குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

234 0

தேர்தலில் தி.மு.க.வுக்கு பாடம் புகட்டுவோம்-பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கொந்தளிப்பு

செங்கல்பட்டு

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு குரோம்பேட்டை பேருந்து நிலையத்தை தி.மு.க.வினர் ஆக்கிரமித்து அராஜகத்தில் ஈடபட்டனர். இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, வருகின்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு பாடம் புகட்டுவோம் என்று கொந்தளிப்புடன் கூறினர்.

செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டை பேருந்து நிலையத்தை ஆக்கிரமிப்பு செய்த பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். அமைச்சர் தா.மோ.அனபரசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இதற்காக பேருந்து நின்று செல்லும் பேருந்து நிலையத்தை ஆக்கிரமிப்பு செய்து, முற்றிலும் பேரிகார்டு மூலம் தடுப்புகள் போட்டு பேருந்து நிலையத்தை மூடி விட்டனர். இதனால் கொழுத்தும் வெயிலில் பொதுமக்கள் ஜி.எஸ்.டி.சாலையில் நீண்ட நேரம் நின்றிருந்தனர்.

பேருந்துகளும் சாலையிலேயே நின்றது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். இதில் மாற்றுத்திறனாளிகள் பெரியவர்கள் முதியவர்கள் பெண்கள் உள்ளிட்டோர் பல மணி நேரம் வெயிலில் காக்க வைக்கப்பட்டதால் கடும் அவதிப்பட்டனர்.

முதல்வரின் மகன் என்பதால் ஒரு சாதாரண சட்டமன்ற உறுப்பினருக்காக குரோம்பேட்டை பேருந்து நிலையத்தை ஆக்கிரமிப்பு செய்து நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, மண்டலத்தலைவர் ஜோசப் அண்ணாதுரை ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேருந்திற்காக காத்திருந்த பயணிகள் புலம்பினர்.

இதனை பார்த்த சமூக ஆர்வலர்கள் கடுமையாக கண்டனத்தை தெரிவித்துள்ளனர். ஆளும் விடியா திராவிட மாடல் அரசு வருங்கால வாரிசு அரசியலுக்காக அவரிடத்தில் நன்மதிப்பு பெற வேண்டும் என்ற நோக்கில் பொதுமக்கள் அன்றாட பயன்படுத்தக்கூடிய முக்கிய இடமான பேருந்து நிலையம் மற்றும் அருகில் உள்ள குரோம்பேட்டை அஞ்சலகம் நிலையம் அனைத்தையும் ஆக்கிரமிப்பு செய்து தங்களது ஆளும் கட்சி என்ற மமதையில் கொஞ்சம் கூட பொதுமக்களுக்கு சேவை செய்ய தங்களை தேர்ந்தெடுத்து உள்ளார்கள் என்ற கவலையும் இல்லாமல் மிகப்பெரிய அராஜகத்தில் ஈடுபட்டது விடியா திமுகவின் உச்சபட்ச அராஜகத்தை இந்த சம்பவம் எடுத்துக்காட்டி உள்ளது.

இதேபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் வருகின்ற தேர்தலில் மக்கள் கண்டிப்பாக தி.மு.க.வுக்கு பாடம் புகட்டுவார்கள் என சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் தெரிவித்தனர்.

Related Post

அடுத்த ரவுண்டுக்கு ரெடியா.. புயல்? உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. கனமழை கன்ஃபார்ம்

Posted by - October 22, 2025 0
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, 12 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமான வலுவடையக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வடமாவட்டங்களில்…

யார் அந்த சார்? பேட்ஜ்.. சட்டப்பேரவையின் முதல் நாளே அதிரடியாக ஆரம்பித்த அதிமுக!

Posted by - January 6, 2025 0
பிற்பகல் நடைபெறும் அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில், சட்டப்பேரவை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்பட உள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை இன்னும் சற்று நேரத்தில்…

பிற மாநாடுகளுக்கு அனுமதி அளிக்கும் போது முருக பக்தர்கள் மாநாட்டுக்கு மட்டும் கட்டுப்பாடு விதிப்பது ஏன்? – உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி!

Posted by - June 7, 2025 0
மதுரையில் பிற மாநாடுகளுக்கு அனுமதி அளித்தபோது முருக பக்தர்கள் மாநாட்டுக்கு மட்டும் அனுமதி வழங்க மறுப்பது ஏன் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. இந்து…

கள்ளக்காதல் ஜோடியை திட்டம் போட்டு சிக்க வைத்த வாலிபர்கள்: இளம்பெண் தற்கொலை முயற்சி

Posted by - November 21, 2023 0
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கிப்பாளையம் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவர்…

பூர்ணிமாவை லவ் பண்றிங்களா? விஷ்னு ஷாக்கிங்..

Posted by - January 24, 2024 0
பொதுவாக பிக் பாஸ் என்றாலே நல்ல வாழ்கை கிடைக்கும் நிறைய வாய்ப்புகள் கிடைக்கும் லட்சம் லட்சமாக பணம் கிடைக்கு என்ற காலம் போய் இன்று சண்டைகளுக்கு சர்ச்சைகளுக்கும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *