Pixeladmin

“தவெக பிரச்சாரத்துக்கு முட்டுக்கட்டை போடுவது பாசிச தாக்குதல்” – விஜய் ஆவேசம்

Posted by - March 27, 2026
சென்னை: “நம்முடைய தேர்தல் பரப்புரை நிகழ்வுக்கு ஒரு நாளுக்கு முன்பு சென்னை மாநகராட்சி சார்பில் திடீரென அந்த இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டு, இரும்பால் ஆன தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த திடீர் பள்ளங்களும் தடுப்புகளும் எங்கிருந்து வந்தன?” என தவெக தலைவர் விஜய் கேள்வி…
Read More

திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பிடிக்கும் பிரமாண்ட அறிவிப்பு!!! எகிறும் எதிர்பார்ப்பு

Posted by - March 27, 2026
திருச்சி இரண்டாவது தலைநகரமாக மாற்றும் அறிவிப்பு திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாக தகவல். திருச்சி: திமுகவின் தேர்தல் அறிக்கையில் திருச்சியை 2வது தலைநகராக்கும் அல்லது துணை தலைநகராக மாற்றும் அறிவிப்பு இடம் பெறுமா என்ற எதிர்பார்ப்பு எகிற ஆரம்பித்துள்ளது. 2026 தமிழ்நாடு சட்டமன்றப்…
Read More

மீண்டும் அமலுக்கு வரும் ஊரடங்கு?

Posted by - March 26, 2026
மேற்காசிய போர் காரணமாக பெட்ரோல், டீசல், எரிபொருள் தட்டுப்பாடு போன்ற தகவல்கள் பரவிய நிலையில், அடுத்த சில நாட்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் பரவி வருகிறது. மேற்காசிய போர் காரணமாக இந்தியாவில் ஏற்படும் அசாதாரண சூழலை கையாளும்…
Read More

பாஜகவில் களம் இறங்கும் 27 வேட்பாளர்கள் யார்.? அண்ணாமலைக்கு இடம் இருக்கா.? உத்தேச பட்டியல் இதோ…

Posted by - March 26, 2026
அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அந்த தொகுதிகளில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. தொகுதி பங்கீட்டை முடித்த அதிமுக தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 27 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தல் பணிகளை அரசியல்…
Read More

திமுக கைக்கூலி’’ கொதித்தெழுந்த விஜய்!

Posted by - March 26, 2026
தவெக பெண் ரசிகைகளை விபச்சாரி என்று விமர்சித்த அரசியல் ஆலோசகர் பொன்ராஜை கடுமையாகச் சாடியுள்ளார் தவெக விஜய். த.வெ.க.வைச் சீண்டுவதாக நினைத்து, ஒட்டுமொத்தப் பெண்களையும் அவமதிப்பதா என்று அக்கட்சியின் தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார். தி.மு.க.வின் ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் கைக்கூலி ஒருவர் வாய்க்கு வந்தபடி விமர்சித்துள்ளதாகவும் அவர் சாடி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ’’இந்த மண்ணின் பெருமைக்கும் போற்றுதலுக்கும் உரிய என் அம்மா, அக்கா, தங்கைகளைத் தரக்குறைவான, சொல்லொணா வார்த்தையால் தி.மு.க.வின் ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் கைக்கூலி ஒருவர் வாய்க்கு வந்தபடி விமர்சித்திருக்கிறார். ஆதாய சூதாடிகள் தி.மு.க. தலைமையின் அரவணைப்பிலும் ஆதரவிலும் செயல்படும் இத்தகைய ஆதாய சூதாடிகளுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.இதுபோன்ற நபர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தி.மு.க. அரசையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். த.வெ.க.வைச் சீண்டுவதாக நினைத்து, ஒட்டுமொத்தப் பெண்களையும் அவமதிக்கும் இச்செயலால், வருகின்ற தேர்தலில் தாய்க்குலத்தின் ஏகோபித்த முடிவால் தீய சக்தி தி.மு.க. மண்ணைக் கவ்வப் போவது உறுதி உறுதி உறுதி’’…
Read More

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு.! மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்

Posted by - March 26, 2026
தமிழகத்தில் வருகிற மார்ச் 31ஆம் தேதி டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மீறி மதுபான கடைகள் மற்றும் பார்களை திறந்தால் கடும் நவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை தமிழகத்தில் மதுபானம் விற்பனை மூலம் தினந்தோறும் பல நூறு கோடி ரூபாய் அரசுக்கு…
Read More

தலைவர்களுக்கே கல்தா? நயினார், வானதி, அண்ணாமலை, எல்.முருகன் தொகுதிகள் பாஜகவுக்கு இல்லை- இதான் காரணம்

Posted by - March 25, 2026
 கடந்த சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக தலைவர்கள் போட்டியிட்ட தொகுதிகள் எவையும் இந்த முறை பாஜகவுக்கு ஒதுக்கப்படவில்லை. அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக போட்டியிடும் தொகுதிகளின் விவரத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். இதில் கடந்த தேர்தல்களில் பாஜக தலைவர்கள்…
Read More

ஊடகவியாலாளர் மீது தாக்குதல் : அண்ணாமலை கண்டனம்

Posted by - March 24, 2026
நியூஸ் தமிழ் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் ஊடகவியலாளர் மீதான தாக்குதலுக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சிவகங்கையில் நடைபெற்ற நியூஸ் தமிழ் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில், விவாத ஒருங்கிணைப்பாளரான…
Read More

அமெரிக்காவுடன் சுமுக பேச்சா? – ஈரான் மறுப்பு

Posted by - March 24, 2026
அமெரிக்கா – ஈரான் இடையே ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக டிரம்ப் அறிவித்த உடனேயே, பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை என ஈரான் மறுத்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய போர், நான்கு வாரங்களுக்கு மேலாக நீடித்து வருகிறது.…
Read More

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை; 9 காவலர்களும் குற்றவாளிகள்; வழக்கில் நீதிபதி அதிரடி தீர்ப்பு

Posted by - March 23, 2026
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில், உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி, 9 காவலர்களும் குற்றவாளிகள் என அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளார். சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கொலை வழக்கில், உயர்நீதிமன்ற மேற்பார்வையில், மதுரை அமர்வு நீதிமன்றம்…
Read More