ஒரு தேங்காய் பன்னு சாப்பிட அலைவேன்.. எமோஷனலாக பேசிய நடிகர் சூரி..

257 0

சூரி

நகைச்சுவை நடிகராக பிரபலமாகி, இன்று கதாநாயகனாக ஜொலித்து கொண்டு இருக்கிறார் சூரி. இவர் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் மாமன்.

எமோஷனல் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை பிரஷாந்த் பாண்டிராஜ் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் விலங்கு என்கிற சூப்பர்ஹிட் வெப் சீரிஸ் இயக்கியிருந்தார். இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.

மேலும் ராஜ்கிரண், ஸ்வாசிகா, பாலசரவணன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். வருகிற 16ம் தேதி இப்படம் திரையரங்கில் ரிலீஸாகிறது.

எமோஷனலாக பேசிய நடிகர் சூரி

 

இப்படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், திருப்பூர் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற இப்படத்தின் விழாவில் படக்குழு கலந்துகொண்டனர். இதில் சூரி எமோஷனலாக பேசியது படுவைரலாகி வருகிறது.”நான் எட்டாவது படிக்கும்போது எல்லாத்தையும் விட்டுட்டு திருப்பூருக்கு வேலைக்காக வந்துட்டேன். அப்போ ஒரு நாளைக்கு 20 ரூபாய் சம்பளம். ஏழு நாளுக்கு 140 ரூபாய் வரும். அதில் 70 செலவு பண்ணிட்டு, மீதி 70 ஊருக்கு அனுப்புவேன். அப்போ திருப்பூரில் ஒரு தேங்காய் பன்னு சாப்பிட அலைவேன். இன்று அதே திருப்பூரில் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தது பெருமையாக உள்ளது” என பேசியுள்ளார்.

Related Post

மதுவால் எனது மதிப்பு மிக்க வாழ்க்கையை இழந்தேன்- மனிஷா கொய்ராலா உருக்கம்

Posted by - July 19, 2023 0
நடிகை மனிஷா கொய்ராலா தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் பம்பாய், கமல்ஹாசனின் இந்தியன், அர்ஜுனின் முதல்வன், ரஜினியின் பாபா உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஏராளமான இந்தி…

தமிழ் சினிமாவை புரட்டி போடுவோம்.. தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி.. உணர்ச்சிவசப்பட்ட கமல்

Posted by - June 5, 2025 0
தக் லைஃப் படம் நாளை வெளியாகும் நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய கமல்ஹாசன் நா தழுதழுக்க உணர்ச்சிவசப்பட்டு பேசினார். தமிழ் மக்களை மறக்கமாட்டேன் என பேசியுள்ளார்.…

ஜனநாயகன் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி.. செம மாஸ் அப்டேட்

Posted by - November 25, 2025 0
ஜனநாயகன் தளபதி விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் வருகிற 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி…

முன்னணி நடிகரின் சூப்பர்ஹிட் படத்தை தவறவிட்ட நயன்தாரா.. வாய்ப்பை அழகாக பயன்படுத்திய 35 வயது நடிகை

Posted by - August 9, 2023 0
நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவரை லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இவர் நடிப்பில் அடுத்ததாக ஜவான் திரைப்படம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *