தி.மு.க.வில் இணைந்தது ஏன்? லிஸ்ட் போட்டு காரணம் சொன்ன சத்யராஜ் மகள்!

125 0

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்த நடிகர் சத்யராஜ் மகள் ஏன் தி.மு.க.வில் இணைந்தேன் என்று விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் புகழ்பெற்ற நடிகர் சத்யராஜ். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார். இவரது மகள் திவ்யா. இவர் ஊட்டச்சத்து மருத்துவர் ஆவார். இவர் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். தி.மு.க.வில் அவர் இணைந்தபோது அமைச்சர் சேகர்பாபு, தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு உடனிருந்தனர்.

தி.மு.க.வில் இணைந்தது ஏன்?

தி.மு.க.வில் இணைந்த பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்த திவ்யா கூறியிருப்பதாவது, “நான் ஒரு ஊட்டச்சத்து நிபுணர். ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியத்துவம் அளிப்பேன். தி.மு.க. ஆரோக்கியத்திற்கு மரியாதை தரும் கட்சி. அதற்கு ஒரு உதாரணம் காலை உணவுத் திட்டம். தி.மு.க. பெண்களுக்கு மிகவும் மரியாதை தரும் கட்சி. அதற்கு ஒரு உதாரணம் புதுமைப் பெண் திட்டம். அனைத்து மதத்திற்கும் மரியாதை தரும் கட்சி தி.மு.க.

கனிமொழி, தமிழச்சி, மேயர் பிரியா, மம்தா பானர்ஜி, ஜோதிமணி ஆகியோரை ரொம்ப பிடிக்கும். நான் இணைந்ததில் அவருக்கு மிக்க மகிழ்ச்சி. என் பணிகளை அவர் பார்த்துள்ளார். எனக்கு மு.க.ஸ்டாலின்தான் ரோல் மாடல். அவரின் உழைப்புதான் காரணம். குடும்பத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சி.

விஜய்க்கு வாழ்த்து:

விஜய் அண்ணா மட்டுமின்றி மக்கள் பணி செய்யும் யாராக இருந்தாலும் அரசியலுக்கு வர வேண்டும். இதுவரை விஜய் அண்ணா மக்கள் பணி செய்து நான் பார்க்கவில்லை. அவருக்கு வாழ்த்துகள். 2026 சட்டமன்ற தேர்தலிலும் தி.மு.க. ஆட்சிதான்.”

இவ்வாறு அவர் கூறினார்.

மருத்துவர் திவ்யா கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நிகழும் அரசியல் நிகழ்வுகள் குறித்து அவ்வப்போது கருத்து தெரிவித்து வந்தார். அரசியல் மீது ஆர்வம் கொண்ட அவர் ஏதேனும் கட்சியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் தி.மு.க.வில் இணைந்துள்ளார்.  அவரது தந்தையும், நடிகருமான சத்யராஜ் தீவிர பெரியார் ஆதரவாளர். திராவிட கட்சித் தலைவர்களுடன் அவர் நெருக்கமான உறவு கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திவ்யா சத்யராஜ் தற்போது தி.மு.க.வில் இணைந்துள்ளார். தி.மு.க.வில் இணைந்துள்ள அவருக்கு விரைவில் கட்சியில் ஏதேனும் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Post

ரவுண்டு கட்டப்பட்ட 6 திமுக அமைச்சர்கள் – வீட்டுக்கா? சிறைக்கா? தலை தப்புமா? ஆட்சி கிட்டுமா?

Posted by - April 26, 2025 0
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசின் 6 அமைச்சர்களுக்கு வழக்குகளால் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசின் சில அமைச்ச்சர்களுக்கு, பழைய வழக்குகள் தற்போது…

பிரமாண்டமான தனி விமானம் வாங்கிய நடிகர் சூர்யா.. இதன் விலை எத்தனை கோடி தெரியுமா

Posted by - August 23, 2024 0
நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் தற்போது கங்குவா திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சிறுத்தை சிவா…

ஏது பாஜகவிற்கு ஆட்சியில் பங்கா? அதெல்லாம் கிடையாது – எடப்பாடி பழனிசாமி தடாலடி விளக்கம்

Posted by - April 16, 2025 0
பாஜகவிற்கு ஆட்சியில் எல்லாம் பங்கு கிடையாது என, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார். பாஜக உடன் கூட்டணி மட்டுமே, கூட்டணி ஆட்சி என்று அமித் ஷா…

“வாக்குறுதி எண் 311… ‘சம வேலைக்கு சம ஊதியம்’ கோருவோர் மீது ஒடுக்குமுறையா?

Posted by - December 31, 2025 0
சென்னை: ‘சம வேலைக்கு சம ஊதி​யம்’ கோரிக்​கையை முன்​வைத்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்​கம் (எஸ்​எஸ்​டிஏ) சார்​பில் டிச.26 முதல் தொடர் போராட்​டம் நடத்​தப்​பட்டு வரு​கிறது. அரையாண்டுத் தேர்வு…

வழுக்கும் கழிவறைகள், பலி வாங்கும் சிறைகள் – சீர்கெட்ட காவல்துறை? கண்கெட்ட சிஎம் ஸ்டாலின்?

Posted by - June 30, 2025 0
 தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்தபிறகு லாக்-அப் மரணங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். சிவகங்கையில் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *