எல்லைப் பகுதியில் பதற்றம் : இந்தியாவுடனான உறவு தொடர்பாக சீனா எடுத்த முக்கிய முடிவு..!

230 0

இந்தியாவுடன் இணைந்து பணியாற்றத் தயார் என சீன வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடன் இணைந்து பணியாற்றத் தயார் என சீன வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அருணாச்சல பிரதேசத்தில் சீன – இந்திய எல்லைப் பகுதியான தவாங்கில் கடந்த 9ஆம் தேதி இரு நாட்டு வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் எல்லைப் பகுதியில் பதற்றம் உண்டானது. இதனைத் தொடர்ந்து கடந்த 20ஆம் தேதி இரு நாட்டு கமாண்டர்கள் அளவிலான 17வது சுற்றுப் பேச்சுவார்த்தை சுஷுல்-மால்டோ எல்லையில் நடைபெற்றது.

அதில், மேற்கு பகுதியில் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை உறுதிப்படுத்த முடிவு எட்டப்பட்டது. இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “இந்தியா – சீனா இடையே எஞ்சியுள்ள பிரச்னைகளுக்கு இரு நாடுகளும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வை விரைவில் உருவாக்க முடிவு எடுக்கப்பட்டது.இந்த நிலையில் இந்தியாவுடனான உறவு தொடர்பாக சீன பத்திரிகையாளர்கள் மத்தியில் இன்று அந்நாட்டு வெளியுறவுத் துறை வாங்க் யீ பேசினார். அப்போது, சீனா மற்றும் இந்தியா என இரு நாடுகளும் ராஜதந்திர மற்றும் ராணுவ வழி தொடர்புகளை பேணி வருகின்றன. இரு நாடுகளும் எல்லையில் அமைதி நிலவ வேண்டுமென உறுதிகொண்டுள்ளன. இரு நாட்டு உறவுகளின் உறுதியான வளர்ச்சியை உறுதிசெய்ய இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்தார்.இந்திய – சீன படை வீரர்களின் மோதலுக்குப் பிறகு சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வெளியிட்டுள்ள இந்த கருத்து முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

Related Post

Hero Splendor Electric: இந்தியாவின் நம்பர் ஒன் பைக்.. ஸ்ப்ளெண்டரை மின்சார எடிஷனில் களமிறக்கும் ஹீரோ – 180KM ரேஞ்ச்

Posted by - September 16, 2025 0
Hero Splendor Electric: இந்திய பைக் சந்தையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் ஸ்ப்ளெண்டர் மாடலை, மின்சார எடிஷனில் அறிமுகப்படுத்த ஹீரோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. Hero Splendor…

இந்தியாவுக்காக களமிறங்கிய ரஷ்யா; அமெரிக்க வரி மிரட்டல் சட்டவிரோதமானது என சாடல்

Posted by - August 6, 2025 0
இந்தியாவிற்கு அமெரிக்கா விடுக்கும் வரி மிரட்டலும், வர்த்தக அழுத்தமும் சட்டவிரோதமானது என இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடான ரஷ்யா தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய…

ஜப்பானில் விசித்திர நிகழ்வு- தீவு முழுவதும் சூழ்ந்த ஆயிரக்கணக்கான காகங்கள்: இயற்கை பேரழிவுக்கான அறிகுறியா?

Posted by - February 16, 2023 0
டோக்கியோ: ஜப்பானின் கிழக்கு பகுதியில் உள்ள ஹோன்சு தீவில் ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கான காகங்கள் கூட்டம் கூட்டமாக சூழ்ந்த விசித்திர நிகழ்வு அரங்கேறியுள்ளது. அங்குள்ள கட்டிடங்கள், சாலைகள்…

புதிய சிக்கலில் நித்தியானந்தா : பல லட்சம் ஏக்கர் அமேசான் காட்டை ஆக்கிரமித்ததாகப் புகார்!

Posted by - April 7, 2025 0
சர்ச்சைக்குப் பெயர் பெற்ற இந்து சாமியார் நித்தியானந்தா, தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் பல லட்சம் ஏக்கர் அமேசான் காடுகளை ஆக்கிரமித்த புதிய குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார். பரபரப்பை…

உக்ரைன் அணை உடைந்து பலியானோர் எண்ணிக்கை 48 ஆக உயர்வு

Posted by - June 27, 2023 0
கீவ் : உக்ரைனின் கெர்சன் நகரில் உள்ள டினிப்ரோ ஆற்றின் மீது நோவா ககோவ்கா அணைக்கட்டு உள்ளது. 1956-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அணை 30 மீட்டர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *