“தாய் மற்றும் மகள்களை ஆபாச வீடியோ எடுத்த கொத்தனார்” – தொடர்ந்து பாலியல் சைகை காட்டி டார்ச்சர்.. கைது செய்யப்பட்ட காமக்கொடூரன்!

166 0

கன்னியாகுமரி மாவட்டம், மொட்டவிளை பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவர் அதே பகுதியை சேர்ந்த 32 வயதுடைய கீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணை கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கணவர் பன்னீர் செல்வம் குடும்ப சூழ்நிலை காரணமாக வெளிநாட்டில் வேலை நாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். எனவே கீதா தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.

கீதா வீட்டில் படுக்கை அறையில் உள்ள ஜன்னலில் கதவுகள் பொறுத்தப்படாமல் உள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பக்கத்து வீட்டை சேர்ந்த 50-வயதான கொத்தனார் வேலை பார்க்கும் தர்மலிங்கம் ஜன்னல் வழியாக கீதா மற்றும் அவரது மகள்கள் உறங்கும் போது அவர்களை ஆபாசமாக வீடியோ எடுத்து அதை பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். மேலும் இளம் பெண் வெளியே செல்லும் போது ஆபாச செய்கைகளை காட்டி தொடர் தொல்லை அளித்து வந்துள்ளார்.

இதனால் கதவில்லாத ஜன்னலை இரும்பு ஷீட் வைத்து மறைத்த இளம்பெண் தர்மலிங்கம் செய்யும் அநாகரிக செயல் குறித்து ஊராரிடம் தகவல் தெரிவித்து கண்டித்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் திங்கள்கிழமை அன்று இளம்பெண் வீட்டின் ஜன்னலில் பொருத்தப்பட்ட இரும்பு ஷீட்டுகளை சுத்தியலால் நெம்பி துளையிட்ட தர்மலிங்கம் மீண்டும் செல்போனில் படுக்கையறை காட்சிகளை படம் பிடித்ததாக கூறப்படுகிறது. இதனை கவனித்த இளம்பெண் சத்தம் போடவே தர்மலிங்கம் தப்பியோடியுள்ளார்

இதையடுத்து இளம்பெண் தர்மலிங்கம் மீது கொடுத்த புகாரின் அடிப்படையில் தர்மலிங்கம் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த இரணியல் போலீசார் தனிப்படை அமைத்து அவரை கைது செய்து இரணியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர் மேலும் அவரது செல்போனையும் பறிமுதல் செய்து அதிலிருந்த வீடியோக்களை அழித்து வேறு யாருக்காவது இந்த வீடியோக்களை அனுப்பியுள்ளாரா? என விசாரித்து வருகின்றனர். தனியாக இருந்த பெண்ணுக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் கொத்தனார் பாலியல் தொல்லை கொடுத்தது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Post

கடந்த ஆண்டை விட தீபாவளி தினத்தில் குறைந்த தீ விபத்து… கைகொடுத்த விழிப்புணர்வு.. தீயணைப்பு துறை!

Posted by - November 1, 2024 0
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தீபாவளிக்கு தீ விபத்துகள் குறைவாக இருந்ததாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தீபாவளிக்கு தீ…

மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ மீது வழக்கு பதிவு

Posted by - April 13, 2024 0
தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட…

தூதுவளை.. அத்துடன் வேப்பிலை.. பற்களை பாதுகாக்கும் ஆச்சரிய இலைகள்.. ஈறுகளை பாதுகாக்கும் துளசியிலை

Posted by - December 8, 2023 0
சென்னை: பற்களை பாதுகாப்பதில் உணவுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது.. அந்தவகையில், சிலவகை இலைகளின் முக்கியத்துவத்தை இங்கு பார்க்கலாம். பொதுவாக, பற்களின் நிறம், ஈறுகளின் நிறத்தை வைத்தே, ஒருவரின்…

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரிப்பு: தக்காளி கிலோ ரூ.30 ஆக சரிவு

Posted by - August 21, 2023 0
போரூர்: தமிழகத்தில் கடந்த மாதம் தக்காளியின் விலை கிலோ ரூ.200 வரை உச்சத்தில் இருந்தது. தற்போது வரத்து அதிகரிப்பு காரணமாக கடந்த சில நாட்களாகவே தக்காளியின் விலை…

திமுக ஆட்சியின் அனைத்து பகல் கொள்ளைகளும் விரைவில் முடிவுக்கு வரும் – அண்ணாமலை

Posted by - April 11, 2025 0
திமுக ஆட்சியில் நடைபெறும் அனைத்து பகல் கொள்ளைகளும் விரைவில் முடிவுக்கு வரும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில் காணொலி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *