சந்தையை திறந்து விடுங்க.. சீனாகிட்ட இருந்து பிரிக்கணும் – இந்தியாவிற்கு அமெரிக்காவின் ஸ்கெட்ச்

185 0

அமெரிக்க எண்ணெய் பொருட்களுக்காக இந்திய சந்தையை திறக்க வேண்டும் என, புதிய தூதரக ட்ரம்பால் பரிந்துரைக்கப்பட்டுள்ள செர்ஜியோ கோர் வலியுறுத்தியுள்ளார்.

India Us Trade: மோடியும் ட்ரம்பும் ஆழ்ந்த நட்புறவை கொண்டிருப்பதாக, செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார்.

”இந்திய சந்தையை திறந்துவிடுங்க”

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த வலியுறுத்தி, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மீது அமெரிக்கா 50 சதவிகிதம் வரி விதித்துள்ளது. இதுபோக, இந்தியா மீது 100 சதவிகித வரி விதிக்க ஐரோப்பிய நாடுகளை ட்ரம்ப் வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால், இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தை தாமதமாகியுள்ளதோடு, உறவிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான், இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தை தொடர்பாக, இந்தியாவிற்கான புதிய தூதராக அதிபர் ட்ரம்பால் பரிந்துரைக்கப்பட்டுள்ள செர்ஜியோ கோர் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். அதன்படி, அமெரிக்காவின் கச்சா எண்ணெய் பொருட்களுக்கு இந்தியா தனது சந்தையை திறக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

”தெளிவாக சொன்ன ட்ரம்ப்”

இதுதொடர்பாக பேசுகையில், “வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. இந்தியா உடன் தற்போது நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில் அமெரிக்காவின் கச்சா எண்ணெய், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் எல்என்ஜிக்கு அந்நாட்டின் சந்தையை திறந்துவிடுமாறு வலியுறுத்தி வருகிறோம். நடுத்தர மக்கள் நிறைந்த இந்தியா போன்ற சந்தைக்கு விரிவுபடுத்திக் கொள்ள எங்களிடம் பல வாய்ப்புகள் உள்ளன. அதை செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம். ரஷ்யாவிட்ம இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்த வேண்டும் என்பதை ட்ரம்ப் தெளிவாக வலியுறுத்தியுள்ளார்” என்றும் செர்ஜியோ பேசியுள்ளார்.

மோடி உடன் ஆழமான நட்பு

மேலும், “அதிபர் ட்ரம்ப் இந்தியாவின் செயல்பாடுகளை விமர்சித்து வந்தாலும், பிரதமர் மோடியைப் பாராட்ட அவர் தனது வழியை விட்டு வெளியேறவில்லை. அவர்கள் நம்பமுடியாத ஆழமான உறவைக் கொண்டுள்ளனர்” என விளக்கினார். வர்த்தகத்தைப் பொறுத்தவரை, இந்தியாவும் அமெரிக்காவும் வரிகள் தொடர்பான ஒப்பந்தத்தை எட்டுவதில் வெகு தொலைவில் இல்லை என்று கோர் தெளிவுபடுத்தினார். ரஷ்ய எரிசக்தி கொள்முதல்களைத் தொடர்வதற்கு இந்தியா மற்றும் சீனா மீது கடுமையான நடவடிக்கைகளை விதிக்க டிரம்ப் ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்தினாலும், இந்தியப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 50 சதவீத வரிகள் குறித்த தீர்மானத்தின் மீது சில வாரங்களில் முடிவு எட்டப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தியா உடனான உறவு:

இருநாடுகளுக்கு இடையேயான உறவு குறித்து பேசுகையில், “இந்திய அரசாங்கத்துடனும் இந்திய மக்களுடனும் அமெரிக்காவின் உறவு பல தசாப்தங்களாக நீண்டுள்ளது. இது சீனர்களுடன் அவர்கள் கொண்ட உறவை விட மிகவும் அன்பான உறவாகும். இந்தியா நமது பக்கம் இழுக்கப்பட்டு சீனாவிடமிருந்து விலகி இருப்பதை நாங்கள் முதன்மையான முன்னுரிமையாகக் கருதுவோம்

பல பிரிக்ஸ் நாடுகள் பல ஆண்டுகளாக அமெரிக்க டாலரிலிருந்து விலகிச் செல்ல அழுத்தம் கொடுத்தபோது, ​​இந்தியா அதற்கு ஒரு தடையாக இருந்துள்ளது. பிரிக்ஸில் உள்ள மற்ற நாடுகளை விட இந்தியா எங்களுடன் ஈடுபட மிகவும் விருப்பமாகவும் திறந்ததாகவும் உள்ளது” என்று கோர் பாராட்டியுள்ளார்.  தனது உறுதிமொழி விசாரணையின் போது செனட் வெளியுறவுக் குழுவின் முன்பு கோர் இந்த கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்.

Related Post

அடிக்கடி சாப்ட் டிரிங்ஸ் குடித்தால்?அதன் விளைவுகளை தெரிந்து கொள்ளுங்கள்

Posted by - January 29, 2024 0
நாம் அருந்திய 10 நிமிடத்தில் இந்த காஃபின் நமது ரத்த நாளங்களில் ஊடுருவும். இதனால் ரத்த அழுத்தம் மற்றும் இதயத்துடிப்பு அதிகரிக்கும். இன்றைய துரிதமான உலகில் உணவுப்…

“இருமுனைப் போருக்கு தயார்“; மீண்டும் இந்தியாவை வம்புக்கிழுக்கும் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்

Posted by - November 14, 2025 0
இந்தியாவுடன் மறைமுகப் போரை நடத்தி வருவதாக ஏற்கனவே கூறிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், தற்போது போருக்கு தயாராக இருப்பதாகக் கூறி மீண்டும் இந்தியாவை வம்பிழுத்துள்ளார்.…

ட்ரம்பின் வரிகள் சட்டவிரோதமானது – அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு.. ”கேன்சல் பண்ணிட்டா..” வார்னிங்

Posted by - August 30, 2025 0
அதிபர் ட்ரம்ப் மற்ற நாடுகள் மீது விதித்துள்ள வரிகள் சட்டவிரோதமானது என அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்துள்ளது. புதிய வரிகள் ரத்து செய்யப்பட்டால் பெரும் பேரழிவை ஏற்படுத்தும் என,…

திருட வந்த இடத்தில் நாயுடன் கொஞ்சி விளையாடிய வாலிபர்

Posted by - August 9, 2023 0
வீடுகளில் நாய் வளர்ப்பதற்கு முக்கிய காரணம் திருடர்களிடம் இருந்து வீட்டை காக்கும் என்பது தான். ஆனால் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோ அதற்கு…

உடல் பருமன், ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் இருந்தால் அமெரிக்க விசா கிடையாது: உலகம் முழுவதும் உடனடி அமல்

Posted by - November 9, 2025 0
வாஷிங்டன்: இதய நோய், சுவாசக் கோளாறு, புற்றுநோய், நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, உடல் பருமன், நரம்பியல் பாதிப்பு, மனநிலை பாதிப்பு இருப்பவர்களுக்கு விசா வழங்க வேண்டாம் என்று அமெரிக்க…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *