அஜித் அவசரமாக சென்னை வந்தாரா .. என்ன ஆச்சு ஷாலினிக்கு..?

163 0

 ஆப்ரேஷன் கவுனில் நடிகர் அஜித்தின் கைகளை பிடித்துக்கொண்டு ஷாலினி எடுத்துள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

அஜித் காதல் மனைவி ஷாலினி மருத்துவமனையில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக இருந்து பிரபல நடிகர் அஜித் குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் நடிகை ஷாலினி. இந்த தம்பதிக்கு தற்போது ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். ஆண்டுகள் பல கடந்து இன்றும் காதல் குறையாது இளம் தம்பதிகளாக வலம் வருகின்றனர் ஷாலினி அஜித். அதிக ரசிகர்களை கொண்ட நட்சத்திர தம்பதிகளில் இவர்களும் முக்கியமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் Good Bad Ugly படத்தில் நடித்து வருகிறார். Good Bad Ugly படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்ள சில நாட்களுக்கு முன் அஜர்பைஜான் பறந்தார் அஜித். ஆனால் நேற்று அவர் அஜர்பைஜானில் இருந்து சென்னை திரும்பினார், சென்னை திரும்பிய அஜித்தின் புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஷாலினியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மருத்துவமனையில் ஆப்ரேஷன் கவுனில் நடிகர் அஜித்தின் கைகளை பிடித்துக்கொண்டு ஷாலினி எடுத்துள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. ஷாலினிக்கு சென்னை மருத்துவமனையில் சிறிய அறுவை சிகிச்சை நடந்துள்ளதாகவும், தற்போது அவர் நலமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.மேலும், மனைவியை கவனித்து கொள்வதற்காக அஜர்பைஜானில் இருந்து அஜித் சென்னை வந்ததாகவும், ஷாலினி குணமடைந்ததும், மீண்டும் நடிகர் அஜித் அஜர்பைஜானில் விடாமுயற்சி படப்பிடிப்பில் கலந்துகொள்ளவர் என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. ஷாலினியின் போட்டோவுக்கு ரசிகர்கள் பலரும் Get Well Soon  என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Related Post

ரூ. 600 கோடி பட்ஜெட் படத்தின் ஹீரோவுடன் இணையும் லோகேஷ் கனகராஜ்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

Posted by - June 27, 2023 0
லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் “மாநகரம்” திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர். அதன் பின் “கைதி” படத்திற்கு மக்கள்…

4 நாளில் பட்டய கிளப்பும் வசூலில் உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன்- மொத்த வசூல் இத்தனை கோடியா?

Posted by - July 3, 2023 0
மாமன்னன் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளியான திரைப்படம் மாமன்னன். இதில் ரசிகர்கள் அனைவரும் வியந்து பார்த்தது வடிவேலு அவர்களின் நடிப்பை…

ஜிவி பிரகாஷுடன் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்.. வைரலாகும் மோஷன் போஸ்டர்

Posted by - May 5, 2023 0
இசையமைப்பாளர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட ஜிவி பிரகாஷ் குமாருடன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் முறையாக இணைந்துள்ளார். இப்படத்தை ‘செத்தும் ஆயிரம் பொன்’ படத்தின் இயக்குனர்…

அரசரின் பெயர் உயர்ந்து நிற்கிறது.. பார்வையாளர்களை ஈர்க்கும் கங்குவா கிளிம்ப்ஸ்

Posted by - July 24, 2023 0
இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் திரைப்படம் ‘கங்குவா’. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட்…

நடிகர் ரஜினிகாந்துடன் சிவகார்த்திகேயனை ஒப்பிட்ட பிரபலங்கள்- என்ன விஷயம் தெரியுமா?

Posted by - July 3, 2023 0
மாவீரன் திரைப்படம் பிரின்ஸ் படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாகப்போகும் திரைப்படம் மாவீரன். மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஷ்வின் இயக்கியுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *