நடிகர் ஶ்ரீ நிலமைக்கு இந்த தயாரிப்பு நிறுவனம் தான் காரணமா…வெளியான அதிர்ச்சித் தகவல்

216 0

நடிகர் ஶ்ரீ நடிப்பில் இறுதியாக வெளியான இறுகப்பற்று திரைப்படத்திற்கு சம்பளம் தராததே அவரது தற்போதைய நிலைக்கு காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் ஶ்ரீ

விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடர் வழியாக கவனமீர்த்தவர் நடிகர் ஶ்ரீ. பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் 18/9 திரைப்படத்தில் இவரது நடிப்பு பெரியளவில் பாராட்டுக்களைப் பெற்றது. தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்குநராக அறிமுகமான மாநகரம் , வில் அம்பு , இறுக பற்று ஆகிய படங்கள் இவருக்கு நல்ல அங்கீகாரத்தைப் பெற்று தந்தன. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ்  நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஶ்ரீ அந்த நிகழ்ச்சியை விட்டு நான்கு நாட்களில் வெளியேறினார். ஶ்ரீயின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றன. உடல் மெலிந்த நிலையில் நீண்ட தலைமுடியும் ஶ்ரீ வெளியிட்டுள்ள புகைப்படம் அவரது உடல் நலத்தைப் பற்றிய பல கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும் அவர் பாலின  மாற்று சிகிச்சை செய்துகொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஶ்ரீ நிலமைக்கு யார் காரணம்

சினிமாவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வரும் ஶ்ரீக்கு இதுவரை பெரியளவில் அங்கீகாரம் கிடைக்கவில்லை. இது தவிர அவர் நடித்த வில் அம்பு மற்றும் இறுக பற்று ஆகிய இரு படங்களுக்கு சம்பளம் கொடுக்கப்படவில்லை என்பதே அவரது தற்போதைய  நிலைக்கு காரணம். ஶ்ரீ நடித்த இறுக பற்று திரைப்படம் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியானது. பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரித்தது. இந்த தயாரிப்பு நிறுவனத்தை விமர்சித்து ஶ்ரீ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதில் அவர் பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரித்த இறுக பற்று படத்தில் நடித்ததற்கு அவமானப்படுகிறேன். நடிகர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் உங்களால் நழுவிவிட முடிகிறது என்றால் நீங்கள் ரொம்ப சாமர்த்தியசாலிதான். என்னுடை சம்பளம் வந்துவிடும் என நானும் இத்தனை நாள் நம்பிக் கொண்டிருந்தேன். ” என அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் ஶ்ரீ தற்போது மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தற்போது அவர் மன நல சிகிச்சையில் இருந்து வருவதாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள். ஶ்ரீயின் குடும்பத்தினர் அவரை மீட்டு கொண்டு வர போராடி வருவதாக கூறப்படுகிறது. நடிகர் ஶ்ரீக்கு சம்பளம் வழங்காத தயாரிப்பு நிறுவனம் மேல் தயாரிப்பாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்ஸ் மத்தியில்  கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது

Related Post

தலைமறைவான வெங்கட் பிரபு…….

Posted by - August 5, 2024 0
விஜய் கிட்டத்தட்ட 67 படங்களில் நடித்து முடித்த நிலையில் ஒரு சில படங்கள் எதிர்பார்க்காத அளவிற்கு ஃபெய்லியர் படமாக மக்களிடமிருந்து மொக்கையான விமர்சனங்களை பெற்றிருக்கிறது. ஆனால் இது எல்லாம்…

இதுவரை தமிழ் சினிமாவில் யாரும் செய்யாத சாதனையை செய்த விஜய்.. வேற லெவல்

Posted by - July 17, 2023 0
தளபதி 68 தளபதி விஜய் நடிப்பில் தற்போது லியோ படம் உருவாகி வருகிறது. இப்படத்தை தொடர்ந்து தளபதி 68 படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். வெங்கட் பிரபு இயக்கும்…

கனவுக்கன்னி டூ வில்லி.. தமிழ் சினிமாவின் எவர்கிரீன் நாயகி சிம்ரன்.!

Posted by - April 4, 2023 0
 90களில் பிறந்த குழந்தைகளுக்கு கனவு கன்னி என்றவுடன் சட்டென்று நினைவுக்கு வரும் நடிகை சிம்ரனின் பிறந்தநாளான இன்று அவரது திரை வாழ்க்கையை திரும்பி பார்க்கலாம்.சிலையைப் போன்ற உடலமைப்பு,…

பராசக்தி டைட்டில் யாருக்கு.. சர்ச்சைக்கு ஏவிஎம் நிறுவனமே வைத்த முற்றுப்புள்ளி

Posted by - January 30, 2025 0
நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்து நடித்து வரும் படம் பராசக்தி., படத்தின் டைட்டிலை டீஸர் வெளியிட்டு படக்குழு அறிவித்து இருந்தது. ஆனால் பராசக்தி என்ற டைட்டிலை தான் வாங்கி…

கொஞ்ச நாட்களாகவே கோக்கு மாக்கா திரியும் விஷால்.. சந்தைக்கு போனும் காசு குடுன்னு வளர்ந்த தம்பி செய்யும் அக்கப்போர்

Posted by - November 20, 2024 0
விஷால் வருடத்திற்கு ஒரு படங்கள் தான் நடித்து வருகிறார். கடைசியாக நடித்த படம் ரத்னம் அதுவும் சரியாக போகவில்லை. இப்பொழுது கைவசம் எந்த படமும் இல்லை. சுதா…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *