ரேஷன் கார்டுதாரர்களின் வங்கி கணக்கில் ரூ.1,000 பொங்கல் பரிசு – தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை சொன்ன யோசனை

195 0

பொங்கல் பண்டிகை | ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு இவற்றுடன் ரூ.1000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்வுள்ள 1,000 ரூபாயை ஏன் அவரவர் வங்கி கணக்கில் செலுத்தக்கூடாது என மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு இவற்றுடன் ரூ.1000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார். பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன் ஜனவரி 3 ஆம் தேதி முதல் 8 ஆம் வரை நடைபெறும். முதல்வர் மு.க. பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியினை ஜனவரி 9 ஆம் தேதியில் தொடங்கி வைக்க உள்ளார். அதே தேதியில் மற்ற மாவட்டங்களிலும் பொங்கல் தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, தஞ்சாவூர் சுவாமி மலையைச் சேர்ந்த சுந்தர விமலநாதன் என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், “பொங்கலை முன்னிட்டு, அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்குள்ள ரூ. 1,000 பணத்தை ஏன் பயனாளிகளின் வங்கி கணக்கில் அல்லது மணியார்டரில் செலுத்த கூடாது” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும், “மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்ததை போல், ரேசன் கார்டில் வங்கி கணக்கையும் இணைக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளனர். இது குறித்து, தமிழ்நாடு அரசிடம் உரிய விளக்கம் பெற்று நீதிமன்றத்தில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Related Post

எதிர்ப்பை மீறி காதல் திருமணம்: மருமகனை விருந்துக்கு அழைத்து சென்று காரில் இருந்து தள்ளிவிட்ட மாமனார்

Posted by - September 7, 2023 0
திருமங்கலம்: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் மணி. இவர் தனது குடும்பத்தினருடன் மதுரை கே.கே.நகரில் வசித்து வருகிறார். இவரது மகன் பிரியவரதன் (வயது 22). இவரும், மதுரை…

அரையாண்டு லீவ் முடிந்தது..! தமிழகத்தில் பள்ளிகள் இன்று திறப்பு

Posted by - January 2, 2023 0
6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறப்பு. அரையாண்டு விடுமுறை முடிந்து இன்று மீண்டும் மாணவர்களுக்கு பள்ளிக்கூடம் திறக்கப்பட உள்ளது. மாணவர்களுக்கு கடந்த 15ஆம்…

மின் கட்டண மென்பொருள் மாற்றம்!

Posted by - May 14, 2024 0
தமிழ்நாடு மின்சார வாரியம் அதிக உயரம் கொண்ட மின் வயர்கள் மூலமாகவும், பூமிக்கு அடியில் புதைக்கப்பட்ட புதைவடங்கள் மூலமாகவும், நுகர்வோருக்கு மின் விநியோகம் செய்து வருகிறது.இதில் அதிக…

ஆட்டோ, கால் டாக்சிகளின் அதிக கட்டண வசூல் – பொங்கலுக்கு ஊர் சென்று சென்னை திரும்பியவர்கள் அவதி

Posted by - January 19, 2024 0
சென்னை: பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக சொந்த ஊர் சென்றவர்கள் நேற்று சென்னை திரும்பினர். ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்கள் நகர எல்லையை அடைந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.…

தமிழ் புத்தாண்டு 2023… செய்ய வேண்டியவைகளும் செய்யக் கூடாதவைகளும்..!

Posted by - April 12, 2023 0
அசைவம் சாப்பிடுவது, நகம் வெட்டுவது, முகச் சவரம் செய்வது, முடி வெட்டுவது போன்ற செயல்களை இந்நாளில் கட்டாயம் செய்யவே கூடாது. சித்திரை மாத முதல் நாளை உலகத்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *