ஈட்டிய விடுப்பு சரண் பணப்பலன்.! யாருக்கெல்லாம் கிடைக்கும்.?அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு

108 0

அரசு ஊழியர்களுக்கு மீண்டும் சரண் விடுப்பு செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், எப்போது சரண் விடுப்பு பணம் பலன் பெறலாம், யாருக்கெல்லாம் தகுதி உள்ளது என்பது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கான சலுகைகள்

அரசு ஊழியர்கள் தான் அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்லும் முக்கிய பாலமாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.  அகவிலைப்படி  55% இலிருந்து 58% ஆக உயர்வு, அரசு ஊழியர்கள் இலவச காப்பீட்டுத் திட்டம், கடன் உதவி திட்டங்கள் உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் முக்கிய கோரிக்கையாக இருப்பது பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும், ஈட்டிய சரண் விடுப்பை  நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து பல்வேறு போராட்டங்களையும் அரசு ஊழியர்கள் நடத்தினர். இதனையடுத்து தமிழக அரசு மீண்டும் ஈட்டிய சரண் விடுப்பு செயல்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியிட்டது.

ஈட்டிய சரண் விடுப்பு நிறுத்தம்

இந்த நிலையில் கடந்த 2020 எப்ரல் 25-ஆம் தேதி அதற்கு முன்பு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணமாகப் பெறுதல் தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளித்து அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் கொரோனா பரவல் காலகட்டத்தில், நாடே முடங்கியிருந்த நிலையில் அரசு ஊழியர்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த காலகட்டமாக  27.4.2020 முதல் ஈட்டிய விடுப்பு சரண் பணப்பலன் தமிழக அரசு நிறுத்தியது. இந்த திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் முன்வைத்த கோரிக்கை ஏற்கப்படுவதாக கடந்த ஜூலை மாதம் தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார்.

ஈட்டிய சரண் விடுப்பு- அரசாணை வெளியீடு

இதனையடுத்து அரசு ஊழியர்கள் எப்போது சரண் விடுப்பு பணம் பலன் பெறலாம், யாருக்கெல்லாம் தகுதி உள்ளது என்பது தொடர்பாக அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் ஆண்டுக்கு 15 நாள்கள் வரை ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணம் பெறலாம் என அறிவிக்கப்பட்டது. அதே நேரம் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களுக்குள் பணியில் சேர்ந்தவர்கள் அக்டோபர் 1ஆம் தேதியில் இருந்தும், ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பணியில் சேர்ந்தவர்கள் 2026 ஜனவரி 1ம் தேதியில் இருந்தும் பணப்பலன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டது.

 யாருக்கெல்லாம் சரண் விடுப்பு பணப்பலன் கிடைக்கும்

இதே போல ஏப்ரல்,மே, ஜூன் மாதங்களில் பணியில் சேர்ந்தவர்கள் 2026 எப்ரல் 1ம் தேதியில் இருந்தும், ஜூலை, ஆகஸ்ட் செப்டம்பரில் பணியில் சேர்ந்தவர்கள் அடுத்த ஆண்டு ஜூலை முதல் ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணப் பலன் பெற்றுக்கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களும்  குறிப்பிட்ட காலக்கட்டத்திலேயே ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணப் பலன்கள் பெறலாம் என தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் ரூ.30 லட்சம் பெறுவது எப்படி? முக்கிய அப்டேட்

Posted by - August 20, 2025 0
முதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ.30 லட்சம் பெறுவது எப்படி? அமைச்சர் ஐ.பெரியசாமி கொடுத்த அப்டேட் Tamil Nadu CM Health Insurance : தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு…

2026 சட்டமன்ற தேர்தல்: நிறங்கள் அடிப்படையில் தொகுதி பிரிப்பு.. திமுகவின் புதிய வியூகங்கள்

Posted by - June 19, 2025 0
திமுக 2026 சட்டமன்ற தேர்தலுக்காக தொகுதிகளை 4 நிறங்களாக பிரித்து, வாக்குகளை அதிகரிக்கும் புதிய வியூகத்தை கையில் எடுத்துள்ளது. சட்டமன்ற தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும்…

குக் வித் கோமாளி மாதம்பட்டி ரங்கராஜ் ஹீரோவாக நடிக்கும் புது படம்.. ஹீரோயின் யார் தெரியுமா?

Posted by - September 28, 2024 0
விஜய் டிவியின் குக் வித் கோமாளி 5ம் சீசனில் நடுவராக இருந்து வருபவர் மாதம்பட்டி ரங்கராஜ். அவர் சமையல் துறையில் பிரபலம் என்பதால் குக் வித் கோமாளி…

TVK கட்சிக்கு அஜித் ஆதரவா? Race Car – ஒரே Colour -ல இருக்கே! குழப்பத்தில் நெட்டிசன்ஸ்!

Posted by - November 28, 2024 0
அஜித்தும், விஜயும் சினிமாவுல அறிமுகமாகி கிட்டத்தட்ட 30 வருஷத்துக்கு மேல ஆகிருச்சு. ஆரம்பத்தில அஜித் – விஜய் – பிரசாந்த் என மூனுபேருக்கும் போட்டி இருந்துச்சு. அப்புறம்…

செடியிலேயே அழுகும் அவலம்; நாள்தோறும் எகிறும் தக்காளி விலை – கிலோ ரூ.130 வரை விற்பதால் மக்கள் அவதி!

Posted by - July 3, 2023 0
சென்னையில் ஒரு கிலோ தக்காளி விலை 130 ரூபாயாக உயர்ந்து விற்கப்பட்டு வரும் நிலையில், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் கிலோ ஒன்றுக்கு 160 வரை விலை அதிகரித்துள்ளது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *