விஜய்யின் கடைசி படத்தை இயக்க முடியாது என கூறிய இயக்குநர்.. காரணம் என்ன தெரியுமா

168 0

விஜய்யின் கடைசி படம்

தளபதி விஜய் தற்போது அரசியலில் களமிறங்கியுள்ளார். இதனால் சினிமா வாழ்க்கையில் இருந்து வெளியேறப்போவதாகவும் அறிவித்துவிட்டார்.

தளபதி 69 தான் தன்னுடைய கடைசி படம் என அவர் கூறியுள்ள நிலையில், அப்படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்க கேவிஎன் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படம் துவங்கிய நேரத்தில் இருந்தே, இது தெலுங்கில் வெளிவந்த பகவந் கேசரி படத்தின் ரீமேக் தான் என கூறப்பட்டது.

சமீபத்தில் பகவந் கேசரி படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியை, தளபதி 69ல் படமாகியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், விஜய்யின் கடைசி படம் ரீமேக்-ஆ இல்லையா என்பது குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய், பகவந் கேசரி திரைப்படம் 5 முறை பார்த்தாராம். அதன்பின் அப்படத்தின் இயக்குநரான அனில் ரவிபுடி-யை அழைத்து தன்னுடைய கடைசி படமாக அனில் ரவிபுடி படத்தை ரீமேக் செய்து இயக்க வேண்டும் என கூறியுள்ளார்.

ஆனால், ரீமேக் படத்தை இயக்க முடியாது என, விஜய்யின் கடைசி படத்தை இயக்கும் வாய்ப்பை இயக்குநர் அனில் ரவிபுடி நிராகரித்துள்ளார். இதனை விடிவி கணேஷ் சமீபத்தில் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார்.

இதன்பின் பேசிய இயக்குநர் அனில் ரவிபுடி, “விஜய் சாரின் கடைசி படம் பகவந் கேசரியின் ரீமேக் என்பதற்கு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளிவரவில்லை. அதை இந்த இடத்தில் பேசுவது என்பதும் சரியில்லை. விஜய் சார் மீது மிகப்பெரிய மரியாதை எனக்கு இருக்கிறது. அப்படத்தை இயக்கமுடியாமல் போனதற்கு நேரம் தான் காரணம். கடைசி படம் குறித்து பேசியது வேறு, அந்த நடந்தது வேறு, தளபதி 69க்கு என்னுடைய வாழ்த்துக்கள்.” என கூறினார்.

Related Post

ரிலீசுக்கு முன்பே தரமான சம்பவம் செய்த விஜய்யின் கோட் திரைப்படம் – வெளியான டக்கர் தகவல்..!!

Posted by - July 6, 2024 0
தளபதி விஜயின் மாறுபட்ட நடிப்பில் உருவாகி வரும் கோட் படம் ரிலீஸ் இன்னும் நீண்ட நாட்கள் இருக்கும் நிலையில் தற்போது ஒரு சிறப்பான தரமான சம்பத்தை செய்துள்ளது.…

”எவ்ளோ பண்ணாலும் பத்தாது, விஜய் அண்ணாவும் பண்றது ரொம்ப சந்தோஷம்” – கார்த்தி கருத்து

Posted by - July 17, 2023 0
தளபதி விஜய் பயிலகம் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு நடிகர் கார்த்தி பதிலளித்தார். அகரம் பவுண்டேசன் சார்பாக 44வது சிவக்குமார் கல்வி விருதுகள் 2023 என்ற விருது வழங்கும்…

விஜய் மகனுக்கு ஜோடியாகும் வனிதாவின் மகள் ஜோவிகா? அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!!

Posted by - August 26, 2023 0
விஜய் மகனுக்கு ஜோடி.. தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் தளபதி விஜய். இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளது அனைவரும் அறிந்தது. அதில் இவரது மகள்…

லியோ படத்தின் ப்ரீ புக்கிங் இத்தனை கோடியை கடந்துவிட்டதா.. வசூல் சாதனை படைத்த விஜய்

Posted by - October 7, 2023 0
லியோ மாபெரும் எதிர்பார்ப்பில் வருகிற 19ஆம் தேதி திரையரங்கில் வெளிவரவிருக்கும் திரைப்படம் லியோ. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து Youtubeல் பட்டையை கிளப்பியுள்ளது. இதுவரை அனைத்து மொழிகளிலும்…

சிவகார்த்திகேயனின் “அயலான்” திரைப்படம் வெளியாகுவதில் சிக்கலா? லேட்டஸ்ட் தகவல்

Posted by - September 6, 2023 0
அயலான் ஆர். ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் அயலான். இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், பானுப்ரியா,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *