பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினரான ஹெச்.ராஜா நடிக்கும் ‘கந்தன்மலை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. ஹெச்.ராஜா முறுக்கு மீசையுடன், ருத்ராட்ச மாலையுடன் காட்சியளிக்கிறார்.
பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினரான ஹெச்.ராஜா நடிக்கும் ‘கந்தன்மலை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழக பாஜகவில் மூத்த தலைவர்களில் ஒருவராக இருப்பவர் எச் ராஜா. முன்னாள் எம்எல்ஏவான இவர் தற்போது பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினராக உள்ளார். தற்போது அரசியலில் இருந்து சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்துள்ளார். அவர் நடிக்கும் ‘கந்தன்மலை’ படத்தை வீர முருகன் என்பவர் இயக்குகிறார். சிவ பிரபாகரன் – சந்திரசேகர் ஆகியோர் படத்தை தயாரித்துள்ளனர்.
இந்நிலையில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. போஸ்டரில் ஹெச்.ராஜா முறுக்கு மீசை வைத்துள்ளார். கழுத்தில் ருத்ராட்ச மாலை, கையில் ருத்ராட்ச மாலை அணிந்துள்ளார். பின்னணியில் கோயிலின் நுழைவு வாயிலில் இருக்கும் கதவு தெரிகிறது. அந்த கதவின் வழியாக எச் ராஜா கூட்டமாக கோவிலுக்கும் நுழையும் வகையில் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.இரண்டு போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. மற்றொரு போஸட்ரில் நாற்காலியில் கழுத்தில் ருத்ராட்ச மாலைகளை அணிந்து கொண்டு உட்கார்ந்துகொண்டிருக்கிறார் ஹெச்.ராஜா. முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக திருப்பரங்குன்றம் மலையை தான் கந்தன் மலை என அழைப்பார்கள். அதனடிப்படையில் இந்தப் படம் திருப்பரங்குன்றம் முருகன் மலையை அடிப்படையாக கொண்டு உருவாகிஇருப்பதாக கூறப்படுகிறது.
ஹெச்.ராஜாவின் இந்த திடீர் நடிகர் அவதாரம் சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது. மதத்தை அடிப்படையாக கொண்டு இந்தப் படம் உருவாகிறதா? என்ன மாதிரியான கதைக்களத்தில் ஹெச்.ராஜா நடிக்கிறார் என்பது குறித்த பல்வேறு கருத்துகளையும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.