அசிடிட்டி என்பது என்ன.. எதனால் ஏற்படுகிறது..பொதுவாக நமது உடலில் இயற்கையாகவே சிறியளவிலான ஆசிட் சுரப்பு இருக்கும். இது எதற்காக என்றால், நாம் உண்ணும் உணவை செரிமானம் செய்வதற்கானதாகும். இந்த ஆசிட்டானது அளவுக்கு அதிகமாக சுரக்கும்போதுதான் அசிடிட்டி ஏற்படுகிறது. இது ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவை சரியான அளவு உணவு உட்கொள்ளாதது மற்றும் தொடர்ந்து மது அருந்துதல், வலி நிவாரணி மாத்திரைகள் தொடர்ந்து உட்கொள்வது போன்றவற்றினால் ஆசிட் அதிகளவு சுரக்கிறது.இந்தஅதிகளவிலான ஆசிட் என்ன செய்யும் என்றால் நமது வயிற்றில் உள்ள லேயர்ஸை கொஞ்சம் கொஞ்சமாக அரிக்கத் தொடங்கி வயிற்றில் வலியை ஏற்படுத்தும். இது இன்னும் ஆழமாக சென்று அரிக்கும்போதுதான் அல்சராக மாறுகிறது.
இந்த அசிடிட்டி ஏற்பட மற்றொரு காரணம், காரம், உப்பு, புளிப்பு மூன்றும் உள்ள உணவு வகைகளை அதிகம் எடுத்துக்கொள்வதனாலும் ஏற்படும். அதுபோன்று நாம் சரியாக சாப்பிடாமல் பட்டினியாக இருப்பது, ரத்தக் கொதிப்பு, மன அழுத்தம், செரிமானத்தில் பிரச்னைகள் இருப்பது, புகை மற்றும் மதுப்பழக்கங்களுக்கு அடிமையாவது, உடல் எடை அதிகம் இருப்பது, வயது முதிர்தல், வெப்பமான சூழலில் அதிகம் இருப்பது போன்றவையும் அமிலத்தன்மையை பெருக்கி, அசிடிட்டியை உருவாக்கும்.
அசிடிட்டியின் அறிகுறிகள் என்னென்ன..
நெஞ்செரிச்சல் அதாவது வயிற்றின் மேல் பகுதியில் எரிச்சல் உணர்வு ஏற்படுவது, புளித்த ஏப்பம், நாள்பட்ட சளி, வாந்தி, மூச்சுத்திணறல் போன்றவை பொதுவான அறிகுறிகளாகும். இதுவே, தொடர்ந்து நீடித்தால், நிறைய பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதாவது குரல்வளை வீக்கம், நாள்பட்ட வறண்ட இருமல், உணவு விழுங்குவதில் சிரமம், நுரையீரல் மற்றும் இரைப்பை அழற்சி, இரைப்பைப் புண் (மிகுந்த வயிற்று எரிச்சலோடு), அல்சர் போன்றவை ஏற்படக்கூடும்.
சிகிச்சைகள்
நெஞ்செரிச்சல் உணர்வு சில நாள்களாக தொடர்ந்து இருக்கிறது என்றால், உடனே மருத்துவரை அணுகி பரிசோதித்துக் கொள்ள வேண்டும். அசிடிட்டி எந்த கட்டத்தில் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஆரம்ப நிலையில் இருக்கிறதா இல்லை அல்சர் கட்டத்தில் இருக்கிறதா அல்லது வேறு ஏதேனும் காரணத்தினால் அசிடிட்டி ஏற்பட்டிருக்கிறதா என்பதை அறிந்துக் கொள்ள வேண்டும். பின்னர், அதற்கு தகுந்த சிகிச்சையை மருத்துவர் பரிந்துரைப்பார்.
இந்த அனைத்து கட்டங்களையும் தாண்டி தீவிர நிலையில் இருப்பவர்களுக்கு அறுவை சிகிச்சைக் கூட மேற்கொள்ளப்படுகிறது. மற்றபடி பொதுவான சிகிச்சை என்று எடுத்துக் கொண்டால், நாம் முதலில் செய்ய வேண்டியது நம்முடைய வாழ்க்கை முறையை மாற்றி அமைப்பதுதான். தினசரி உணவை நேரத்துக்கு உண்ணுவது, உணவில் காரம் குறைத்துக் கொள்வது, தண்ணீர் நிறைய குடிப்பது, மது பழக்கத்திலிருந்து விடுபடுவது இவற்றை கடைபிடித்துக்கொண்டு, அதன் கூட மருத்துவரின் ஆலோசனைப்படி தேவையான மருந்து மாத்திரைகளை முறையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
அசிடிட்டி ஏற்பட்டதும் எடுத்துக் கொள்ள வேண்டிய முதலுதவி என்ன..
அசிடிட்டியைப் பொருத்தவரை, முதலுதவி என்று சொல்லுவதைவிட, நெஞ்செரிச்சல் அதிகம் இருந்தால் உடனே மருத்துவரை அணுகிவிட வேண்டும். ஏனென்றால் பெரும்பாலானவர்களுக்கு இது அசிடிட்டியினால் ஏற்படும் வலியா அல்லது ஹார்ட் அட்டாக்கிற்கான வலியா என தெரிந்து கொள்ள முடிவதில்லை. அவர்கள் அசிடிட்டி என்று நினைத்து தானாகவே மருந்தகத்தில் மாத்திரை வாங்கி போட்டுக் கொண்டு, அதன்பிறகும் சரியாகாமல் ஒரு 6 மணி நேரம் கடந்து வரும்போது, காப்பாற்றுவதில் சிரமம் ஏற்படுகிறது.
எனவே, வலியை வித்தியாசமாக உணர்கிறார்கள் என்றால் உடனே மருத்துவரை அணுகுவதுதான் சிறந்தது. ஏனென்றால் அசிடிட்டி உயிருக்கு ஆபத்தானது கிடையாது. ஆனால், அசிடிட்டி மாதிரியே வலி கொடுக்கிற ஹார்ட் அட்டாக் உயிருக்கு ஆபத்தானது. எனவே, வலி அதிகம் இருந்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
செய்யவேண்டியவைநெஞ்செரிச்சலாக இருக்கிறது என்று, உணவு உண்பதை தவிர்க்கக் கூடாது. பசி ஏற்படவில்லை என்றாலும், தேவையான அளவு ஆகாரம் எடுத்துக் கொள்ள வேண்டும். நேரத்திற்கு உணவு உண்ண வேண்டும். தினமும் 3-4 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். தினமும் அரை மணி நேரமாவது உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்ய வேண்டும். மன அழுத்தத்தை குறைக்க வேண்டும். மதுப்பழக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க வேண்டும். காபி, டீ போன்றவற்றை தவிர்த்தல் நல்லது. இவற்றையெல்லாம் கடைப்பிடித்தாலே அசிடிட்டியில் இருந்து விரைவில் விடுபடலாம்.
- Home
- பொழுதுபோக்கு
- அசிடிட்டி தடுக்க… தவிர்க்க!
Related Post
கிராமத்து ஸ்டைலில் ஆட்டு குடல் குழம்பு செய்வது எப்படி-ன்னு தெரியுமா?
உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ஆட்டு குடல் சாப்பிட பிடிக்கும். ஆனால் அதை எப்படி சமைப்பது என்று தெரியாதா? அப்படியானால் இன்று ஆட்டு குடலை எப்படி சமைப்பது என்று…
அநாகரிகமாக வன்மத்தை கக்கிய அர்னாவ்! கடுமையாக எச்சரித்த விஜய் சேதுபதி!
பிக் பாஸ் 8ம் சீசன் வீட்டில் இருந்து இன்றைய எபிசோடில் அர்னாவ் எலிமினேட் செய்யப்பட்டார். அவர் கடந்த ஒரு வாரமாக ஆண்கள் டீம் உடன் சண்டை போட்டு…
நாய்கள் இடதுபுறம் வாலாட்டினால்.. கொலைவெறியாம்!
நாய்கள் நம்மைப் பார்த்து வாலாட்டி னால் அதை அன்பின் வெளிப்பாடாகத்தான் இதுவரை நினைத்துக் கொண்டிருக்கிறோம். இனிமேல் அப்படி பொத்தாம் பொதுவாக நினைத்துவிடாதீர்கள். நாய்கள் வாலாட்டுவதிலும் ஒரு சூட்சுமம்…
உங்க வீட்ல இட்லி மாவு இருக்கா… அப்போ வாங்க மொறு மொறு கார போண்டா செய்யலாம்.!
நாம் இன்று இங்கே பார்க்கப்போகும் ரெசிபியானது வீட்டில் உள்ள இட்லி மாவை வைத்து சூடான மொறு மொறு போண்டா எப்படி செய்யலாம் என்று தான். ஒரு சிலருக்கு…
எழில், அமிர்தா வாழ்க்கையில் நடக்கப்போகும் அதிர்ச்சி சம்பவம்- பரபரப்பின் உச்சத்தில் பாக்கியலட்சுமி புரொமோ
பாக்கியலட்சுமி சீரியல் பாக்கியலட்சுமி சீரியல், ஒரு குடும்ப தலைவியின் கதை என்ற அடைமொழியுடன் தொடங்கியது. ஆரம்பத்தில் கதை புதுமுகங்கள் சிலர் இருக்கவே சாதாரணமாக தான் ஓடியது, ஆனால்…
Categories
- MEMES (12)
- அரசியல் (184)
- இந்தியா (468)
- உலகம் (173)
- சினிமா (812)
- தமிழ்நாடு (1,085)
- தமிழ்நாடு தேர்தல் 2026 (255)
- பொழுதுபோக்கு (698)
- விளையாட்டு (84)
Recent Posts
- ஜோசியமா? பழைய கர்மாவா? – அண்ணாமலை – மோடிக்கே கல்தா ஏன்?

- 500 சவரன் தங்கம், வெள்ளி, ரூ.537 கோடி பணம், கார்கள்… தவெக விஜய் சொத்து மதிப்பு தெரியுமா?

- நாச்சியார்கோவில் கல் கருட சேவை: மர்மம் நிறைந்த 4 டன் கருடன்… அதிகரிக்கும் எடை, ஆச்சரியத்தில் பக்தர்கள்

- “தவெக பிரச்சாரத்துக்கு முட்டுக்கட்டை போடுவது பாசிச தாக்குதல்” – விஜய் ஆவேசம்

- திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பிடிக்கும் பிரமாண்ட அறிவிப்பு!!! எகிறும் எதிர்பார்ப்பு
