அதன் முடிவில் தமிழ்நாட்டில் உள்ள 5 கோடியே 73 லட்சம் வாக்காளர்களில் சுமார் 84.69 சதவிகிதம் பேர் வாக்களித்ததாக தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான ஆண் வாக்காளர்களில் 83.57 சதவிகிதம் பேரும், பெண் வாக்காளர்களில் 85.76 சதவிகிதம் பேரும், மூன்றாம் பாலினத்தவர்களில் 60.49 சதவிகிதம் பேரும் வாக்களித்துள்ளனர். அதேநேரம், ஆணையத்தின் அதிகாரப்பூர்வ செயலியில் தமிழ்நாட்டில் 85.15 சதவிகித வாக்குகள் பதிவானதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடைசி நேரத்தில் டோக்கன் வழங்கி வாக்களிக்க அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையால் இந்த சதவிகிதம் உயர்ந்து இருக்கும் என கூறப்படுகிறது.

 

மாவட்ட வாரியாக வாக்குப்பதிவு விவரம்

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ செயலியில் உள்ள தரவுகளின்படி, தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் பதிவாகியுள்ள வாக்குகளின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

  • அரியலூர் – 87.41%
  • செங்கல்பட்டு – 85.46%
  • சென்னை – 83.74%
  • கோவை – 84.76%
  • கடலூர் – 85.49%
  • தர்மபுரி – 90.13%
  • திண்டுக்கல் – 89.25%
  • ஈரோடு – 90.10%
  • கள்ளக்குறிச்சி – 88.50%
  • காஞ்சிபுரம் – 87.39%
  • கன்னியாகுமரி – 75.61%
  • கரூர் – 92.63%
  • கிருஷ்ணகிரி – 85.48%
  • மதுரை – 80.52%
  • மயிலாடுதுறை – 82.14%
  • நாகப்பட்டினம் – 86.30%
  • நாமக்கல் – 90.21%
  • பெரம்பலூர் – 85.50%
  • புதுக்கோட்டை – 83.90%
  • ராமநாதபுரம் – 77.01%
  • ராணிப்பேட்டை – 89.89%
  • சேலம் – 90.76%
  • சிவகங்கை – 76.66%
  • தென்காசி – 82.41%
  • தஞ்சாவூர் – 80.63%
  • நீலகிரி – 78.92%
  • தேனி – 81.55%
  • திருவள்ளூர் – 83.76%
  • திருவாரூர் – 83.69%
  • தூத்துக்குடி – 80.53%
  • திருச்சி – 85.44%
  • திருநெல்வேலி – 77.94%
  • திருப்பத்தூர் – 88.90%
  • திருப்பூர் – 88.59%
  • திருவண்ணாமலை – 89.66%
  • வேலூர் – 88.76%
  • விழுப்புரம் – 88.99%
  • விருதுநகர் – 84.82%

முதலமைச்சர்கள் தொகுதி எப்படி?

முதலமைச்சர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் 86.11 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் 89.73 சதவிகித வாக்குகளும், திருச்சி கிழக்கில் 81.77 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளன. எடப்பாடி பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் 92.09 சதவிகித வாக்குகளும், சீமான் போட்டியிடும் காரைக்குடி தொகுதியில் 74.33 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளன.

அதிக வாக்குப்பதிவு மாவட்டங்கள்:

தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 92.63 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. இதுபோக ஈரோடு, தர்மபுரி, சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் வாக்கு சதவிகிதம் 90 சதவிகிதத்தை கடந்துள்ளது. அதிக கல்வியறிவு கொண்ட மாவட்டமாக கருதப்படும் கன்னியாகுமரியில் குறைந்தபட்சமாக 75.61% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. தலைநகர் சென்னையில் ஒட்டுமொத்தமாக 83.74 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ செயலியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

கூட்டணிக் கட்சிகள் போர்க்கொடி; இபிஎஸ்-க்கு நெருக்கடி- அமித்ஷா பக்கா ஸ்கெட்ச்!

Posted by - July 24, 2025 0
கூட்டணிக் கட்சிகளுக்குள் இருந்தே இபிஎஸ்-க்கு தொடர்ந்து அழுத்தம் வருவதால் அவர் என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 2026-ல் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிதான்…

ராமதாஸ் மிரட்டல்? பாமக-வில் வெடிக்கும் உட்கட்சி மோதல்!

Posted by - July 25, 2025 0
Anbumani Walking Rally: “அன்புமணி நடைபயணத்திற்கு எதிராக ராமதாஸ் மிரட்டுவதாக அன்புமணி ஆதவாளர்கள் புகார்” பாமகவில் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ஆகிய இருவருக்கும் மோதல்…
s 2

நடிகைகள் என்ன உங்க சொத்தா.. நயன்தாரா விவகாரத்தில் கொந்தளித்த நடிகை குஷ்பு

Posted by - March 18, 2026 0
சமீப காலமாக அரசியல் பிரபலங்கள் பலரும் சினிமா நடிகைகளின் பெயர்களை குறிப்பிட்டு கொச்சையாக பேசுவது அதிகரித்து வருகிறது. விஜய் த்ரிஷா வீட்டை விட்டு வெளியில் வர வேண்டும்…
Generated Image November 03 2025 10 32AM

எனக்கு வெட்கமாக இருக்கிறது; பதவியை துறக்க விரும்புகிறேன்: நேரு முன்னிலையில் திமுக மாவட்டச் செயலாளர் குமுறல்

Posted by - November 3, 2025 0
திமுகவின் திருச்சி மத்திய மாவட்டச் செயலாளராக க.வைரமணி பதவி வகிக்கிறார். திமுக முதன்மைச் செயலாளரும், மூத்த அமைச்சருமான கே.என்.நேருவின் தீவிர ஆதரவாளரான இவருக்கு, அமைச்சரின் சொந்த தொகுதியான…

‘காங்கிரஸ் – த.வெ.க கூட்டணிக்கு அச்சாரம்’ ராகுலை சந்திக்கும் விஜய்..?

Posted by - July 21, 2025 0
’விக்கிரவாண்டியில் நடைபெற்ற விஜயின் முதல் மாநாட்டிலேயே ராகுல்காந்தியை பங்கேற்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன’ அரசியலில் எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். இந்த கட்சி, அந்த கட்சியோடுதான்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *