தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்: கிராம் ரூ.11,000-ஐ கடந்தது

196 0

சென்னை: தங்கம் விலை இன்று (அக்.8) மற்றுமொரு புதிய உச்சத்தைத் தொட்டது. அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.11,000-ஐ தாண்டியது.

சர்​வ​தேச பொருளா​தார நில​வரத்​துக்கு ஏற்ப தங்​கம் விலை​யில் ஏற்​ற​மும் இறக்​க​மும் இருந்து வரு​கிறது. இதன் அடிப்​படை​யில், செப்​.6-ம் தேதி ரூ.80,040 ஆக இருந்த ஒரு பவுன் ஆபரணத் தங்​கம் செப்​.23-ம் தேதி ரூ.85,120 ஆக உயர்ந்​தது. எச்​1பி விசா கட்​ட​ணத்தை அமெரிக்க அரசு உயர்த்​தி​யது. அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஆகியவை தங்​கம் விலை உயர்​வுக்கு முக்​கியக் காரண​மாக அமைந்​தது. இதன்​பிறகு, ஓரிரு நாட்​கள் இறக்​க​மாக​வும், பெரும்​பாலான நாட்​கள் ஏற்​ற​மாக​வும் இருந்து வந்த நிலை​யில், நேற்று முன்​தினம் (அக்.6) பவுன் தங்​கம் ரூ.89 ஆயிரத்தை தொட்​டது.

இதன் தொடர்ச்​சி​யாக, ஆபரணத் தங்​கத்​தின் விலை நேற்​றும் (அக்.7) பவுனுக்கு ரூ.600 உயர்ந்​து, ரூ.89,600-க்கு விற்பனை செய்​யப்​பட்​டது.

இந்நிலையில் இன்று (புதன்கிழமை – அக்.8) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,300-க்கு விற்பனையாகிறது. அதேபோல் பவுனுக்கு ரூ.800 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.90,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.167-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.1,67,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நவராத்திரி தொடங்கி தீபாவளி வரை பண்டிகை காலம் என்பதால் நகை விலை அடிக்கடி புதுப்புது உச்சங்களைத் தொட்டுவரும் சூழலில் அக்.20 தீபாவளியை ஒட்டி தங்கம் விலை எந்த உச்சத்தைத் தொடுமோ என்று நகை வாங்குவோர் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1400 உயர்ந்துள்ளது.

இந்த வாரம் தொடங்கியதிலிருந்து தங்கம் விலை நிலவரம்:

அக்.8 (புதன்) – ஒரு பவுன் ரூ.90,400

அக்.7 (செவ்வாய்) – ஒரு பவுன் ரூ.89,600

அக்.6 (திங்கள்) – ஒரு பவுன் ரூ.89,000

Related Post

மீண்டும்.. மீண்டுமா? தமிழ்நாட்டை அச்சுறுத்தும் கொரோனா.. அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்- கவலையில் மக்கள்

Posted by - May 31, 2025 0
தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் தமிழ்நாடு அரசு முகக்கவச கட்டுப்பாட்டை அமல்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த உலகம் முழுவதும் பீதியை ஏற்படுத்திய ஒரு சொல் கொரோனா.…

பெங்களூருவில் கின்னஸ் சாதனையாளரை திருடனாக்கிய வறுமை

Posted by - July 8, 2023 0
பெங்களூரு : பெங்களூரு வி.வி.புரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வாசவி அம்மன் கோவில் உள்ளது. அந்த கோவிலில் இருந்து வெள்ளி சிலை உள்ளிட்ட பொருட்கள் சமீபத்தில்…

இன்று பிறந்த நாள்… மோடிக்கு குவியும் வாழ்த்துக்கள்; பா.ஜ., தொண்டர்கள் கொண்டாட்டம்!

Posted by - September 17, 2024 0
புதுடில்லி: இன்று 74வது பிறந்த நாள் கொண்டாடும் பிரதமர் மோடிக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு, அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் உள்ளிட்ட அனைவரும் வாழ்த்து கூறி வருகின்றனர். பிறந்த நாள்…

எமோஷனலாக பேசிய பிரதமர் மோடி.. “ஏழைகளின் நலனே முக்கியம்.. கருணையுள்ள அரசு”

Posted by - June 5, 2025 0
ஏழைகள் நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட கருணையுடன் கூடிய மத்திய அரசு, கடந்த பத்தாண்டுகளில், வறுமையின் பிடியிலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்கு பல்வேறு முன்னோடித் திட்டங்களை செயல்படுத்தியுள்ளது என பிரதமர் மோடி…

Bihar Election Result: பீகாரை வாரிச்சுருட்டிய NDA கூட்டணி.. எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள்? சர்ப்ரைஸ் தந்த ஓவைசி

Posted by - November 15, 2025 0
Bihar Election 2025 Result: பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவில் எந்த கட்சி எத்தனை இடங்களை கைப்பற்றியுள்ளன என்ற விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம். Bihar Election…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *