தென்னாப்பிரிக்கா தொடரை வென்ற இந்தியா.. ஒரே போட்டியில் இத்தனை சாதனைகளா

154 0

தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 4 ஆவது மற்றும் கடைசி டி 20 போட்டியில் இந்திய அணி அபாரவெற்றி பெற்றது.

நான்கு டி20 போட்டிகளில் விளையாட இந்திய அணி தென்னாப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. முதல் மூன்று போட்டிகளில் இந்தியா இரண்டிலும் தென்னாப்ரிக்கா ஒரு போட்டியிலும் வெற்றி அடைந்திருந்தது. இந்நிலையில் 4 ஆவது டி20 போட்டி நேற்றிரவு நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

இரண்டாவது மற்றும் 3 ஆவது டி20 போட்டிகளில் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்த சஞ்சுசாம்சன் நேற்றைய போட்டியில் முதலில் நிதானமாக ஆடினார். அபிஷேக் சர்மா 36 ரன்களில் வெளியேறினார். பின்னர் சஞ்சு சாம்சனுடன் ஜோடி சேர்ந்த திலக் வர்மா, பந்துகளை சிக்சர்களாக பறக்கவிட்டு வாணவேடிக்கை நிகழ்த்தினார். இருவரும் போட்டிப்போட்டு கொண்டு தென்னாப்பிரிக்கா பந்துவீச்சை சிதறவிட்டனர்.

சஞ்சு சாம்சன், திலக் வர்மா இருவரும் சதம் அடித்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தனர். சஞ்சு சாம்சன் 56 பந்துகளில் 109 ரன்களும், திலக் வர்மா 47 பந்துகளில் 120 ரன்களும் விளாசினர். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 283 ரன்கள் குவித்தது

284ரன்கள் என்ற இலக்கை விரட்டிய தென்னாப்ரிக்கா அணி இந்திய அணியினிப் பந்துவீச்சை சாமாளிக்க முடியாமல் திணறினர். இதனால் 18.2 ஓவர்களில் தென்னாப்பிரிக்கா அனைத்து விக்கெட்களையும் இழந்து 148 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 135 ரன்கள் வித்தியாசத்தில வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.டி 20 தொடரில் தென்னாப்ரிக்காவை வீழ்த்திய இந்திய அணி பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. சஞ்சு சாம்சன்-திலக் வர்மா ஜோடி ஆட்டமிழக்காமல் பார்டனர்ஷிப்பில் 210 ரன்களை குவித்தது சாதனையாகும். 283ரன்களை இந்திய அணி குவித்தது , டி 20 போட்டிகளில் இந்திய அணியின் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோராகும். ஏற்கனவே வங்கதேசத்துக்கு எதிராக 297 ரன்களை குவித்திருந்தது இந்திய அணிஓராண்டில் டி20போட்டிகளில் 3 சதங்கள் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையையும் சஞ்சு சாம்சன் நிகழ்த்தியுள்ளார். இந்திய அணி நேற்றைய போட்டியில் 23 சிக்சர்களை பறக்கவிட்டதும் சாதனை பட்டியலில் 3 ஆம் இடத்தை பெற்றுத்தந்துள்ளது . இந்திய அணி 14.1 ஓவரிலேயே 200 ரன்களை குவித்ததும் சாதனையாக உள்ளது. உலகக்கோப்பை டி20 வெற்றிக்கு பிறகு இந்தியா விளையாடிய 5 டி20 தொடர்களையும் வென்று சாதனை படைத்துள்ளது.

Related Post

மாநில அந்தஸ்து கோரி போராட்டம்: லடாக் கலவர பாதிப்பும் பின்னணியும்

Posted by - September 25, 2025 0
லே: ல​டாக்​கில் மாநில அந்​தஸ்து கோரி நேற்று நடை​பெற்ற போராட்​டத்​தில் கலவரம் வெடித்​தது. இதில் 4 பேர் உயி​ரிழந்​தனர். 60-க்கும் மேற்​பட்​டோர் காயம் அடைந்​தனர். காஷ்மீரில் இருந்து லடாக்…

பிஎம் கிசான்: விவசாயிகளுக்கு மோடி இன்று சர்ப்ரைஸ்? பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா ரூ.2000

Posted by - February 24, 2025 0
டெல்லி: பிஎம் கிஸான் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு 19வது தவணையாக சுமார் 10 கோடி விவசாயிகளுக்கு ரூ.23,000 கோடியை பிரதமர் மோடி இன்று விடுவிக்க உள்ளார்.. 18வது…

பழச மறந்துடுங்க.. 7 நாட்களுக்கு இலவசம்.. மொபைலுக்கு தானாக ரீசார்ஜ்..

Posted by - August 2, 2024 0
ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), பார்தி ஏர்டெல் (Bharti Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தினாலும், கஸ்டமர்களுக்கு உரிய நேரத்தில் சலுகைகளை கொடுப்பதற்கு…

BSNL வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய IFTV திட்டம் – 600+ Live TV சேனல்கள், 75 Mbps இணைய வேகம்!

Posted by - December 15, 2025 0
BSNL (Bharat Sanchar Nigam Limited) தனது FTTH (Fiber To The Home) வாடிக்கையாளர்களுக்காக IFTV (Intranet Fiber TV) என்ற புதிய வசதியை அறிமுகம்…

பான் கார்ட் விதிகளில் மாற்றம்.. ஏப்ரல் 1 முதல்

Posted by - March 19, 2026 0
பான் கார்டிற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இனி வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல், ஆதார் அட்டை நகலை மட்டும் சமர்பித்தால் போதாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *