சொந்த கட்சியினரால் அல்லது மக்களால் திமுக அழியும்: தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம்

152 0

சென்னை: ‘சொந்த கட்​சி​யின​ரால் அல்​லது மக்​களால் திமுக அழி​யும்’ என பாஜக முன்​னாள் மாநில தலை​வர் தமிழிசை சவுந்​தர​ராஜன் தெரி​வித்​தார். வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு கொண்​டாட்​டம் நாடு முழு​வதும் நேற்று நடந்​தது. தமிழக பாஜக சார்​பில் சென்னை மயி​லாப்​பூர் கபாலீஸ்​வரர் கோயில் அரு​கில் நடை​பெற்ற விழாவுக்கு பாஜக முன்​னாள் மாநில தலை​வர் தமிழிசை சவுந்​தர​ராஜன் தலைமை வகித்​தார்.

மாநில துணைத் தலை​வர் கரு.​நாக​ராஜன், செய்தி தொடர்​பாளர் ஏ.என்​.எஸ்​.பிர​சாத் உள்பட பாஜக நிர்​வாகி​கள் பலர் கலந்து கொண்​டனர். இந்​நிகழ்ச்​சி​யில், பிரதமர் மோடி​யின் ‘சுய​சார்பு இந்​தி​யா’வை வலி​யுறுத்​தும் வித​மாக சுதேசி உறு​தி​மொழியை ஏற்​றுக்​ கொண்​டனர். பின்​னர், அனை​வரும் வந்தே மாதரம் பாடலைப் பாடினர். தொடர்ந்​து, பொது​மக்​களுக்கு தமிழிசை சவுந்​தர​ராஜன் இனிப்பு வழங்​கி​னார். அப்​போது செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: சுதேசி உறு​தி​மொழியை எடுத்​ததன் மூலம், அந்​நிய பொருட்​களை தவிர்த்​து, சுதேசி பொருட்​களைப் பயன்​படுத்த போகிறோம்.மேலும், சுதேசி செயலியை பயன்​படுத்த போகிறோம். அதாவது, அனை​வரும் பயன்​படுத்​தும், வாட்​ஸ்​அப் இப்​போது ‘அரட்​டை’​ யாக மாறிக் கொண்​டிருக்​கிறது. ‘விதேசி’களை விடுத்து ‘சுதேசி’ களை ஆதரிக்​கும் இயக்​கங்​களாக அனைத்து இயக்​கங்​களும் மாற வேண்​டும். அது​தான் பிரதமரின் நோக்​கம். நேரு, மன்​மோகன் சிங், நரசிம்​ம​ராவ் காலத்​தி​லும் வாக்​காளர் சிறப்பு தீவிர திருத்​தம் நடத்​தப்​பட்டுள்ளது. ஆனால், மோடி காலத்​தில் நடத்​தி​னால் மட்​டும், போராட்​டம் நடத்த போகிறோம் என இண்​டியா கூட்​ட​ணி​யினர் தெரி​வித்​துள்​ளனர்.2 ஆண்​டு​களாக கஷ்டப்​பட்டு சேர்த்த பொய் வாக்​காளர்​கள் அனை​வரும் போய் விடு​வார்​கள் என்ற கவலை திமுக​வுக்கு ஏற்​பட்டு விட்​ட​தா?ஜனநாயகத்தை காக்க எதை வேண்​டு​மா​னாலும் செய்ய வேண்​டும் என சொல்​லும் ஸ்டா​லின், முதலில் வாக்​காளர் சிறப்பு தீவிர திருத்​தத்தை ஒப்​புக்​கொள்ள வேண்​டும். கோவை முழு​வதும் ஓலக்​குரல் ஒலித்து கொண்​டிருக்​கிறது. திமுகவை சார்ந்​தவர்​களால்​தான் திமுக அழியப்​போகிறது. இல்​லை​யென்​றால், மக்​களால் திமுக அழி​யும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

Related Post

“குற்ற உணர்ச்சி இல்லை.. ஆத்திசூடி அறியாதவர் கனவுலகில் ஆட்சி செய்கிறாரா?” விஜய்-யை கடுமையாக சாடிய வைகோ

Posted by - November 6, 2025 0
“குற்ற உணர்ச்சி இல்லை.. ஆத்திசூடி அறியாதவர் கனவுலகில் ஆட்சி செய்கிறாரா?” விஜய்-யை கடுமையாக சாடிய வைகோ பொது வாழ்வில் ஆத்திச்சூடியைக்கூட அறியாத விஜய் ஆட்சிக்கு வந்ததைப்போலவேகனவுலகத்திலும் எப்படி…

#JUSTIN || தி.மு.க-வினர் OTP பெற தடை | #MaduraiHighCourt | #OTP | #DMK | #OraniyilTamilNadu | #pixeltv

Posted by - July 21, 2025 0
திமுகவின் ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் -வாக்காளர்களிடம் OTP பெறுவதற்கு நீதிமன்றம் தடை #DMK #CMMKStalin #OraniyilTamilNadu #HighCourt #Voters #Election2026 #TamilNews #JUSTIN || திமுகவின் ஓரணியில்…

யாருடன் கூட்டணி.? பிரேமலதா போடும் அரசியல் கணக்கு

Posted by - February 3, 2026 0
தேர்தல் நெருங்கி வரும் நிலையில், யாருடன் கூட்டணி என எந்த முடிவும் அறிவிக்காமல் தேமுதிக இழுத்தடித்து வருகிறது, எனவே இ ன்றைய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய…

மன்னித்துவிடுங்கள்.. 41 குடும்பத்திடமும் கதறி அழுத விஜய் – மாமல்லபுரத்தில் நடந்தது இதுதான்!

Posted by - October 27, 2025 0
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் விஜய் மன்னிப்பு கேட்டு அழுதததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 27ம் தேதி கரூரில் நடந்த தமிழக வெற்றிக்…

அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர்கள் போராட்டம் வெற்றி! மீண்டும் பணி! அமைச்சர் அதிரடி!

Posted by - February 26, 2026 0
அண்ணா பல்கலை. தற்காலிக உதவி பேராசிரியர்களுக்கு மீண்டும் பணி; அதிரடியாக அறிவித்த அமைச்சர் கடந்த ஒரு மாத காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அண்ணா பல்கலை. தற்காலிக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *