உக்ரைன் அணை உடைந்து பலியானோர் எண்ணிக்கை 48 ஆக உயர்வு

227 0

கீவ் :

உக்ரைனின் கெர்சன் நகரில் உள்ள டினிப்ரோ ஆற்றின் மீது நோவா ககோவ்கா அணைக்கட்டு உள்ளது. 1956-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அணை 30 மீட்டர் உயரமும், 3.2 கிலோ மீட்டர் நீளமும் கொண்டது. சுமார் 7 லட்சம் பேர் இந்த அணையில் உள்ள நீரை நம்பி உள்ளனர். இங்கு மிகப்பெரிய நீர்மின் நிலையம் செயல்படுகிறது.Death toll rises to 48 in Ukraine dam collapse

இந்தநிலையில் கடந்த 5-ந் தேதி உக்ரைனுக்கு எதிராக ரஷிய ராணுவத்தினர் வான்வழி தாக்குதல் நடத்தினர். இதில் ககோவ்கா அணைக்கட்டு உடைந்து தண்ணீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. இதற்கு ஐ.நா.சபை மற்றும் உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்தன. ஆனால் இந்த சம்பவத்துக்கு உக்ரைனும், ரஷியாவும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்த சம்பவத்தால் உலகளாவிய உணவுச்சங்கிலியில் பாதிப்பு ஏற்படும் எனவும், லட்சக்கணக்கானோருக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படலாம் எனவும் ஐ.நா. சபை எச்சரிக்கை விடுத்தது. இதற்கிடையே பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் சுமார் 40 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். எனினும் இந்த வெள்ளத்தில் மூழ்கி 15-க்கும் மேற்பட்டோர் பலியானதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனால் தற்போது பலி எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளதாக உக்ரைன் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Related Post

கத்தார், ஈராக்கில் அமெரிக்க நிலைகள் மீது ஈரான் தாக்குதல்; பதற்றத்தால் விமான சேவை பாதிப்பு

Posted by - June 24, 2025 0
கத்தார், ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் மீது ஈரான் தாக்குதலை நடத்தியதையடுத்து, மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதிகளுக்கு செல்லும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.…

உலக நாடுகளை தெறிக்கவிட்ட ஈரான்; 4000 கிமீ பாய்ந்த பாலிஸ்டிக் ஏவுகணை; அலறும் அமெரிக்கா,பிரிட்டன்

Posted by - March 21, 2026 0
மத்திய கிழக்கில் போர் தொடரும் நிலையில், இந்தியப் பெருங்கடலில் உள்ள அமெரிக்க, பிரிட்டிஷ் ராணுவ தளங்கள் அமைந்துள்ள டியாகோ கார்சியாவை ஈரான் குறிவைத்திருப்பது, ராணுவ நிபுணர்களிடையே கவலைகளை…

90 சதவீதம் காலி.. ரஷியா ராணுவம் பற்றி அமெரிக்கா வெளியிட்ட பகீர் தகவல்..

Posted by - December 13, 2023 0
ரஷியா மற்றும் உக்ரைன் இடையிலான போர் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் இருதரப்பிலும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த போர்…

நாடு முழுவதும் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

Posted by - December 25, 2023 0
நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வேளாங்கண்ணியில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் திரளானோர் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர். நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில்…

பொருளாதார தடைகளுக்கு பயந்த நாடல்ல இந்தியா!

Posted by - September 8, 2025 0
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி, இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீத வர்த்தக வரி விதித்துள்ளதன் மூலம், அந்நாட்டுக்கு ஏற்றுமதி செய்து வந்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *