பொங்கலுக்கு இத்தனை படங்களா வருது? பெரிய லிஸ்ட்டா இருக்கே!

232 0

பொங்கலுக்கு இத்தனை படங்களா வருது? பெரிய லிஸ்ட்டா இருக்கே!இந்த பொங்கல் பண்டிகைக்கு என்னென்ன படங்கள் வருதுன்னு தெரிஞ்சுக்க ரசிகர்கள் ஆர்வமா இருப்பாங்க. அவங்க எதிர்பார்ப்புக்கு ஏத்த மாதிரி ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்கு. எந்த படத்த பாக்குறதுன்னு திண்டாட போறாங்க

பொதுமக்களோட பண்டிகை கொண்டாட்டங்கள்ல திரைப்படங்களுக்கும் முக்கியமான பங்கு இருக்கும். ஆடைகள் வாங்குறது, ஸ்பெஷலா சமைக்கறதுன்னு ஒருபக்கம் திட்டங்கள போடுற அதே சமயம், அவங்களுக்கு பிடிச்ச ஸ்டார்களோட படங்கள பாக்குறதுக்கும் பிளான் பண்ணிடுவாங்க. அந்த வகைல இந்த வருஷம், ரசிகர்கள ஏமாத்தாம, ஒரு பெரிய பட லிஸ்ட்டே இருக்கு.

விலகிய ‘விடாமுயற்சி’.. அஜித் ரசிகர்கள் ஏமாற்றம்!

2025-ம் வருஷம் பொங்கல் பண்டிகைக்கு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம்னா, அது அஜித் நடிப்புல உருவாகியிருக்கற விடாமுயற்சி திரைப்படம்தான். லைகாவோட பிரமாண்ட தயாரிப்புல, மகிழ் திருமேணி இயக்கத்துல, பெரும் எதிர்பார்ப்புல இருந்த இந்த படம், பொங்கலுக்கு வெளியாகும்னு அறிவிக்கப்பட்டிருந்துச்சு. ஆனா, சில காரணங்களால பொங்கல் ரேஸ்ல இருந்து விலகுறதா படக்குழு அறிவிச்சுருக்கு. அதனால, அஜித் ரசிகர்கள் ரொம்பவே ஏமாற்றமடைஞ்சுட்டாங்க. விடாமுயற்சி ஜனவரி மாத இறுதில வெளியாகும்னு எதிர்பார்க்கப்படுது.

லைகா அறிவிப்பால் வரிசை கட்டிய திரைப்படங்கள்

பொங்கல் பண்டிகைக்கு விடாமுயற்சி வெளியாகாது என்ற அறிவிப்பு வந்ததும், ஏராளமான படங்கள் தற்போது ரிலீசுக்கு வரிசை கட்டியுள்ளன. அந்த பட்டியல் இதோ…

  • கேம் சேஞ்சர் (தெலுங்கு/தமிழ்)
  • வணங்கான்
  • படை தலைவன்
  • மெட்ராஸ்காரன்
  • மதகஜராஜா
  • காதலிக்க நேரமில்லை
  • Ten Hours
  • நேசிப்பாயா
  • தருணம்

இதுல, ஜனவரி 10-ம் தேதி, மிகப்பெரிய எதிர்பார்போட, பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்துல, ராம்சரண் நடிப்புல, தெலுங்குல உருவாகியிருக்கற கேம் சேஞ்சர் படம் தமிழ்லயும் வெளியாகுது. அதே நாள்ல, பாலா இயக்கத்துல, அருண்விஜய் நடிப்புல உருவாகியிருக்கற வணங்கான் படமும் ரிலீஸ் ஆகுது. அதே 10-ம் தேதி, மறைந்த கேப்டன் விஜயகாந்த்தோட மகன் விஜய பிரபாகரன் நடிப்புல உருவாகியிருக்கற படை தலைவன் படமும் வெளியாகுது. இந்த படத்த அன்பு இயக்கி இருக்காரு. இந்த படங்களோட போட்டி போட, வாலி மோகன் தாஸ் இயக்கத்துல, கலையரசன் உள்ளிட்டவங்க நடிச்சுருக்கற மெட்ராஸ்காரன் படமும் வெளியாகுது.

ஜனவரி 12-ம் தேதி, சுந்தர். சி இயக்கத்துல, விஷால் நடிச்சு ரொம்ப நாளா கிடப்புல போடப்பட்ட மதகஜராஜா படம் வெளியாகுது.  பல வருஷங்கள் தாமதமா வெளியாகுற இந்த படத்துக்கு, ரசிகர்கள் மத்தில ஒரு சின்ன எதிர்பார்ப்பு இருக்கு.

ஜனவரி 14-ம் தேதி, கிருத்திகா உதயநிதி இயக்கத்துல, ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்புல உருவாகியிருக்கற காதலிக்க நேரமில்லை திரைப்படம் வெளியாகுது. காதல் படமான இந்த படத்துக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கு. அதே நாள்ல, விஷணுவர்தன் இயக்கத்துல, நடிகர் முரளியோட இளைய மகன் ஆகாஷ் முரளி அறிமுகமாகுற நேசிப்பாயா படம் வெளியாகுது. இதுவும் ஒரு காதல் கதையா உருவாகியிருக்கு. இதோட, அரவிந்த் சீனிவாசன் இயக்கத்துல உருவாகியிருக்கற தருணம் படமும் வெளியாகுது.

மொத்தத்துல, இந்த லிஸ்ட்ட பார்க்கும்போது, இந்த பொங்கல் பண்டிகை, எந்த படத்த பாக்குறதுன்னு திரைப்பட ரசிகர்கள நிச்சயம் திக்குமுக்காட வச்சுடும்ங்கறதுல எந்த சந்தேகமும் இல்ல.

Related Post

இனி இவர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

Posted by - March 16, 2024 0
அரசுப் பள்ளிகள் மட்டுமின்றி அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பள்ளிப்படிப்பை முடித்து, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகளுக்கும்  மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் வகையில் புதிய…

“புதுக்கோட்டையில் கனிமவள கொள்ளைக்கு எதிராக புகார் அளித்தவர் காட்டிக் கொடுக்கப்பட்டார்” – எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு

Posted by - January 20, 2025 0
கனிமவளக் கொள்ளையர்கள் மட்டுமின்றி, அவர் கொடுத்த புகார்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி, வலியுறுத்தியுள்ளார். புதுக்கோட்டையில்…

லியோ படத்தில் கொக்கி குமார்.. எல்சியூ-வில் இணைகிறார் தனுஷ்?

Posted by - July 5, 2023 0
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத்,…

Jananayagan: ”எத்தனை தடை வந்தாலும் பிளாஸ்ட்.. தளபதிக்கு இந்த பாட்டு” வெளியானது ஜனநாயகன் முதல் சிங்கிள்

Posted by - November 8, 2025 0
எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்துள்ள திரைப்படம் ‘ஜனநாயகன்’. இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில்…

ஒன்றரை வருடம் படுத்த படுக்கையாக இருந்தேன்.. உருக்கமாக பேசிய நடிகர் அரவிந்த் சாமி

Posted by - February 2, 2026 0
அரவிந்த் சாமி அரவிந்த் சாமி சாக்லேட் பாயாக சினிமாவில் அறிமுகமாகி பல ஹிட் படங்களை கொடுத்துவிட்டு சில ஆண்டுகள் சினிமாவிலிருந்து விலகி இருந்தார் அரவிந்த் சாமி. இதன்பின்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *