பேருந்து ஓட்டும்போது செல்போன்.. அரசு ஓட்டுநர்களுக்கு போக்குவரத்துத் துறை பகீர் எச்சரிக்கை!

142 0

அதனை மீறி செல்போன் பயன்படுத்தியபடி அரசு பேருந்து ஓட்டுநர்கள் பேருந்தை இயக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி வருகின்றன.

செல்போன் பயன்படுத்தும் அரசு பேருந்து ஓட்டுநர்களை போக்குவரத்துத் துறை எச்சரித்துள்ளது.

அரசு பேருந்து ஓட்டுநர்கள் பணியின் போது செல்போன் பயன்படுத்தினால் 29 நாட்கள் பணி இடைநீக்கம் செய்யப்படுவார்கள் என்று போக்குவரத்துத் துறை எச்சரித்துள்ளது.

அரசு பேருந்து ஓட்டுநர்கள் பணியின் போது செல்போன் பயன்படுத்தக் கூடாது என்று ஏற்கனவே கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஓட்டுநர்கள் பணியின் போது சட்டையின் மேல் பாக்கெட்டில் செல்போன் வைத்திருத்தல் கூடாது என்றும் அதனை நடத்துநரிடம் ஒப்படைத்துவிட்டு பணி முடிந்த பிறகு பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.ஆனால், அதனை மீறி செல்போன் பயன்படுத்தியபடி அரசு பேருந்து ஓட்டுநர்கள் பேருந்தை இயக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி வருகின்றன.இந்நிலையில், அரசு பேருந்து ஓட்டுநர்கள் பணியின் போது செல்போன் பயன்படுத்தினால் 29 நாட்கள் பணி இடைநீக்கம் செய்யப்படுவார்கள் என்று போக்குவரத்துத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக பேருந்து ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கும்படி அனைத்து போக்குவரத்து மண்டல அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Post

கொள்ளை பணத்தில் சுற்றுலா சென்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்த கும்பல்- கோவை மருதமலையில் சிக்கினர்

Posted by - August 7, 2023 0
கோவை: கோவை மாநகரில் கடந்த சில நாட்களுக்கு முன் தொடர் செயின் பறிப்பு சம்பவம் நடந்து வந்தது. இது தொடர்பாக மாநகர போலீஸ் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட…

கார்டை செருகுவதற்கு முன்பாகவே ரூ.50 ஆயிரத்தை அள்ளிக்கொடுத்த ஏ.டி.எம். எந்திரம்

Posted by - July 13, 2023 0
நாகர்கோவில்: குமரி மாவட்டம் குளச்சலைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (வயது 54). ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் நேற்று காலை 10 மணிக்கு குளச்சல் மெயின் ரோட்டில் தூய…

எனக்கு கர்வம் வராமல் வேற எவனுக்குடா வரும்…ஆவேசமாக பேசிய இளையராஜா

Posted by - February 2, 2025 0
யாரும் செய்யாத சாதனைகளை எல்லாம் செய்துகொண்டிருக்கும் எனக்கு கர்வம் இல்லையென்றால் வேறு யாருக்கு வரனும் என்று இளையராஜா கேள்வி எழுப்பியுள்ளார் இளையராஜ உலகளவில் இசைத்துறையின் மாபெரும் ஆளுமையாக…

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு

Posted by - November 7, 2023 0
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை, வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் 19 மாவட்டங்களில் அடுத்த…

கூட்டணி கேள்விக்கு டென்ஷன்.. தேர்தல் நேரத்தில் திமுகவை விட்டு கட்சிகள் பிரியும்.. இபிஎஸ் அதிரடி…

Posted by - March 26, 2025 0
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, பாஜக கூட்டணி குறித்த கேள்விக்கு டென்ஷனான நிலையில், தேர்தல் நேரத்தில் திமுக கூட்டணி உடையும் என்பதுபோல் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *