இன்று பிறந்த நாள்… மோடிக்கு குவியும் வாழ்த்துக்கள்; பா.ஜ., தொண்டர்கள் கொண்டாட்டம்!

234 0

புதுடில்லி: இன்று 74வது பிறந்த நாள் கொண்டாடும் பிரதமர் மோடிக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு, அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் உள்ளிட்ட அனைவரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

பிறந்த நாள்


பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று பிறந்த நாள். நாடு முழுவதிலும் பா.ஜ., தொண்டர்கள் அவரது பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடி மகிழ்கின்றனர். இதை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்களும் அவருக்கு வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.

வாழ்த்துகள்


ஜனாதிபதி திரவுபதி முர்மு தன் சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘உங்கள் மிகச்சிறந்த தலைமைப்பண்பின் மூலம் நாட்டின் வளத்தையும், கவுரவத்தையும் மேம்படுத்தியுள்ளீர்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் பிரபலமான பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள் என்று கூறி உள்ளார். அவர் தனது பதிவில் கூறி இருப்பதாவது;

பிரபலம்


அயராத உழைப்பு, பக்தி மற்றும் தொலைநோக்கு பார்வையால் மக்களின் வாழ்வில் மாற்றங்களை கொண்டு வந்து நாட்டுக்கு பெருமை சேர்த்ததோடு, உலகளவில் புதிய நற்பெயரையும் பெற்றுத் தந்த பிரபலம் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளுக்காக இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அமித் ஷா தமது பிறந்த நாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இதயம்


திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா தமது வாழ்த்துச் செய்தியில், வலிமையான, வளமான இந்தியாவுக்கான உங்களின் பார்வை ஒவ்வொரு இதயத்திலும் எதிரொலிக்கிறது. ஆற்றல்மிக்க தலைமையும், அசைக்க முடியாத அர்ப்பணிப்பும் நாட்டை மாற்றி அமைக்கவும், தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கவும் தொடரட்டும் என்று கூறி உள்ளார்.

கேப்டன்


மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே வெளியிட்டு உள்ள வாழ்த்தில், உங்களின் தலைமையின் கீழ் நாடு பொருளாதார வல்லரசாக மாறுகிறது. 2047ம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியா என்ற உங்களின் எண்ணம் நிறைவேற சக்தி கிடைக்க வேண்டும். தங்களின் முயற்சிகளுக்கு மகாராஷ்டிரா துணை நிற்கும். நாட்டின் கேப்டனான உங்கள் தலைமையில் 21ம் நூற்றாண்டு என்பது இந்தியாவின் நூற்றாண்டு என்று தெரிவித்துள்ளார்.

நீண்ட ஆயுள்

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட ஆயுளுடனும், நீடித்த ஆரோக்கியத்துடனும் இருக்க வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டு உள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும், பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மோடி பிறந்த நாளை முன்னிட்டு, நாடு முழுவதும் பா.ஜ., கட்சியினர் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. கட்சி சார்பில் பொதுக்கூட்டங்கள், பேரணிகள், ரத்த தான முகாம்கள், பொது மருத்துவ முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Post

இந்தியாவில் அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மை விகிதம்..! ஆய்வு சொல்லும் அதிர்ச்சி தகவல்..

Posted by - April 5, 2023 0
உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலையால், நிறுவனங்களில் பணி நீக்க நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. இந்த நிலையில், வேலைவாய்ப்பின்மை விகிதமும் அதிகரித்து வருவதாக ஆய்வுகளில் தெரிய வருகிறது. இந்தியாவில்…

பட்டையைக் கிளப்பும் ஜியோ.. வெறும் 11 ரூபாய்க்கு 10 ஜிபி டேட்டா இலவசம்.. ஆனால் ஒரு கண்டிஷன்

Posted by - December 6, 2024 0
#jio #india #reliance #mukeshambani #reliancejio #ambani #airtel #nitaambani #akashambani #ishaambani #dhirubhaiambani #anantambani #radhikamerchant #shlokamehta #ambaniwedding #kokilabenambani #antilia #ambanifamily #reliancefoundation #neetaambani…

டெல்லி கார் வெடிப்பு – அவசர தாக்குதலா? திட்டமிட்ட சதியா? சிக்கும் டாக்டர்கள் – ஷாக்கிங் அப்டேட்ஸ்

Posted by - November 11, 2025 0
Redfort Car Blast: டெல்லியில் நடந்த கார் வெடிப்பு அவசர தாக்குதலா? திட்டமிட்ட சதியா? என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. Redfort Car Blast: டெல்லியில் வெடித்த காரை…

கேரளாவில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு 7 மாதத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போக்சோ வழக்குகள்

Posted by - August 12, 2023 0
திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த சில வருடங்களாக சிறுவர்-சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது கவலைப்படும் விஷயமாக உள்ளது. ஆண்டுக்கு ஆண்டு இந்த குற்றங்களுக்கான வழக்குகள் அதிகரித்தே வருகிறது.…

இயற்கை சீற்றங்களுக்கு மத்தியில் இ.ண்.டி.யா கூட்டணியின் கூட்டத்திற்காக டெல்லி சென்ற CM ஸ்டாலின்…

Posted by - December 19, 2023 0
இயற்கை சீற்றங்களுக்கு மத்தியில் இண்டியா கூட்டணியின் கூட்டத்திற்காக டெல்லி சென்ற முதலமைச்சர்.. பிரதமருடனான சந்திப்பில் நேரம் மாற்றம்! வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *