தமிழக பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது திமுக அரசின் கடமை : அண்ணாமலை

158 0

தேசிய மகளிர் ஆணையத்தின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து, தமிழகப் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது திமுக அரசின் கடமை என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

அரக்கோணம் திமுக இளைஞரணி நிர்வாகியால் கல்லூரி மாணவி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கை, தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது.

அரக்கோணம் கல்லூரி மாணவி, தான் கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழிக்கப்பட்டிருக்கிறார். மாணவி கொடுத்த புகாரின் கீழ், கடந்த 10 ஆம் தேதி அன்றே வழக்குப் பதிவு செய்ததாகக் கூறும் காவல்துறை, இதுவரை, திமுக இளைஞரணி நிர்வாகியைக் கைது செய்யவில்லை என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.மாறாக, மாணவி காவல்துறையிடம் கொடுத்த ஆதாரங்களை, திமுகவினர் சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகவும் மாணவி குற்றம் சாட்டியிருக்கிறார்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி, பாலியல் தாக்குதலுக்கு ஆளான வழக்கில், மாணவி குறித்த தனிப்பட்ட தகவல்களை வெளியிட்டு அச்சுறுத்த முயற்சித்த திமுகவின் கீழ்த்தரமான செயல்பாடு, திமுகவினர் ஈடுபடும் அனைத்து பாலியல் குற்றங்களிலும் தொடர்கிறது என்பதையே இது காட்டுகிறது.

இத்தகைய சூழலில், தேசிய மகளிர் ஆணையத்தின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து, தமிழகப் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது திமுக அரசின் கடமை என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Related Post

பா.ம.க.வில் இருந்து அன்புமணி நீக்கம்- ராமதாஸ் அதிரடி

Posted by - September 11, 2025 0
விளக்கமளிக்காததால் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவே அர்த்தம். இதுவரை எவரும் கட்சியில் செயல்படாத வகையில் தான்தோன்றித்தனமாக அன்புமணி செயல்பட்டுள்ளார்.அன்புமணி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அனுப்பிவைக்கப்பட்ட நோட்டீசுக்கு உரிய…

விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன்!

Posted by - November 27, 2025 0
எம்எல்ஏ பதவியை நேற்று ராஜினாமா செய்த நிலையில், முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் தனது ஆதரவாளர்களுடன் இணைந்தார். அதிமுகவில் இருந்த எம்ஜிஆர் காலத்து…

தவெகவை முடக்க முயற்சி செய்தனர்; அவர்களின் எண்ணம் ஈடேறாது: சிடிஆர் நிர்மல் குமார்

Posted by - October 29, 2025 0
சென்னை: “தமிழக வெற்றிக் கழகத்தை முடக்க முயற்சி செய்தனர். அவர்களின் எண்ணம் நிச்சயமாக ஈடேறாது. மக்கள் விஜய் மீது 100% நம்பிக்கை வைத்துள்ளனர்” என அக்கட்சியின் இணை…

எல்லா பக்கமும் அணை கட்டிய ஈபிஎஸ்.. தவிக்கும் செங்கோட்டையன் – பதறியடித்து நோ சொல்ல காரணம் என்ன?

Posted by - September 26, 2025 0
அதிமுகவின் முழு அதிகாரமிக்க தலைமையாக எடப்பாடி பழனிசாமி முடிவெடுத்து இருப்பதால், போர்க்கொடி தூக்கிய செங்கோட்டையன் செய்வதறியாமல் தவித்து வருகிறாராம். எடப்பாடி பழனிசாமியை மேலும் பகைத்துக் கொள்ள வேண்டாம்…

தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடா?

Posted by - March 12, 2026 0
கேஸ் சிலிண்டரை தொடர்ந்து அடுத்து பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற தகவல் பரவி வருகின்றது. தமிழ்நாட்டில் நேற்று நள்ளிரவுடன் பெட்ரோல், டீசல் விநியோகம் நிறுத்தப்படும் என…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *