அதிமுக – பாஜக கூட்டணிக்கு தவெக வருமா? – ‘நல்லதே நடக்கும்’ என நயினார் நாகேந்திரன் விளக்கம்

130 0

அதிமுக-பாஜக கூட்டணிக்கு தமிழக வெற்றிக் கழகம் வருமா என்ற கேள்விக்கு, நல்லதே நடக்கும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில் அளித்தார்.

திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள், கடவுளை கல்லாக நினைத்து உடைப்பவர்கள் மற்றும் மற்ற மதங்களை இழிவாகப் பேசுபவர்கள் எல்லாம் மாநாடு நடத்தினால், முருகன் எப்படி அவர்களோடு செல்வார்? தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை நடத்திய முருகன் மாநாட்டில் எத்தனை பேர் கலந்து கொண்டார்கள்? ஆனால், மதுரையில் நடைபெற்ற முருகன் மாநாட்டில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.எங்களால் முருக பக்தர்கள் மாநாடு மட்டுமே நடத்தப்பட்டது. ஆனால், வாக்கு வங்கிக்காக மாநாடு நடத்தியதாக எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். மற்ற மதத்தவர்கள் சபை கூட்டங்களை நடத்துவதைப்போல், முருக பக்தியை வெளிப்படுத்தும் மாநாடு நடத்தப்பட்டது. இதில் அடுத்த மதத்தினரை புண்படுத்தவில்லை. யாருக்கும் வாக்களிக்குமாறு கேட்கவில்லை. இந்து முன்னணி நடத்திய மாநாட்டில் பாஜக உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டன. இந்த மாநாட்டை திசை திருப்ப திமுக முயற்சிக்கிறது.கடந்த தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி முறையாக அமைந்திருந்தால், இப்போது திமுக ஆட்சியிலேயே இருந்திருக்காது. திமுக தொடர்ந்து ஜெயித்ததாக வரலாறு கிடையாது. திமுகவின் குடும்ப ஆட்சியை மக்கள் விரும்ப மாட்டார்கள். ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் போன்றோருக்கு அடுத்ததாக தலைவராக வர அவர்கள் குடும்பத்தில் ஆட்கள் தயாராக உள்ளனர்.

அதிமுக-பாஜக கூட்டணி என்று அமித்ஷா சொன்ன நாளில் இருந்து திமுக பயத்தில் உள்ளது. திமுகவுக்கு தேர்தல் பயமும், தோல்வி பயமும் வந்துவிட்டன. அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைப்போம் என்று ஏற்கெனவே அமித்ஷா சொல்லிவிட்டார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகம் அதிமுக-பாஜக கூட்டணிக்கு வருமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘நல்லதே நடக்கும்’ என்று நயினார் நாகேந்திரன் பதில் அளித்தார்.

Related Post

இன்று பள்ளிகள் திறப்பு.. போராட்ட களத்தில் இடைநிலை ஆசியர்கள்

Posted by - January 5, 2026 0
அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், இடைநிலை ஆசிரியர்கள் மாவட்ட தலைநகரங்களில் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். TN Govt Teachers Protest: சம வேலைக்கு…

திமுகவின் மெகா பிளான்…

Posted by - December 17, 2025 0
கை கோர்க்கும் அண்ணாமலை- நயினார்.! திடீர் தேர்தல் நெருங்க நெருங்க தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில், ஆளுங்கட்சியான திமுகவை வீழ்த்த பாஜக…

அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களுடன் அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி

Posted by - December 23, 2025 0
சென்னை: பழைய ஓய்வூதியம் திட்டம் உட்பட முக்கிய கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதையடுத்து, ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும்…

காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை முன் தாக்கப்பட்ட விவசாயி!

Posted by - October 7, 2024 0
கோவையில் நடைபெற்ற ஆனைமலை – நல்லாறு திட்ட கோரிக்கை மாநாட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை முன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயி தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை…

ராமதாஸ் கடுமையாக அன்புமணியை விமர்சித்தார்

Posted by - December 25, 2025 0
ராமதாஸ் கடுமையாக அன்புமணியை விமர்சித்தார் – பாமகவில் உள்கட்சி மோதல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி (PMK) தொடர்பாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கட்சியின் நிறுவனர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *