“எஸ்ஐஆர் பூர்த்தி செய்யணும்! ஓடிபியை சொல்லுங்கள்”னு யார் கேட்டாலும் தராதீங்க! சைபர் கிரைம் வார்னிங்,…

138 0

புதுவை: வாக்காளர் திருத்த சிறப்பு தீவிர திருத்த பட்டியலை (SIR) நிரப்புவதற்காக யாராவது போன் செய்து ஓடிபி கேட்டால் கொடுக்க வேண்டாம் என புதுவை போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அவ்வாறு யாராவது போன் செய்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் சைபர் கிரைம் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி தமிழகத்தை போல் புதுவையிலும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த எஸ்ஐஆர் படிவங்களை பிஎல்ஓ அதிகாரிகள் வீடு வீடாக கொடுத்து வருகிறார்கள். அதில் யாருக்காவது பூர்த்தி செய்ய தெரியாவிட்டால் அதற்கான முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு சென்று பூர்த்தி செய்து கொடுத்து விடலாம். இந்த படிவத்தில் பூர்த்தி செய்து அதிகாரிகள் சரிபார்த்தபிறகுதான் ஒவ்வொருவரது பெயரும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும் என்பதால் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த நிலையில் சிலருக்கு எஸ்ஐஆர் படிவங்களை பூர்த்தி செய்வது தொடர்பாக பேசுவதாக கூறி ஓடிபி எண்களை கேட்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவ்வாறு யார் ஓடிபி கேட்டாலும் கொடுக்க வேண்டாம். “எங்களுடைய வாக்குச் சாவடி நிலை அலுவலரிடம் (பிஎல்ஓ) சென்று பூர்த்திச் செய்து கொள்கிறோம்” என கூறி இணைப்பை துண்டித்துவிடுங்கள்.உங்களை கட்டாயப்படுத்தி கேட்கும் பட்சத்தில் உங்களுக்கு அழைப்பு வந்த எண்ணை குறித்து வைத்துக் கொண்டு அருகில் உள்ள காவல் நிலையத்திலோ அல்லது சைபர் கிரைம் காவல் நிலையத்திலோ அல்லது சைபர் கிரைம் காவல் நிலையத்திலோ அல்லது 1930 மூலமாகவோ தொடர்பு கொண்டு புகார் அளிக்கும் படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

எனவே உங்கள் தொகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலரின் பெயர், அவரின் தொலைப் பேசி எண் ஆகியவற்றை தெரிந்து வைத்து கொள்ள வேண்டும். இது போல் யாராவது போன் செய்தால் பிஎல்ஓ அதிகாரிகளை தொடர்பு கொண்டு சந்தேகத்தை தீர்த்துக் கொண்டு தெளிவுப்படுத்திக் கொள்ளலாம். 0413 – 2276144, 94892 05246 மற்றும் ஆகிய இலவச எண்களிலும், ‘cybercell-police@py.gov.in’ மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம். இணையத்தில் புகார் அளிக்க ‘www.cybercrime.gov.in’ ஐ பயன்படுத்தவும் என தெரிவித்துள்ளனர்.

Related Post

நடிகர் ராஜேஷ் சாவுக்கு காரணம் இவர்தான்.. ராஜேஷின் தம்பி பரபரப்பு குற்றச்சாட்டு

Posted by - May 29, 2025 0
சித்த மருத்துவர் 2 மணி நேரம் பேசிக்கொண்ட நேரத்தை இழுத்தடித்ததே நடிகர் ராஜேஷின் மரணத்திற்கு காரணம் என்று அவரது தம்பி குற்றம் சாட்டியுள்ளார். தமிழ் திரையுலகின் பிரபலமான…

அமராவதி ஆற்றுப்படுகையை பாலைவனமாக்கும் கேரள அரசின் முயற்சியை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்! – டிடிவி தினகரன்

Posted by - May 20, 2024 0
கேரள அரசால் கட்டப்படும் புதிய அணையால் திருப்பூர், கரூரில் விவசாயம் மட்டுமல்லாது குடிநீர் பஞ்சமும் நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.கர்நாடகாவை தொடர்ந்து கேரளாவிடமும் தமிழகத்தின் உரிமையும், விவசாயிகளின்…

யார் அரசியல் பண்றாங்க? இதில் என்ன அரசியல் செய்ய வேண்டி இருக்கு? – தர்மேந்திர பிரதானுக்கு உதயநிதி பதிலடி

Posted by - February 21, 2025 0
ஆனாலும் பாஜக தலைவர்களுக்கும் மற்ற கட்சி தலைவர்களுக்கும் வார்த்தை போர் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நிதியுதவியை கேட்கிறோம் எனவும் மொழியை வைத்து என்ன அரசியல்…

சிறியாநங்கை.. பல நோய்களின் எதிரி சிறியா நங்கை.. சர்க்கரை நோயாளிகளே நோட் பண்ணிக்குங்க.. சூப்பர் மூலிகை

Posted by - November 3, 2023 0
சென்னை: ஒவ்வொரு வீடுகளிலும் கட்டாயம் வளர்க்கப்பட வேண்டிய மூலிகைகளில் ஒன்றுதான் சிறியாநங்கை.. ஆச்சரியத்தக்க மருத்துவ குணங்களை கொண்டது இந்த செடி. நிலவேம்பு செடியை, சிறியாநங்கை என்று சொல்வார்கள்..…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *