எனக்கு கர்வம் வராமல் வேற எவனுக்குடா வரும்…ஆவேசமாக பேசிய இளையராஜா

200 0

யாரும் செய்யாத சாதனைகளை எல்லாம் செய்துகொண்டிருக்கும் எனக்கு கர்வம் இல்லையென்றால் வேறு யாருக்கு வரனும் என்று இளையராஜா கேள்வி எழுப்பியுள்ளார்

இளையராஜ

உலகளவில் இசைத்துறையின் மாபெரும் ஆளுமையாக கருதப்படுபவர் இசைஞானின் இளையராஜா. 1500 க்கும் மேற்பட்ட படங்கள் 5000 பாடல்கள் என தனது வாழ்நாளை இசைக்காக அர்பனித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான விடுதலை 2 படத்தில் இடம்பெற்ற பாடல்கள் வரை ரசிகர்களை தன்வசப்படுத்தினார். தற்போது இந்தியாவில் முதல்முறையா சிம்ஃபனி ஒன்றை உருவாக்கியுள்ளார் இளையராஜா. இசையில் மேதையாக கருதப்படும் இளையராஜாவின் பேச்சுக்கள் பல சமயங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்துவது வழக்கமாக இருந்து வருகிறது. அவரது கருத்துக்களுக்கு ஆதரவும் எதிர்வினைகளும் சம அளவில் இருந்து வருகின்றன. அந்த வகையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இளையராஜா பேசியுள்ளது மீண்டும் சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

எனக்கு ஏன் கருவம் இருக்கக் கூடாது ?

” உங்களை கட்டிப்போட வேண்டும் என்று நான் இசையமைக்கவில்லை. நான் ஒரு ட்யூனை உருவாக்குகிறேன் அது உங்களுக்கு இசைக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியாக தெரிகிறது. வயிற்றில் அசைவே இல்லாத ஒரு குழந்தைக்கு என்னுடைய இசை உயிரை கொடுத்திருக்கிறது. சிங்கப்பூரில் பெண் ஒருவரின் குழந்தை வயிற்றில் குழந்தை அசையாமல் இருந்திருக்கிறது. அந்த பெண் திருவாசகம் கேட்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். திருவாசகம் கேட்டது அந்த குழந்தைக்கு உயிர் வந்திருக்கு. தூக்கம் இல்லாமல் மதம் பிடிக்கும் எல்லைக்கு போன கோயின் யானை என்னுடைய தாலாட்டு பாட்டை கேட்டு தூங்கியிருக்கு. மலைப்பகுதியை ஒட்டிய ஒரு தியேட்டரில் ஒரு படம் ஓடிக் கொண்டிருக்கிறது. அப்போது நான் இசையமைத்த ராசாத்தி ஒன்ன காணாத நெஞ்சு பாட்டு ஓடுகிறது. அந்த பாட்டைக் கேட்க ஒரு பெரிய யானை கூட்டம் வந்து அந்த பாட்டை அமைதியாக கேட்டு திரும்பி செல்கிறது. உலகத்தில் எந்த இசையமைப்பாளருக்காவது இப்படி நடந்திருக்கா. இதை எல்லாம் நான் சொன்னால் எனக்கு தலைக்கனம் அதிகம் என்று சொல்வார்கள். எனக்கு வராமல் வேற எவனுக்குடா வரும்..எனக்குதான் கர்வம் அதிகம் இருக்கனும். ஏனால் உலகத்தில் யாராலும் செய்ய முடியாததை நான் செய்துகொண்டிருக்கிறேன். எனக்கு திமிரு இல்லாமல் எப்படி இருக்கும். ஆனால் எனக்கு திமிரு இல்லை . எனக்கு திமிரு என்று சொல்பவனுக்கு எவ்வளவு திமிரு இருக்கனும். விஷயம் இருக்கவன்கிட்ட கர்வம் இருக்காதா? ” என இளையராஜா பேசியுள்ளார்

Related Post

வடிவேல் பட பாணியில் ஓட்டி பார்த்துவிட்டு வாங்குவதாக கூறி காரை அபேஸ் செய்த ஆசாமி!

Posted by - July 24, 2025 0
கும்பகோணத்தில் வடிவேல் பட பாணியில், காரை ஓட்டி பார்த்துவிட்டு வாங்குவதாக கூறி கார் திருடி செல்லப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. கோவை மாவட்டம் வால்பாறையைச் சேர்ந்த சக்திவேல் என்பவர்,…

10% காவல் அதிகாரிகளை தவிர அனைவருமே போதை பொருள் கடத்தலுக்கு உடந்தை – பகீர் கிளப்பிய டாக்டர் ராமதாஸ்..!!

Posted by - September 20, 2024 0
போதை பொருள் கடத்தலுக்கு 850 போலீஸ் அதிகாரிகள் உடந்தை என்ற செய்தி தவறு. காவல்துறையில் உள்ளவர்களில் 10 சதவிதம் தவிர அனைவரும் உடந்தை என பாட்டாளி மக்கள்…

சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று தக்காளி கிலோவுக்கு ரூ.15 அதிகரிப்பு

Posted by - July 25, 2023 0
தக்காளி விலை தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும ஜெட்வேகத்தில் உயர்ந்து 100-க்கும் மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தென்மேற்கு பருவமழை காரணமாக தக்காளி உற்பத்தியில் பாதிப்பு, கனமழை…

சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளிபடும் நிகழ்வு- திரளான பக்தர்கள் தரிசனம்

Posted by - September 21, 2023 0
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் சங்கரலிங்கம், சங்கரநாராயணர், கோமதி அம்மன் ஆகிய 3 சன்னதிகள் அமைந்துள்ளன. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடந்து…

பழனி கோவிலில் “கந்த சஷ்டி விழா” வருகிற 13-ந்தேதி தொடக்கம்: 18-ம் தேதி சூரசம்ஹாரம்

Posted by - October 28, 2023 0
பழனி: பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோவிலில் கந்த சஷ்டி விழா வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து கலந்து கொள்வார்கள். அதன்படி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *