சென்னையில் வீடுகளுக்கு முன் நோ பார்க்கிங் போர்டு வைத்ததால் நடவடிக்கை – நீதிமன்றம் உத்தரவு

189 0

சென்னை நகரில் வீடுகளின் முன் அனுமதியின்றி ‘நோ பார்க்கிங்’ போர்டுகள் மற்றும் தடுப்புகளை வைத்திருப்பவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை நகரில் வீடுகளின் முன் அனுமதியின்றி ‘நோ பார்க்கிங்’ போர்டுகள் மற்றும் தடுப்புகளை வைத்திருப்பவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னையில் அடையாறு, தியாகராய நகர், மயிலாப்பூர், மந்தைவெளி, மாம்பலம், அசோக் நகர் போன்ற பகுதிகளில் குடியிருப்பு வாசிகள், தங்கள் வீடுகளின் முன் அனுமதியின்றி ‘நோ பார்க்கிங்’ போர்டுகளை வைத்துள்ளதாக கூறி, நந்தகுமார் என்பவர் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.பொது சாலைகளில் வாகனங்களை நிறுத்துவதை தடுக்கும் வகையில் அனுமதியின்றி ‘நோ பார்க்கிங்’ போர்டுகளை வைப்பதுடன், பூந்தொட்டிகளையும் வைத்துள்ளதாகவும், இதுகுறித்து தகவல் உரிமை சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்ட போது, இதுபோல போர்டுகள் வைக்க எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என போக்குவரத்து காவல் துறையும், சென்னை மாநகராட்சியும் பதிலளித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.மேலும், அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள இந்த போர்டுகளையும், பூந்தொட்டிகளையும் அகற்ற உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வு, இந்த போர்டுகளை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்த அறிக்கையை தாக்கல் செய்யும்படி போக்குவரத்து காவல் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளிவைத்திருந்தது.

இந்த நிலையில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் ஆஜராகி, பொது இடங்களில் சட்டவிரோதமாக அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அனைத்து நோ பார்க்கிங் போர்டுகள், நோ பார்க்கிங் தடுப்புகளை அகற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டினார்.தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் முன் அனுமதியின்றி ‘நோ பார்க்கிங்’ போர்டுகள் மற்றும் தடுப்புகளை வைத்திருப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.மேலும் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் இதுகுறித்தான விதிமுறைகளை இணையதளத்தில் வெளியிட வேண்டும். பத்திரிகை, ஊடகங்களிலும் பிரசுரிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

Related Post

மக்களுக்கு அடிப்படை வசதிகளை கூட செய்து கொடுக்காமல் இருப்பது என்ன மாதிரியான மாடல்? -அண்ணாமலை கேள்வி!

Posted by - April 10, 2024 0
தமிழகத்தின் மலைக் கிராமங்களில் உள்ள மக்களுக்கு இன்னும் கூட சாலை வசதிகள் கிடைக்காமல் இருப்பதே, இத்தனை ஆண்டுகளாகத் தமிழகத்தில் நடந்த ஆட்சிகளின் அவல நிலைக்குச் சான்று என…

பாதியில் வெளிநடப்பு.. அவையில் சலசலப்பு.. கடந்தாண்டு ஆளுநர் உரையை மறக்க முடியுமா?

Posted by - February 12, 2024 0
தனக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டதால், தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்பாகவே அவையில் இருந்து ஆளுநர் புறப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாடு அரசு மற்றும் ஆளுநர் இடையே…

ஜிப்மரில் கணைய புற்று நோய்க்கு ‘ரோபோடிக்’ அறுவை சிகிச்சை- சிறு துவாரமிட்டு 10 மணி நேரம் செய்து சாதனை

Posted by - August 12, 2023 0
புதுச்சேரி: புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் வயிற்று வலி காரணமாக 38 வயது பெண் அனுமதிக்கப்பட்டார். சி.டி.ஸ்கேன் பரிசோதனையில் அவருக்கு கணைய புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. மேலும் அந்த…

தென் தமிழகத்தில் இடி, மின்னலுடன் வெளுக்கப்போகும் கோடை மழை..

Posted by - April 30, 2024 0
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில்  இடி மின்னலுடன் கூடிய லேசானது…

உலகுக்கே வழிகாட்டிய தமிழ்நாடு; ’’இங்குதான் இரும்பின் காலம் தொடங்கியது’’ பெருமிதத்துடன் அறிவித்த முதல்வர் ஸ்டாலின்

Posted by - January 23, 2025 0
தமிழ் நிலப்பரப்பில்தான் இரும்பின் காலம் தொடங்கியது என்ற ஆய்வுப் பிரகடனத்தை அறிவிப்பதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதத்துடன் அறிவித்துள்ளார். இந்தியத் துணைக் கண்ட வரலாற்றின் கண்ணோட்டத்தை மாற்றி அமைக்கும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *