போச்சு.! அடுத்த 10 வருஷத்துக்கு திமுக ஆட்சிக்கு வர முடியாது; செல்லூர் ராஜு சொன்ன மதுரை செண்ட்டிமென்ட்

225 0

திமுக அடுத்த 10 வருடங்களுக்கு ஆட்சிக்கு வர முடியாது என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். ஒரு செண்ட்டிமென்டை வைத்து அவர் இப்படி கூறியுள்ளார். அது என்ன தெரியுமா.?

மதுரையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற நிலையில், திமுக தனக்குத் தானே சூனியம் வைத்துக் கொண்டதாகவும், அடுத்த 10 வருடங்களுக்கு அவர்களால் ஆட்சிக்கு வர முடியாது என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். அவர் எதற்காக அப்படி கூறினார்.? அதன் பின்னால் உள்ள செண்ட்டிமென்ட் என்ன தெரியுமா.?

மதுரையில் நடந்த பொதுக்குழு – திமுக தலைவர் கூறியது என்ன.?

திமுக பொதுக்குழுக் கூட்டம் மதுரை உத்தங்குடி பகுதியில் நடைபெற்றது. இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டார்கள். இதில் கலந்துகொண்ட தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் மேடையில் பேசும்போது, வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை மண்ணில் – தொன்மையான தமிழரின் பண்பாட்டை எடுத்துக்காட்டும் மதுரை மண்ணில், தமிழ்நாட்டின் எதிர்காலத்துக்கு தேவையான முடிவுகளை எடுக்கவும், தமிழ்நாட்டைச் சூழ்ந்து நிற்கும் பகையை எதிர்கொண்டு முறியடிக்க வியூகங்கள் அமைக்கவும், வெற்றியை நோக்கி உழைக்கவும், இந்தப் பொதுக்குழுவை கூட்டியிருக்கிறோம் என தெரிவித்தார்.

கழகத்துக்காக பலர் உழைத்த தியாக பூமியான மதுரை  மண்ணில், கழகப் பொதுக்குழு நடப்பதை பெருமையாக கருதுகிறேன். கழகம் தொடங்கியதில் இருந்து, மதுரையில் 6 பொதுக்குழுக்கள் நடைபெற்றிருக்கிறது. இது ஏழாவது பொதுக்குழு. ஏழாவது முறை கழகம் ஆட்சியமைக்க அடிகோலும் பொதுக்குழுதான் இது. இது வழக்கமான பொதுக்குழு அல்ல, ஏழாவது முறையாக வாகை சூட வியூகம் வகுக்கும் பொதுக்குழு. அடுத்த ஆண்டு இந்த நேரத்தில் என்ன மாதிரி தலைப்புச் செய்தி வந்திருக்க வேண்டும் என்றால், “ஏழாவது முறையாக தி.மு.க. ஆட்சி அமைத்தது. கழகக் கூட்டணி வரலாறு காணாத வெற்றியைப் பெற்றது!”. “இரண்டாவது முறையாக திராவிட மாடல் ஆட்சி தொடர்கிறது!”. இதுதான் தலைப்புச் செய்தியாக இருக்க வேண்டும். அதுக்கான வியூகத்தை வகுக்கும் பொதுக்குழுதான் இது என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

அடுத்த 10 வருஷத்துக்கு திமுக ஆட்சிக்கு வர முடியாது – செல்லூர் ராஜு 

இந்த நிலையில், மதுரையில் திமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது குறித்து, செய்தியாளர் சந்திப்பின்போது விமர்சித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, திமுக தனக்குத் தானே சூனியம் வைத்துக் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

மதுரையில் பொதுக்குழு நடத்தினால், ஒரு முறைக்கு மறுமுறை திமுக ஆட்சிக்கு வராத சுவாரஸ்யம் அந்த கட்சிக்கு இருப்பதாக செல்லூர் ராஜு கூறினார். கருணாநிதி இருந்தபோதும் வந்ததில்லை என கூறிய அவர், திமுகவில் எம்.ஜி.ஆர் இருந்தவரை அவ்வாறு ஆட்சிக்கு வந்ததாகவும், திமுகவை விட்டு எம்.ஜி.ஆர் வெளியேறிய பிறகு தொடர்ந்து 2-வது முறையாக திமுக ஆட்சிக்கே வந்தது கிடையாது என அவர் தெரிவித்தார்.

அதோடு முக்கியமாக, மதுரையில் திமுக பொதுக்குழு எப்போதெல்லாம் கூடுகிறதோ, அப்போதெல்லாம், அடுத்த 10 ஆண்டுகளுக்கு திமுக ஆட்சிக்கு வர முடியாது என செல்லூர் ராஜு கூறினார். 1977-ல் நடந்த பொதுக்குழுவுக்கு பிறகு, 12 ஆண்டுகள் அதிமுக ஆட்சி தான் வந்தது என்றும், திமுகவிற்கு வனவாசம் தான் என்றும் விமர்சித்தார்.

அதன் காரணமாகவே, திமுக தலைமைக்கு மதுரை என்றாலே பிடிக்காது என்றும், யாரோ சொல்லி முதல்வரை ஏமாற்றி இருக்கிறார்கள் எனவும் அவர் கூறினார். மாற்றுத்திறனாளி ஒருவர் உலகக் கோப்பை வாங்கியதாக மாவட்ட ஆட்சியர் முதல் முதலமைச்சர் வரை ஏமாற்றியது போல், பொதுக்குழு கூட்டத்தை மதுரையில் நடத்தி, முதலமைச்சரை ஏமாற்றி இருக்கிறார்கள் என கூறினார்.

Related Post

கூட்டணி வாய்ப்புகளை கோட்டை விட்ட தவெக: ஆதவ் மீது ஆதங்கத்தைக் கொட்டிய விஜய்

Posted by - March 8, 2026 0
தவெக-வை நெருங்கி வந்த கட்சிகளுடன் கூட்டணியை பேசி முடிக்காமல், முறுக்கி கொண்டிருந்த ஆதவ் அர்ஜுனா மீது அதன் தலைவர் விஜய் அதிருப்தியில் இருப்பதாக பனையூர் வட்டாரங்கள் சொல்கின்றன.…

கப்சிப் விஜய்.. அரசியல் பக்குவம் இல்லையா? காட்டிகொடுத்த மாநாடு

Posted by - August 22, 2025 0
Vijay: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் (TVK) தலைவர் விஜய், மதுரையில் நடத்திய பெரிய அரசியல் மாநாடு தற்போது வைரலாக பேசப்படுகிறது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள்…

அரசியலில் அண்ணாமலையை அடையாளம் காட்டியதே அதிமுகதான் – எடப்பாடி பழனிசாமி பேட்டி

Posted by - June 10, 2024 0
அரசியலில் அண்ணாமலையை அடையாளம் காட்டியதே அதிமுகதான் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது : பிரதமர்…

தனிமரமாகும் ராமதாஸ்? பாஜக ஆசி, பாமகவை கைப்பற்றும் அன்புமணி? வடநாட்டு ஃபார்முலா

Posted by - May 30, 2025 0
 ராமதாஸ் நிறுவிய பாமக கட்சியை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர அன்புமணி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாமக கட்சியை அன்புமணி முழுமையாக தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர பாஜக உதவகூடும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *