யாருமே கண்டு கொள்ளாத வெங்கட் பிரபு.. சிதறு தேங்காய் போல் உடைந்த 60028 டீம்

120 0

விஜய்யை வைத்து கோட் படத்தை இயக்கும்போது தினமும் சமூக வலைதளத்தில் இவரை பற்றிய பேச்சுக்கள் அடிபட்டுக் கொண்டிருந்தது. ஆனால் இப்பொழுது எங்கே இருக்கிறார், என்ன செய்கிறார் என்பதே தெரியவில்லை. ஆனால் மனிதர் அடுத்த படத்தின் கதையை மட்டும் ரெடி பண்ணி விட்டார்.கோட் படத்திற்கு பின் அந்தப் பட தயாரிப்பாளர் ஏஜிஎஸ் கல்பாத்தி மற்றும் அர்ச்சனா கல்பாத்தி இருவருமே இவரை கண்டு கொள்ளவே இல்லை. இதற்கு காரணம் வெங்கட் பிரபு தான். அந்த படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் செய்யாமல், நான் அந்த ப்ராஜெக்டிலிருந்து முழுவதுமாக வெளிவந்து விட்டேன் என படம் முடிந்த உடனே கூறி விலகி விட்டார்.

இதனால் சக்சஸ் மீட், சின்ன சின்ன பார்ட்டிகள் என எதிலுமே இவரது தலை தென்படவே இல்லை. விஜய் மற்றும் அர்ச்சனா கல்பாத்தி இருவரும் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட போதிலும் அதில் வெங்கட் பிரபு இல்லை. இதிலிருந்து அவர்களுக்குள் ஏதோ பிரச்சனை என்பது மட்டும் தெரிகிறது.

கோட் பட சூட்டிங் சமயத்தில் இவரை தேடி பல தயாரிப்பார்கள் வந்தார்கள் ஆனால் அந்தப் படத்திற்குப் பிறகு இவர் பக்கம் யாரும் தலை வைத்து கூட படுக்கவில்லையாம். இதனால் தன்னுடைய முதல் படமான 600028 படத்தை தூசி தட்டலாம் என கிடைக்கும் நேரத்தில் அதன் மூன்றாம் பாகத்தின் ஸ்கிரிப்டையும் ரெடி பண்ணி வைத்துவிட்டார்.ஆனால் வெங்கட் பிரபுவின் பழைய டீம் 15 பேர் கொண்ட பட்டியல் இப்பொழுது 6 பேராக மாறிவிட்டதாம். குறிப்பாக தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலத்தின் மகன் பஞ்சு சுப்பு இருவரும் ஏதோ மனஸ்தாபம் காரணமாக பிரிந்து விட்டனர். அதன் பிறகு M p ஆன விஜய் வசந்தும் முன்போல் வெங்கட் பிரபுவிடம் நெருக்கம் காட்டுவது இல்லையாம். இதனால் அந்தப் படத்தின் மூன்றாம் பாகம் நிலுவையில் உள்ளது.

Related Post

சம்பளத்துக்கு மேல் ஜெயிலர் படத்தால் ரஜினிக்கு கிடைத்த ஷேர்- மொத்தம் இத்தனை கோடி பெற்றாரா?

Posted by - September 1, 2023 0
ரஜினியின் ஜெயிலர் நடிகர் ரஜினி நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி ஜெயிலர் என்ற திரைப்படம் படு மாஸாக வெளியாகி இருந்தது. நெல்சன் திலீப்குமார் இயக்க சன்…

மொத்தத்தில் குடும்பத்துடன் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய பாடமே இந்த பறந்து போ!!!

Posted by - July 5, 2025 0
தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான படங்களாக கொடுத்து வரும் ராம், இந்த முறை பெற்றோர்கள்-குழந்தைகளுக்கான ஒரு பீல் குட் ட்ராமவை பறந்து போ என்ற படம் மூலம் கொடுத்துள்ளார்,…

துணிவு ‘சில்லா சில்லா’ வெளியானது.. ரசிகர்கள் கொண்டாடும் பாடல் இதோ

Posted by - December 9, 2022 0
துணிவு படத்தின் முதல் சிங்கிள் “சில்லா சில்லா” பாடல் வீடியோ வெளியாகி இருக்கிறது. வெறித்தனமாக காத்திருந்த ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகிறார்கள்.  

நடிகை அதிதி ராவ்வை ரகசிய திருமணம் செய்துகொண்ட சித்தார்த்..? வெளியான ஷாக்கிங் தகவல்

Posted by - March 28, 2024 0
நடிகை அதிதி ராவ் மற்றும் நடிகர் சித்தார்த் நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது இவர்கள் இருவருக்கும் ரகசிய திருமணம் நடைபெற்றுள்ளதாக அதிர்ச்சி…

ரஜினியின் 171 படத்தை இயக்க கோடியில் சம்பளம் வாங்கும் லோகேஷ் கனகராஜ்!..எவ்ளோ தெரியுமா?

Posted by - August 29, 2023 0
ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த ஜெயிலர் படத்திற்கு ரசிகர்கள் மாபெரும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர். தற்போது வரை இப்படம் ரூபாய் 575…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *