மீள முடியாத துயரத்தில் லைக்கா.. இந்தியன் 2 ஓடிடி ரிலீசில் நெட்பிலிக்ஸ் செய்த சம்பவம்…

164 0

மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்த இந்தியன் 2 படம் கடைசியில் மண்ணை கவ்வியது. ஜூலை 12 இந்த படம் ரிலீசானது. கிட்டத்தட்ட 2400 காட்சிகள் முதல் நாளில் திரையிடப்பட்டது. அதோடு இந்த படத்தின் வசூல் வேட்டையும் நிறைவு பெற்றது.

எல்லா பக்கமும் இந்த படம் நல்லா இல்லை என்ற எதிர்வலைகள் கிளம்பியது. முதல் நாளில் மட்டும் இந்த படம் நான்கு கோடிகள் வசூல் செய்தது. அதன் பின் மொத்தமாய் சரிவை சந்தித்தது. பலபேர் கமல் மற்றும் சங்கர் என்னும் பிரம்மாண்ட கூட்டணியை நம்பி ஏமாற்றம் அடைந்தார்கள்.

தியேட்டர் விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் என எல்லோருக்கும் இந்த படத்தால் பெரும் நஷ்டம் தான்.இந்த படத்தின் பட்ஜெட் மேற்படி செலவுகள் என 300 கோடிகளுக்கு மேல் லைக்கா செலவழித்து விட்டது. ஆனால் இந்தியன் 2 வசூலித்த தொகை வெறும் 83 கோடிகள் மட்டும் தான். இதனால் கடும் அப்செட்டில் இருக்கிறது லைக்கா.

இந்தியன் 2 ஓடிடி ரிலீசில் நெட்பிலிக்ஸ்…

இந்தப் படத்தை நம்பி நெட்பிலிக்ஸ் நிறுவனம் 125 கோடிகள் கொடுத்து ஓ டி டி உரிமையை வாங்கியுள்ளது. ஆனால் ரிலீசுக்கு பின்னர் வந்த நெருக்கடியால் வெறும் 65 கோடிகள் மட்டுமே கொடுத்துள்ளது. இதனை எதிர்த்து லைக்கா பேச முடியாத சூழ்நிலையில் மாட்டிக்கொண்டுள்ளது.

படம் தியேட்டரில் ரிலீஸ் ஆன மூன்றாவது நாளில் ஓ டி டி நிறுவனங்களுக்கு தயாரிப்பாளர் தரப்பிலிருந்து படத்தின் கன்டன்ட்டை கொடுக்க வேண்டுமாம். ஆனால் லைக்கா தரப்பிலிருந்து நெட்பிலிக்ஸ்க்கு எந்த ஒரு கண்டன்டும் கொடுக்கவில்லையாம்.

மொத்தமாய் எல்லாத்தையும் சொல்லித்தான் அக்ரிமெண்ட் போட்டுள்ளனர். இதனால் பாதிக்கு பாதி விலையை குறைத்து லைக்காவிற்கு கடும் நெருக்கடியை கொடுத்துள்ளது நெட்பிலிக்ஸ் நிறுவனம். மொத்தத்தில் இந்தியன் 2வை நம்பி அனைவரும் நஷ்டம் அடைந்துள்ளனர்.

Related Post

இயக்குனர் மிஸ்கினுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்.. நடிகர் விஜய் ரசிகர்கள் செய்த மோசமான விஷயம்

Posted by - September 16, 2023 0
இயக்குனர் மிஸ்கின் தற்போது தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் இவர் வில்லனாக நடித்த மாவீரன் படம் வெளிவந்தது.   இதை தொடர்ந்து அடுத்ததாக லியோ திரைப்படத்தில் ஒரு…

பிக்பாஸ் பிறகு பிரதீப்புக்கு கிடைத்த மரியாதை…..

Posted by - February 6, 2024 0
பிக்பாஸ் 7 விஜய் தொலைக்காட்சியில் படு மாஸாக நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஒன்று பிக்பாஸ் 7. 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் ஏகப்பட்ட மாற்றங்கள், புதிய விஷயங்கள் நடந்தன. வைல்ட்…

முடிவுக்கு வரும் முக்கியமான 3 சீரியல்கள்.. அண்ணன் தங்கை பாசத்திற்கு பூசணிக்காய் உடைத்த இயக்குனர்

Posted by - August 17, 2024 0
சின்னத்திரை மூலம் மெகா தொடராக ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து சீரியலுக்கு முக்கியத்துவம் கொடுத்து மக்கள்…

சிங்கப்பூர் சலூன் ரசிகர்கள் பார்வை…

Posted by - January 25, 2024 0
கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள சிங்கப்பூர் சலூன் திரைப்படம் இன்று வெளிவந்துள்ளது. வேல்ஸ் நிறுவனம் ஐசரி கே. கணேஷ் இப்படத்தை தயாரிக்க சத்யராஜ், லால்,…

விரைவில் முடிவுக்கு வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்?

Posted by - September 14, 2023 0
சீரியலில் எல்லா பிரச்சனைகளும் முடிவுக்கு வந்துள்ளன. ஆகவே விரைவில் முடிவுக்கு வரலாம் என்கின்றன சின்னத்திரை வட்டாரங்கள். சீரியல் இந்த மாதம் இறுதியில் முடிவடையவிருப்பதாக தகவல்கள் உலா வருகின்றன.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *