புத்தாண்டில் தொண்டர்களை சந்திக்கிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்

201 0

விஜயகாந்தை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கலாம் தேமுதிக தலைமை கழகம் அறிவிப்பு..

ஆங்கில புத்தாண்டு அன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த தொண்டர்களை சந்திக்கவுள்ளதாக அந்த கட்சி தலைமை அறிவித்துள்ளது.

கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களுக்கு எதிராக அரசியல் களத்தில் கலக்கிய விஜயகாந்த், கட்சி தொடங்கிய ஓராண்டிலேயே 2006-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டார். விருத்தாசலம் தொகுதியில் விஜயகாந்த் வெற்றியை ருசித்த நிலையில் தே.மு.தி.க வேட்பாளர்கள் யாரும் எதிர்பாராத வகையில் கணிசமான வாக்குகளை பெற்றார்.

முதல் தேர்தலிலேயே (2006-ம் ஆண்டு) 10 சதவீத வாக்குகளை பெற்ற தே.மு.தி.க. பின்னர் நடந்த பாராளுமன்ற தேர்தலையும் (2009-ம் ஆண்டில்) தனித்தே சந்தித்தார். இந்த தேர்தலிலும் தே.மு.தி.க. பெருவாரியான ஓட்டுகளை பெற்றது. 9-ல் இருந்து 10 சதவீத ஓட்டுகள் இந்த தேர்தலிலும் கிடைத்தன. மேலும் அடுத்தடுத்து தேர்தலில் விஜயகாந்தின் உடல்நிலை சரியில்லாமல் போனதால் அந்த கட்சியின் வாக்கு வங்கியும் பாதியாக குறைந்தது.

இதனையடுத்து விஜயகாந்தின் உடல்நிலை பாதித்த  நிலையில் அந்த கட்சியில் இருந்த பெரும்பாலனோர் மாற்று கட்சியில் இணைந்தனர். மேலும் அவரது உடல்நிலையில் அவர் பொதுவெளியிலும் வெளிப்படாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லாத நிலையில் அவரது மனைவி பிரேமலதாவே தற்போது கட்சியை வழி நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் ஒவ்வொரு புத்தாண்டு அன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது தொண்டர்களை சந்தித்து வருவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் காலை 11 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை தொண்டர்களை சந்திக்கவுள்ளதாகவும் தொண்டர்கள் விஜயகாந்தை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கலாம் தேமுதிக தலைமை கழகம் அறிவித்துள்ளது.

Related Post

சென்னை ஓட்டுநர் வங்கி கணக்கில் டெபாசிட் ஆன 9 ஆயிரம் கோடி ரூபாய்…!

Posted by - September 21, 2023 0
சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த கார் ஓட்நர் ராஜ்குமாரின் வங்கி கணக்கில் 9 ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் ஆன சம்பவம் நடைபெற்றுள்ளது. கடந்த 9-ந்தேதி திடீரென அவரது…

அனிருத் முதல் மணிகண்டன் வரை! கலைமாமணி விருதுகள் 2021-2023 யார் யாருக்கு விருதுகள்?

Posted by - September 24, 2025 0
 கடந்த மூன்று ஆண்டுகளாக கலைமாமணி விருதுகள் வழங்கப்படாமல் இருந்த நிலையில் தற்பொது 2021, 2022, 2023 ஆம் ஆண்டுக்கான விருதுகள் …. 2021, 2022, 2023ம் ஆண்டுகளுக்கான…

தென் தமிழகத்தில் இடி, மின்னலுடன் வெளுக்கப்போகும் கோடை மழை..

Posted by - April 30, 2024 0
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில்  இடி மின்னலுடன் கூடிய லேசானது…

நிலக்கரி எடுக்க எழுந்த எதிர்ப்பு… டெல்டாவில் எதற்கெல்லாம் அனுமதி கிடையாது தெரியுமா?

Posted by - April 4, 2023 0
பாதிப்பை ஏற்படுத்தும் தொழிற்சாலைகளையும், திட்டங்களையும் இந்த பகுதிகளில் செயல்படுத்த முடியாது காவிரி டெல்டா பகுதி, ஏற்கெனவே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு எதற்கெல்லாம் அனுமதியில்லை…

“வெடிகுண்டு வச்சிருக்கேன்; தூக்கி வீசுனா என்ன ஆவீங்க” – ஐயா பிரகாஷ்ராஜ் பாணியில் மிரட்டல் விடுக்கும் சீமான்!

Posted by - January 29, 2025 0
பிரபாகரனிடம் பெரியார் தொண்டர்கள் போகாதீர்கள். நீங்கள் வைத்திருப்பது பெரியார் எனும் வெங்காயம். என் தலைவன் பிரபாகரன் கையில் இருப்பது வெடிகுண்டு. பிரபாகரன் கொடுத்த வெடிகுண்டை வைத்திருக்கிறேன் எனவும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *