“விஜய் வேடிக்கை மட்டும் பார்த்தால் எப்படி?”

109 0

புதுச்சேரி: “திருப்பரங்குன்றம் விவகாரத்தில் எவ்வளவு பிரச்சினைகள், சண்டைகள் நடப்பதை வேடிக்கை மட்டுமே பார்த்தால், உங்களை நம்பி மக்கள் எப்படி ஆட்சி பொறுப்பை கொடுப்பார்கள்? அதனால் தவெக தலைவர் விஜய் நியாயப்படி, மக்கள் உணர்வுபடி பேச வேண்டும்” என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.

முருகப் பக்தர்கள் மற்றும் இந்து இயக்கங்கள் சார்பில் தீபப் போராட்டம் மற்றும் காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கத்தை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக முன்னாள் தமிழக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தமிழகத்தில் திருப்பரங்குன்றம் முருகனை சீண்டுவதையே தன்னுடைய வேலையாக கடந்த 2 வருடங்களாக திமுக அரசு வைத்திருக்கிறது.திருப்பரங்குன்றம் விவகாரத்தில் எவ்வளவு பிரச்சினைகள், சண்டைகள் நடக்கிறது. நான் பேச மாட்டேன், வேடிக்கை மட்டுமே பார்ப்பேன் என்றால் உங்களை நம்பி மக்கள் எப்படி ஆட்சி பொறுப்பை கொடுப்பார்கள். தவறு எது, சரி எது என்பதை கூற வேண்டும். நடுவில் நின்றால் எப்படி? அதனால் தவெக தலைவர் விஜய் நியாயப்படி, மக்கள் உணர்வுபடி பேச வேண்டும்.

பாஜகவைச் சேர்ந்த சிறுபான்மையின அமைச்சருக்கு இலாகா கொடுக்கவில்லை என்று புதுச்சேரியில் பேசிய விஜய், திருப்பரங்குனறம் விவகாரத்தில் பெரும்பான்மை மக்கள் பற்றி ஏன் பேசவில்லை?

தமிழக முதல்வர் போட்டியிட்ட முதல் தேர்தலில் தோற்றார். கட்சி ஆரம்பித்த பிறகு எத்தனை முறை திமுக தோற்றுள்ளது. வரலாறு காணாத தோல்வியை 2014-ல் சந்தித்தனர். 234 தொகுதிகளில் 2 இடங்களில் மட்டுமே வென்றனர். ஆகவே, தோல்வியை பற்றி ஸ்டாலின் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்.சபரிமலை தீர்ப்பும், திருப்பரங்குன்றம் தீர்ப்பும் ஒன்றில்லை. இருக்கும் நடைமுறையை மாற்றியதற்காக சபரிமலை தீர்ப்பை எதிர்த்தோம். இருக்கும் நடைமுறையை பின்பற்றவே திருப்பரங்குன்றம் தீர்ப்பை ஆதரித்தோம். ஆகவே, திருமாவளவன் தீர்ப்பு நகலை படிக்க வேண்டும். தீர்ப்புகள் தவறாக சொல்லும்போது எதிர்க்கின்றோம், சரியாக வரும்போது ஆதரிக்கின்றோம்” என்று அண்ணாமலை கூறினார்.

Related Post

‘‘திமுக ஆட்சி எப்போது போகும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்’’ – பொங்கல் விழாவில் பழனிசாமி பேச்சு

Posted by - January 16, 2026 0
மேட்டூர்: “எங்களது கூட்டணி வலிமையான கூட்டணி. சில கட்சிகள் வரும், இவற்றையெல்லாம் பகிரங்கமாக கூற முடியாது. வலிமையான கட்சிகள் ஒன்று சேர்ந்து தேர்தலை சந்திக்க இருக்கிறோம். திமுக ஆட்சி…

சொந்த கட்சியினரால் அல்லது மக்களால் திமுக அழியும்: தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம்

Posted by - November 8, 2025 0
சென்னை: ‘சொந்த கட்​சி​யின​ரால் அல்​லது மக்​களால் திமுக அழி​யும்’ என பாஜக முன்​னாள் மாநில தலை​வர் தமிழிசை சவுந்​தர​ராஜன் தெரி​வித்​தார். வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு கொண்​டாட்​டம்…

Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

Posted by - January 13, 2026 0
இடைநிலை ஆசிரியர்களுக்கு சம ஊதியம் வழங்க உடனடியாக அரசாணை வழங்க வேண்டும் என்று சீமான் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…

மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?

Posted by - December 10, 2025 0
2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூபாய் 3 ஆயிம் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *