கங்குவா படத்தில் அதிக இரைச்சல் ஏன்? – வைரலாகும் ரசூல் பூக்குட்டியின் இன்ஸ்டாகிராம் பதிவு!

175 0

கங்குவா படத்தில் அதீத ஒலி இருப்பதாக ரசிகர்களும் பொதுமக்களும் விமர்சித்துவரும் வேளையில், ஆஸ்கர் வென்ற சவுண்ட் இஞ்சினியர் ரசூல் பூக்குட்டி கருத்து தெரிவித்துள்ளார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, கருணாஸ், பாபி தியோல், யோகி பாபு, திஷா பதானி உள்ளிட்டோர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான படம் கங்குவா. வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவு செய்ய தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்தப் படம் நேற்று (14ம் தேதி) உலகெங்கிலும் 10,000 திரையரங்குகளில் 8 மொழிகளில் வெளியானது. மேலும், கங்குவா படம் முன்பதிவில் ரூ. 4 கோடிக்கும் மேல் வசூலை ஈட்டி மிரளவைத்தது.

இந்தப் படம் நேற்று திரையரங்குகளில் வெளியானதும் ஏராளமான ரசிகர்களும் பொதுமக்களும் படத்தை பார்த்துவிட்டு தங்கள் கருத்துகளை முன்வைத்தனர். இதில், பாசிட்டிவ் கருத்துகளும், நெகட்டிவ் கருத்துகளும் இருந்தன. ஆனால், பெரும்பான்மையான ரசிகர்களும், மக்களும், படம் முழுக்க அதிக சத்தம் இருக்கிறது. இதனால், ஒருவகையான எரிச்சலும், தலைவலியும் வருகிறது என விமர்சித்திருந்தனர்.இது தற்போது பெரும் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், ஆஸ்கர் விருது பெற்ற சவுண்ட் இஞ்சினியர் ரசூல் பூக்குட்டி கங்குவா படத்தில் இருக்கும் அதீத ஒலி குறித்து பகிரங்கமாக கருத்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ரீ-ரிகார்டிங் செய்யும் என் நண்பர் ஒருவர் இந்த காணொளியை எனக்கு அனுப்பினார். நமது பிரபலமான திரைப்படத்தில் ஒலி குறித்து இப்படியான விமர்சனத்தை பார்க்கும்போது மனமுடைகிறது. எங்களின் கலையும், கலைத்திறனும் இரைச்சல் யுத்தத்தில் சிக்கிக்கொண்டுள்ளன. இதற்கு யாரை குற்றம் சொல்வது?

ஒலிப்பதிவாளரையா அல்லது பாதுகாப்பின்மையுடன் இறுதி நேரத்தில் எண்ணற்ற திருத்தங்களுடன் வருவதையா. தலைவலியுடன் ரசிகர்கள் வெளியே சென்றால், மீண்டும் அந்தப் படத்திற்கு வரமாட்டார்கள் என்பதை நமது நண்பர்கள் தீர்க்கமாக சொல்ல வேண்டிய நேரமிது” என்று தெரிவித்துள்ளார்.

Related Post

உதயநிதியுடன் மோதும் நடிகர் சிவகார்த்திகேயன்.. வெளியான புதிய தகவல்

Posted by - April 19, 2023 0
மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் சிவகார்த்திகேயன் வைத்து மாவீரன் படத்தை இயக்கி வருகிறார். இதில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம் படும் தோல்வியை சந்தித்த…

சமந்தாவை போல் அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட 33 வயது நடிகை.. யார் தெரியுமா

Posted by - July 19, 2023 0
சமந்தா – மயோசிட்டிஸ் இந்தியளவில் பிரபலமான நடிகையாக மாறியுள்ளார் சமந்தா. இவர் கடந்த ஆண்டு மயோசிட்டிஸ் எனும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சையில் இருந்தார். அதிலிருந்து கொஞ்சம்…

லியோ படத்தில் கொக்கி குமார்.. எல்சியூ-வில் இணைகிறார் தனுஷ்?

Posted by - July 5, 2023 0
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத்,…

இந்த முறை அணுகுண்டு வெடியாக இருக்கும்.. அனிருத் நெகிழ்ச்சி

Posted by - January 31, 2023 0
விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இணைந்தது குறித்து அனிருத் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். ‘வாரிசு’ படத்தைத் தொடர்ந்து…

தவறான பழக்கம்; கார்த்திக் திருமணத்தால் நடிகை ஒருவர் விஷம் குடித்தார்: தயாரிப்பாளர் பாலாஜி பிரபு!

Posted by - January 9, 2025 0
நடிகர் கார்த்திக் தனது செயல்பாடுகளால் அரசியல் மற்றும் சினிமா வாழ்க்கையை இழந்தார் … ஒரு நடிகை தற்கொலைக்கு முயன்றதாகவும் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கூறியுள்ளார். ஒரு காலத்தில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *