இனி பாதி நாளுக்கு பணம் கொடுத்தா போதும்.. 20 Vodafone திட்டங்களில் அதிரடி மாற்றம்.. ஆடிப்போன Jio, Airtel, BSNL!

190 0

வோடாபோன் ஐடியா (Vodafone Idea) அதன் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கான சேவையில் மிகப்பெரிய மாற்றம் ஒன்றை செய்துள்ளது. விஐ கஸ்டமர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான “ஹீரோ பேக்குகள்” (Hero Packs) தற்போது “சூப்பர்ஹீரோ பேக்குகள்” (SuperHero Packs) என்று மறுபெயரிடப்பட்டுள்ளன. அதோடு சேர்த்து இந்த பிரிவின் கீழ் உள்ள அனைத்து திட்டங்களின் முக்கிய நன்மை ஒன்று அபரிவிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.விஐ ஹீரோ பேக்குகளின் கீழ் கிடைக்கும் முக்கிய நன்மைகளில் ஒன்றான ​​”பிங்கே ஆல் நைட்” நன்மையின் கேள் முன்னதாக 6 மணிநேர அன்லிமிடெட் டேட்டா மட்டுமே அனுக கிடைத்தது. அதாவது நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரையிலாக மொத்தம் 6 மணி நேரத்திற்கு, முற்றிலும் இலவசமாக அன்லிமிடெட் டேட்டா அணுக கிடைத்தது. தற்போது இது 12 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.அதாவது இனிமேல் “சூப்பர்ஹீரோ நன்மைகள்” என்கிற பெயரின்கீழ் நள்ளிரவு 12 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை அன்லிமிடெட் டேட்டா கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் 12 மணிநேரத்திற்கு இலவச டேட்டா கிடைப்பதால், வாடிக்கையாளர்கள் பாதி நாளுக்கான டேட்டாவிற்கு மட்டுமே இனி செலவு செய்தால் போதும், அதாவது பேஸிக் ரீசார்ஜின் கீழ் கிடைக்கும் டேட்டாவை தவிர்த்து, கூடுதல் டேட்டாவிற்காக பணம் செலவழிக்க வேண்டிய அவசியம் இருக்காது! வோடாபோன் ஐடியா சேவையின் கீழ் கிடைக்கும் பெரும்பாலான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களானது “ஹீரோ அன்லிமிடெட்” பிரிவின் கீழ் வருகின்றன. இவைகளில் “பிங்கே ஆல் நைட்” நன்மையை போலவே “வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர்” மற்றும் “டேட்டா டிலைட்” போன்ற தனித்துவமான நன்மைகளும் அணுக கிடைக்கின்றன. இப்படியாக விஐ அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் உள்ள “சூப்பர்ஹீரோ பேக்” வகையின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள திட்டங்களின் விலை விவரங்கள் இதோ:
01. ரூ.365 திட்டம் 02. ரூ.379 திட்டம் 03. ரூ.407 திட்டம் 04. ரூ.408 திட்டம் 05. ரூ.409 திட்டம் 06. ரூ.449 திட்டம் 07. ரூ.469 திட்டம் 08. ரூ.539 திட்டம் 09. ரூ.649 திட்டம் 10. ரூ.795 திட்டம்

11. ரூ.979 திட்டம் 12. ரூ.994 திட்டம் 13. ரூ.996 திட்டம் 14. ரூ.997 திட்டம் 15. ரூ.998 திட்டம் 16. ரூ.1198 திட்டம் 17. ரூ.1599 திட்டம் 18. ரூ.3699 திட்டம் 19. ரூ.3599 திட்டம் 20. ரூ.3799 திட்டம் அறியாதோர்களுக்கு வீகெண்ட் டேட்டா ரோல்ஓவர் நன்மையின் கீழ் திங்கள் முதல் வெள்ளி வரை பயன்படுத்தப்படாத டேட்டாவை சனி மற்றும் ஞாயிறுகளில் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கும் ஒரு நன்மையாகும். டேட்டா டிலைட் என்றால் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் 2ஜிபி வரை பேக்அப் டேட்டாவை கூடுதல் கட்டணமின்றி பெறலாம். இந்த கூடுதல் தரவை 121249 என்கிற எண்ணை டயல் செய்வதன் மூலம் அல்லது விஐ ஆப் மூலம் அணுகலாம். இதெல்லாம் ஒருபக்கம் இருக்க வோடாபோன் ஐடியாவானது அதன் ரூ.289 ப்ரீபெய்ட் திட்டத்திலும், ரூ.479 திட்டத்திலும் கூட சில மாற்றங்களை செய்துள்ளது. ஆனால் இவைகள் வாடிக்கையாளர்களை குஷிப்படுத்தும் நல்ல மாற்றங்கள் அல்ல; கடுப்பேற்றும் மோசமான மாற்றங்கள் ஆகும். தற்போது ரூ.289 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி குறைக்கப்பட்டுள்ளது.

48 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வந்த ரூ.289 திட்டமானது தற்போது 40 நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும். அதாவது இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 8 நாட்கள் குறைக்கப்பட்டுள்ளதால், இந்த திட்டத்தின் விலை மறைமுகமாக உயர்ந்துள்ளது. கட்டணத்தை உயர்த்தி, நேரடியாக விலை உயர்வை கொண்டு வருவதற்கு பதிலாக, வேலிடிட்டியை குறைத்து, மறைமுகமாக திட்டத்தின் விலையை உயர்த்தியுள்ளது. இதேபோல ரூ.479 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி ஆனது 56 நாட்களில் இருந்து 48 நாட்களாக குறைக்கப்பட்டு உள்ளது. மேலும் ரூ.479 ப்ரீபெய்ட் திட்டத்தின் டெய்லி டேட்டா லிமிட்டும் 1ஜிபி ஆக குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த திட்டம் 1.5ஜிபி அளவிலான டெய்லி டேட்டாவை வழங்கியது. தற்போது இதில் 500எம்பி டேட்டா குறைக்கப்பட்டுள்ளது.

Related Post

இந்திய அளவில் “X” தளத்தில் டிரெண்டிங்: #TeachersProtest

Posted by - January 2, 2026 0
“சம வேலைக்கு சம ஊதியம்” – 8 நாட்களாக சென்னை போராட்டத்தில் இடைநிலை ஆசிரியர்கள்** சென்னை:தமிழ்நாடு அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், “சம வேலைக்கு சம…

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்.. ஜனாதிபதி உரை

Posted by - January 31, 2023 0
திரவுபதி முர்மு ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறக முதல்முறையாக பாராளுமன்றத்தில் உரையாற்றுகிறார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்கிறார். பாராளுமன்றத்தில்…

அசாமில் மார்க்கெட்டில் தீவிபத்து- 150 கடைகள் சேதம்

Posted by - February 17, 2023 0
அசாம் மாநிலம் ஜோர்ஹாட் நகரின் மையப் பகுதியில் உள்ள சவுக் பஜார் மார்க்கெட்டில் நேற்று இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் கடைகள் நெரிசலாக இருந்ததால்…

அடுத்த பிரச்சனை.. Jio, Airtel, Vi 10% விலை உயர்வு.. ரூ.299 பிளான் ரூ.329.. ரூ.349 பிளான் ரூ.384 ஆகுமா.. எப்போ?

Posted by - November 6, 2025 0
இந்தியாவின் தனியார் டெலிகாம் நிறுவனங்கள் ஆனது மற்றொரு சுற்று கட்டண திருத்தங்களுக்கு தயாராகி வருவதாக தெரிகிறது. ஏற்கனவே – பிஎஸ்என்எல் (BSNL) உட்பட அனைத்துமே, வேலிடிட்டியை குறைப்பது,…

ஒரு நாளுக்கு 26 சிகரெட் பிடிப்பதற்கு சமம்… 441 ஐ எட்டிய டெல்லி காற்றுமாசு.. நிலை 3 செயல்திட்டம் அமல்

Posted by - November 15, 2024 0
டெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்தும் விதமாக புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலக்கு வருகிறது. தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பஞ்சாப், ஹரியானா…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *