நிலக்கரி எடுக்க எழுந்த எதிர்ப்பு… டெல்டாவில் எதற்கெல்லாம் அனுமதி கிடையாது தெரியுமா?

197 0

பாதிப்பை ஏற்படுத்தும் தொழிற்சாலைகளையும், திட்டங்களையும் இந்த பகுதிகளில் செயல்படுத்த முடியாது

காவிரி டெல்டா பகுதி, ஏற்கெனவே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு எதற்கெல்லாம் அனுமதியில்லை என்பதை பார்க்கலாம்…

கடந்த 2020ஆம் ஆண்டு தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய காவிரி படுகை மண்டலம், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, வேளாண்மைக்கு நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தும் தொழிற்சாலைகளையும், திட்டங்களையும் இந்த பகுதிகளில் செயல்படுத்த முடியாது என அறிவிக்கப்பட்டது.

குறிப்பாக, ஹைட்ரோகார்பன், மீத்தேன் உள்ளிட்ட இயற்கை எரிவாயுகளுக்கான ஆய்வு, எரிவாயு பிரித்தெடுத்தல் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் விவசாயம் அல்லாத பணிகளுக்கு துளையிடுவதற்கும் அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. துத்தநாக உருக்காலை, இரும்புத் தாது ஆலை, ஒருங்கிணைந்த எஃகு ஆலை, தாமிரம், அலுமினிய உருக்காலைகளை அமைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதிகளில் விலங்குகளின் உடல் பாகங்களை பதப்படுத்துதல், தோல் பதனிடும் தொழிற்சாலைகள் தொடங்கவும் அனுமதி கிடையாது என கூறப்பட்டுள்ளது.

Related Post

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது… 91.55% பேர் தேர்ச்சி- இம்முறையும் மாணவிகளே அதிக தேர்ச்சி!

Posted by - May 10, 2024 0
தமிழ்நாட்டில் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்ட எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம்…

தாலிக்கு தங்கம் திட்டத்தின் மூலமாக தங்கத்தை வாரி வழங்கியதுதான் அதிமுக அரசாங்கம் – இபிஎஸ்

Posted by - April 13, 2024 0
தாலிக்கு தங்கம் திட்டத்தின் மூலமாக தங்கத்தை வாரி வழங்கியது தான் அதிமுக அரசாங்கம் என தமிழக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக…

2023 சென்னை வெள்ளத்தை விடுங்க! 2015ல் செம்பரம்பாக்கம் ஏரியில் நடந்தது என்ன? இரவில் பறந்த அந்த ஆர்டர்

Posted by - December 13, 2023 0
சென்னை: கடந்த 2015 ஆம் ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரியில் நடந்தது என்ன என்பது குறித்து சென்னை வெதர் ட்விட்டர் பக்கத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையில் மிக்ஜாம் புயலால்…

சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் – உயர் நீதிமன்றம் அதிரடி

Posted by - November 6, 2023 0
எந்த மதத்திற்கு எதிராக பேசுவதற்கும் நீதிமன்றம் அனுமதிக்காது – நீதிபதி. சனாதான ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர் பாபு ஆகியோர்…

பேனர் வைக்கக் கூடாது – அதிரடி உத்தரவிட்ட நடிகர் விஜய்.. ஊக்கத்தொகை வழங்கும் விழாவுக்காக பறந்த உத்தரவு!

Posted by - June 15, 2023 0
Actor Vijay : 10, +2 மாணவர்களுக்கு நடிகர் விஜய் ஊக்கத் தொகை வழங்கும் விழா குறித்து அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் திரைப்படங்களில் நடிப்பதைத்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *