ஸ்கூட்டர் மீது மோதிய திருமாவளவன் கார்! தட்டிக்கேட்ட வழக்கறிஞரை அடித்து துவைத்த விசிகவினர்!

168 0

சென்னை உயர்நீதிமன்றம் அருகே தனது ஸ்கூட்டர் மீது திருமாவளவன் கார் மோதியதை தட்டிக் கேட்ட வழக்கறிஞரை விசிகவினர் சரமாரியாக தாக்கினார்கள். இதற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தமிழகத்தில் அசைக்க முடியாத அரசியல் தலைவர்களில் ஒருவராக விளங்கி வருகிறார். இந்நிலையில், திருமாவளவன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான தாக்குதல் முயற்சியை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சென்னை உயர்நீதிமன்றம் அருகே தனது காரில் சென்று கொண்டிருந்தார்.

ஸ்கூட்டர் மீது மோதிய திருமாவளவன் கார்

அப்போது திருமாவளவன் சென்ற கார், முன்னாள் சென்ற ஒரு ஸ்கூட்டர் மீது மோதியதாக கூறப்படுகிறது. அந்த ஸ்கூட்டரை ஓட்டி வந்த வழக்கறிஞர், அதை சாலையில் நிறுத்தி விட்டு ”ஏன் எனது ஸ்கூட்டர் மீது மோதினீர்கள்” என்று கேட்டுள்ளார். அப்போது திருமாவளவன் காரில் இருந்தவர்கள் அந்த வழக்கறிஞரை சூழ்ந்து கொண்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

வழக்கறிஞரை தாக்கிய விசிகவினர்

மேலும் வழக்கறிஞரை சரமாரியாக தாக்கிய அவர்கள் அவரின் ஸ்கூட்டரையும் ஆவேசமாக தள்ளி சேதப்படுத்தினர். வழக்கறிஞரை தாக்கிய விசிகவினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்கள்.

ஆனாலும் விசிகவினர் அந்த வழக்கறிஞரை விடாமல் துரத்தி தாக்கியதால் அவர் உடனடியாக நீதிமன்ற வளாகத்துக்குள் சென்றார். தொடர்ந்து திருமாவளவனுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி விசிகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், காவல்துறையினருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

விசிகவினர் மீது நடவடிக்கை வேண்டும்

நடுரோட்டில் வழக்கறிஞரை விசிகவினர் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. வழக்கறிஞரை தாக்கிய விசிகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.விசிகவினரின் செயலுக்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை கண்டனம்

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அண்ணாமலை, ”பட்டப்பகலில் அதிர்ச்சியூட்டும் வகையில் வி.சி.க (VCK) ரவுடிகள் ஒரு வழக்கறிஞரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அந்த வழக்கறிஞர், தான் மீது மோதிய கார் ஓட்டுநரிடம் கேள்வி கேட்டதற்காகத் தாக்கப்பட்டார். இந்த கார், வி.சி.க தலைவர் திருமாவளவன் அவர்களை ஏற்றிச் சென்றது.

இதில் வேடிக்கை என்னவென்றால் திருமாவளவன் இந்தியத் தலைமை நீதிபதி மீதான தாக்குதலைக் கண்டித்து ஒரு போராட்டத்தில் கலந்துகொண்டு திரும்பிக் கொண்டிருந்தபோதுதான் அவரது கட்சியினர் வழக்கறிஞரை தாக்கியுள்ளனர்” என்றார்.

Related Post

இந்த அறிகுறிகள் இருந்தா… உங்க கல்லீரல் செயலிழக்க வாய்ப்பு உள்ளதாம்…அது கல்லீரல் புற்றுநோயாவும் மாறுமாம்!

Posted by - November 9, 2023 0
அதிகரித்து வரும் சுகாதார பிரச்சனைகளில் கொழுப்பு கல்லீரல் நோயும் ஒன்று. இந்த பிரச்சனை சமீபகாலமாக மக்களிடையே அதிகரித்து வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால், அது உயிருக்கு ஆபத்தான…

அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு… வானிலை அலெர்ட்!

Posted by - May 25, 2023 0
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தகவல். தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 5…

ஆடிஷன் பத்தி அன்றே பேசிய ஸ்ருதி நாராயணன்! என்ன சொன்னாங்க தெரியுமா?

Posted by - March 27, 2025 0
 சிறகடிக்க ஆசை சீரியல் பிரபலம் ஸ்ருதி நாராயணன் நடிக்க வந்தது எப்படி? என்றும், ஆடிஷன் பற்றியும் பேசியது வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் சிறகடிக்க ஆசை.…

தமிழ்நாடு முழுவதும் பால், தயிர் விலை உயர்வு.. இன்று முதல் அமல்

Posted by - January 20, 2023 0
ஆவின் பாலிற்கும், தனியார் பாலிற்கும் லிட்டருக்கு ரூ.20 வரை வித்தியாசம் இருந்து வருவதால் ஆவின் பால் கடைகளில் உடனே விற்று தீர்ந்து விடுகிறது. தமிழகத்தில் தனியார் பாலின்…

“அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு மருந்து” – விவகாரத்துக்கு விண்ணப்பித்த பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் போட்ட முதல் பதிவு

Posted by - April 10, 2024 0
ஐஸ்வர்யா தனுஷ் அவருடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. நடிகர் தனுஷும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தும் விவகரத்து கோரி விண்ணப்பித்துள்ள நிலையில், ஐஸ்வர்யா தனுஷ்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *