நீங்கள் வாங்கும் பனீர் சுத்தமானதா இல்லை கலப்படமானதா.? எளிதாக கண்டறிய உதவும் டிப்ஸ்!

143 0

போலி பனீர் இந்தியாவில் விற்கப்படுவதை சமீபத்திய ஆய்வுகள் அடையாளம் கண்டுள்ளன. அதிர்ஷ்டவசமாக, போலி வகைகளில் இருந்து உண்மையான பனீரை வேறுபடுத்த எளிய மற்றும் பயனுள்ள முறைகள் உள்ளன. இதுகுறித்து மருத்துவ ஊட்டச்சத்து நிபுணர் ஷைல்ஜா ஷர்மைன் கூறிய வழிகாட்டுதல்கள் குறித்து இங்கு காண்போம்.,

பனீர் என்பது பாலில் இருந்து தயார் செய்யப்படும் ஒரு உணவு பொருளாகும். பனீர் புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் சிறந்த மூலமாகும். இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனை அடிக்கடி சாப்பிடுவது நல்லது. ஆனால் தற்போது போலி பனீர் விற்பனைக்கு வந்துள்ளதால் இது பல்வேறு உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

போலி பனீர் இந்தியாவில் விற்கப்படுவதை சமீபத்திய ஆய்வுகள் அடையாளம் கண்டுள்ளன. அதிர்ஷ்டவசமாக, போலி வகைகளில் இருந்து உண்மையான பனீரை வேறுபடுத்த எளிய மற்றும் பயனுள்ள முறைகள் உள்ளன. இதுகுறித்து மருத்துவ ஊட்டச்சத்து நிபுணர் ஷைல்ஜா ஷர்மைன் கூறிய வழிகாட்டுதல்கள் குறித்து இங்கு காண்போம்.,

வீட்டில் போலியான ‘பனீர்’ சோதனை செய்வது எப்படி?

  1. அயோடின் சோதனை : முதலில் நீங்கள் வாங்கி வைத்துள்ள பனீரை வேக வைத்து எடுத்து கொள்ளவும். இதனுடன் சிறிதளவு அயோடினை சேர்க்க வேண்டும். இப்போது பனீர் நீலமாக மாறினால், அது செயற்கையாக இருக்கலாம். உண்மையான பனீர் அதன் அசல் நிறத்தைத் தக்க வைத்துக் கொள்ளும். எனவே நிறம் மாறாமல் வெள்ளையாகவே இருந்தால் அது இயற்கையான முறையில் சுத்தமாக தயார் செய்யப்பட்டதாகும்.
  2. தால் டெஸ்ட் : தால் டெஸ்ட் என்பது பருப்பை கொண்டு செய்யப்படும் சோதனை ஆகும். இதற்கு வேகவைத்த பனீரை எடுத்து தண்ணீர் ஊற்றி குளிர்விக்க வேண்டும். இதனுடன் துவரம் பருப்பை சேர்த்து கொள்ளுங்கள். சுமார் 10 நிமிடங்களுக்குப் பிறகு, தண்ணீர் வெளிர் சிவப்பு நிறமாக மாறினால், அது போலியானது. எந்த நிற மாற்றமும் இல்லையென்றால் பனீர் தூய்மையானது என்று அர்த்தம்.
  3. மென்மையை கண்டறியுங்கள் : உண்மையான பனீரை தொட்டு பார்த்தல் மென்மையாக இருக்கும். செயற்கை முறையில் தயாரித்த பனீர் என்றால் அது ரப்பர் போன்று காணப்படும். இதன் மூலம் நாம் போலியானதை உடனடியாக கண்டறியலாம். மேலும் இயற்கையான முறையில் தயார் செய்யப்பட்ட பனீர் உதிர்த்தால் உதிரிஉதிரியாக இருக்கும்.
  4. வாசனை சோதனை : உண்மையான பனீரில் லேசான பால் வாசனை இருக்கும், அதே சமயம் போலி பனீரில் ரசாயன வாசனை இருக்கலாம்.
  5. சுவை சோதனை : உண்மையான பனீர் ஒரு சுத்தமான பால் போன்ற சுவையை வழங்குகிறது, செயற்கை முறையில் தாயார் செய்யப்பட்ட பனீர் பால் சுவை இன்றி காணப்படும். மேலும் சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டிருந்தாலும் எளிதாக கண்டறிய முடியும்.
  6. ஈரப்பதம் சோதனை : உண்மையான பனீர் அழுத்தும் போது லேசான ஈரப்பதத்துடன் இருக்கும். இது பெரும்பாலும் போலி தயாரிப்புகளில் இருக்காது.
  7. சமையல் சோதனை : உண்மையான பனீர் சமைக்கும் போது பழுப்பு நிறமாகி அதன் வடிவத்தை பராமரிக்கிறது, அதே நேரத்தில் போலி பனீர் ரப்பர் போல மாறிவிடும்.செயற்கை பனீர் மிகவும் ஆபத்தானது. இதனை அடிக்கடி சாப்பிடுவதால் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் குமட்டல் போன்ற உடனடி அறிகுறிகளை ஏற்படுத்தும். போலி பனீரில் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் இருப்பதால் கல்லீரல் மற்றும் சிறுநீரக செயல்பாட்டை பாதிக்கலாம்.

Related Post

முதல் சீசனில் டி.என்.ஏ டெஸ்ட்… இதுல என்னவா இருக்கும்? பாரதி கண்ணம்மா 2 சீரியல் புது அப்டேட்!

Posted by - February 6, 2023 0
பாரதியாக புதிதாக களம் இறங்குகிறார் சிபு சூர்யன். ரோஜா சீரியலில் அர்ஜுன் சாராக இவர் செய்த சாகசங்களை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். சின்னத்திரை ரசிகர்களின் பேச்செல்லாம் பாரதி…

என்னது சக்தி இறந்துவிட்டாரா, போலீசிடம் சிக்கும் ஜனனி.. பரபரப்பான எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ

Posted by - November 28, 2025 0
எதிர்நீச்சல் தொடர்கிறது எதிர்நீச்சல் தொடர்கிறது, சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் விறுவிறுப்பின் உச்சமாக ஒளிபரப்பாகும் சீரியல். கதையில் குணசேகரன் செம கிரிமினல் பிளான் போட்டு சக்தியை கடத்த…

பிக் பாஸ் வீட்டுக்குள்ள பல லட்சத்துடன் பணப்பெட்டி வந்துருச்சு.. எடுத்துக்கொண்ட வெளியேற போகும் நபர் இவரா

Posted by - January 2, 2024 0
பிக் பாஸில் இந்த வாரம் கடந்த எப்படி டிக்கெட் டு பினாலே விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்றதோ, அதே அளவிற்கு விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாதது தான் இந்த…

பொங்கலுக்கு இத்தனை படங்களா வருது? பெரிய லிஸ்ட்டா இருக்கே!

Posted by - January 10, 2025 0
பொங்கலுக்கு இத்தனை படங்களா வருது? பெரிய லிஸ்ட்டா இருக்கே!இந்த பொங்கல் பண்டிகைக்கு என்னென்ன படங்கள் வருதுன்னு தெரிஞ்சுக்க ரசிகர்கள் ஆர்வமா இருப்பாங்க. அவங்க எதிர்பார்ப்புக்கு ஏத்த மாதிரி…

பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் யார் வெளியேறுகிறார் தெரியுமா.. இவர் தானா

Posted by - December 13, 2024 0
பிக் பாஸ் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 8வது சீசன் விறுவிறுப்பின் உச்சமாக ஒவ்வொரு நாளும் சென்று கொண்டிருக்கிறது. கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் சாச்சனா…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *