இதே வேலையா போச்சு.. என்ன அதிகாரம் இருக்கு! மிஷ்கினை கிழித்து தொடங்கவிட்ட விஷால்

221 0

இயக்குனர் மிஷ்கினுக்கு இதே வேலையாய் போச்சு, மேடை நாகரிகம் என்று ஒன்று உள்ளது, சில பேரின் சுபாவங்களை என்னைக்குமே மாற்ற முடியாது.

இளையராஜா குறித்து கொச்சையாக பேசிய இயக்குனர் மிஷ்கினுக்கு நடிகர் விஷால் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் மிஷ்கின்:

தமிழ் சினிமாவில் மாறுப்பட்ட திரைப்படங்களை இயக்குனர்களுள் ஒருவரான இயக்குனர் மிஷ்கின் பொது மேடைகளில் நாகரீகம் இல்லாமல் கொச்சையான வார்த்தைகளை பேசி சர்ச்சையில் சிக்கி வருகிறார். பட புரமோஷன்களில் அவரது பேச்சு சில சமயங்களில் முகம் சுளிக்கும் வகையில் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தது.

குறிப்பாக இயக்குனர் பாலாவின் 25வது ஆண்டு கொண்டாட்ட நிகழ்வில் பாலாவை அவன் இவன் என்று ஒருமையாக பேசியது, அதன் பிறகு பாட்டில் ராதா படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் இளையராஜாவை கொச்சையான வார்த்தைகளில் பேசியிருந்தார். இதற்கு பலரும்   எதிர்ப்பு தெரிவித்துவந்தனர்.  இளையராஜாவை அன்பின் மிகுதியால் அவ்வாறு பேசி இருந்தாலும் பொது மேடைக்கென்று ஒரு நாகரிகம் உள்ளது என்று பலர் கருத்து தெரிவித்தனர்.

மன்னிப்புக்கேட்ட மிஷ்கின்:

இளையராஜா குறித்த தனது பேச்சுக்கு இயக்குனர் மிஷ்கின் மன்னிப்பு கேட்டிருந்தார். நகைச்சுவைக்காக தான நான் அப்படி பேசியிருந்தேன், எனது பேச்சுக்கு பாடலாசிரியர் தாமரை, நடிகர் அருள்தாஸ் ஆகியோர் நான் பேசியது தவறு என்றார்கள், அதற்காக நான் அவர்களை கடவுளாக நினைத்து மன்னிப்பு கேட்கிறேன் என்று இயக்குனர் மிஷ்கின் மன்னிப்பு கேட்டார்.

விஷால் கண்டனம்:

இந்நிலையில் இயக்குனர் மிஷ்கின் பேச்சுக்கு குறித்து நடிகர் விஷாலிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த விஷால், அவருக்கு இதே வேலையாய் போச்சு, மேடை நாகரிகம் என்று ஒன்று உள்ளது, சில பேரின் சுபாவங்களை என்னைக்குமே மாற்ற முடியாது. யாருக்குமே இளையராஜாவை அவன் இவன் என்று சொல்ல அருகதை கிடையாது. அந்த மனிதன் கடவுளின் குழந்தை, அவருடைய பாடல்கள் தான் நம்மை சோகத்தில் இருந்து மீளவும் நமக்கு சந்தோசத்தையும் கொடுக்கிறது. நம்முடைய இரத்தத்தில் இளையராஜா இருக்கிறார். அவரை அவன் இவன் என்று சொல்ல யாருக்கும் அதிகாரம் கிடையாது என்று விஷால் தனது கண்டத்தை பதிவு செய்தார்.

 

ஏற்கெனவெ இயக்குனர் மிஷ்கின் மற்றும் நடிகர் விஷாலுக்கு இடையே துப்பறிவாளன் படத்தின் போது கருத்து வேறுபாடு ஏற்ப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

“தளபதி விஜய்யின் ‘GOAT’ படத்தில் இணைந்த அஜித் பட நடிகை! Latest தகவல்!”

Posted by - January 4, 2024 0
அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் நடித்த நடிகை தளபதி விஜய் நடித்து வரும் ‘GOAT’ படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதை அடுத்து இந்த படத்திற்கு…

அந்த காட்சியில் நடித்ததை நினைத்து இப்போதுவரை வேதனைப்படுகிறேன்!.. நடிகை சதா வெளிப்படை

Posted by - September 22, 2023 0
சதா தமிழில் ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் தான் நடிகை சதா. இப்படத்தை தொடர்ந்து திருப்பதி,பிரியசகி, உன்னாலே உன்னாலே, அந்நியன் எனப் பல படங்களில் நடித்துள்ளார்.…

பாகுபலி வசூலை அடித்து நொறுக்க வரும் ஜெயிலர்.. இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்த ரஜினி

Posted by - August 21, 2023 0
ஜெயிலர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து கடந்த 10ஆம் தேதி உலகளவில் வெளிவந்த திரைப்படம் ஜெயிலர். சன் பிச்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைத்திருந்தார். இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து…

இன்னும் உங்க சாங் இளமையா இருக்கு.. எனக்கு தான் வயசு ஆயிடுச்சு.. நடிகர் சிவகார்த்திகேயன்

Posted by - June 2, 2023 0
‘கர்ணன்’ படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் படம் ‘மாமன்னன்’. இப்படத்தின் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட…

எல்லைகளைக் கடந்து ஒலிக்கும் ‘ஜனநாயகன்’

Posted by - November 22, 2025 0
எல்லைகளைக் கடந்து ஒலிக்கும் ‘ஜனநாயகன்’ குரல் – மலேசியாவில் ஒரு சரித்திர நிகழ்வு! ​நீண்ட நாட்களாகக் காற்றுவாக்கில் வந்த செய்தி, இதோ இப்போது உறுதியாகிவிட்டது! நம் தளபதி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *