ஓபிஎஸ்.! திமுகவா.? தவெகவா.? ட்விஸ்ட் கொடுத்த நிர்வாகிகள்

113 0

அதிமுக- பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் இணைவார் என எதிர்பார்கப்பட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை அ.தி.மு.க.வில் இணையமாட்டோம் என ஓபிஎஸ் தெரிவித்திருப்பது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவில் அதிகார மோதல்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 4 மாத காலமே உள்ள நிலையில், தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளது. திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் என 4 முனை போட்டியானது தற்பொழுது வரை உறுதியாகியுள்ளது. அந்த வகையில் கடந்த 2016ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுகவில் அதிகார மோதல் உச்சத்தை தொட்டது. தலைமை இடத்தை பறிக்க போட்டி ஏற்பட்டது. இதன் காரணமாக பல பிளவுகளாக அதிமுக நிர்வாகிகள் பிரிந்து தனி, தனி அணியாக செயல்பட்டு வருகிறார்கள்.  ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன், சசிகலா என தனியாக பிரிந்து இருந்தாலும் மீண்டும் அதிமுகவில் இணைய முயற்சி செய்து வந்தனர். ஆனால் இந்த 3 பேரையும் மீண்டும் அதிமுகவில் இணைக்க வாய்ப்பே இல்லையென எடப்பாடி பழனிசாமி தெரிவித்து விட்டார்.

கூட்டணியில் இருந்து வெளியேறிய ஓபிஎஸ், டிடிவி

இதன் காரணமாக ஒவ்வொரு தேர்தலிலும் அதிமுக வாக்குகள் சிதறி தோல்விக்கு மேல் தோல்வி கிடைத்து வருகிறது. அந்த வகையில் பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி இணைந்து தேர்தலை எதிர்கொண்டனர். இவர்களுக்கு எதிராக அதிமுக தனி அணியாக போட்டியிட்டது. ஆனால் வாக்குகள் சிதறி தோல்வி தான் கிடைந்தது.  எனவே 2026ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலாவது ஒன்றிணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினார்கள். தங்களுக்கு உரிய மரியாதை அளிக்கவில்லையென புகார் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் மீண்டும் பாஜக கூட்டணியில் இணைய பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. அதன் படி அதிமுக – பாஜக கூட்டணியில் ஓபிஎஸ்க்கு 3 இடங்களும், டிடிவி தினகரனுக்கு 5 இடங்களும் ஒதுக்க இபிஎஸ் ஒத்துக்கொண்டதாக தகவல் வெளியானது.

இபிஎஸ் இருக்கும் வரை இணையமாட்டோம்

இந்த சூழ்நிலையில், இ.பி.எஸ். உள்ள வரை அ.தி.மு.க.வில் இணையமாட்டோம் என ஓபிஎஸ் உறுதியாக தெரிவித்திருப்பது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வேப்பேரியில் ஆதரவாளர்களுடன் நடத்திய கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, வரும் நாட்களில் எடப்பாடி பழனிசாமிக்கு தகுந்த பாடம் புகட்டுவோம்  என தெரிவித்த ஓபிஎஸ், அ.தி.மு.க.வை தவிர வேறு எந்த கூட்டணியிலும் இணைவோம் என வைத்திலிங்கம் பேசியதை வழிமொழிவதாகவும் கூறினார். எந்த சூழலிலும் எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என நிர்வாகிகள் பேசியதையும் வழிமொழிவதாக ஓ.பி.எஸ் தெரிவித்தார்.

யாருடன் கூட்டணி.?

முன்னதாக சென்னை வேப்பேரியில் நடைபெற்ற ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான மாவட்ட செயலாளர் கூட்டத்தில் யாருடன் கூட்டணி வைக்க விரும்புகிறீர் என மாவட்ட செயலாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது

Option a தவெக

Option b திமுக

என இரு வாய்ப்புகளை கொடுத்து  மாவட்ட செயலாளர்களின் கருத்துக்கள் பெறப்பட்டது. இதில் பெரும்பாலான நிர்வாகிகள் தவெகவுடன் கூட்டணி வைக்கவே அதிகளவில் விருப்பம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Post

சொந்த கட்சியினரால் அல்லது மக்களால் திமுக அழியும்: தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம்

Posted by - November 8, 2025 0
சென்னை: ‘சொந்த கட்​சி​யின​ரால் அல்​லது மக்​களால் திமுக அழி​யும்’ என பாஜக முன்​னாள் மாநில தலை​வர் தமிழிசை சவுந்​தர​ராஜன் தெரி​வித்​தார். வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு கொண்​டாட்​டம்…

விஜய் வரணும்.. குஷிப்படுத்த பாஜககாரங்க பேசிக்கிறாங்க, அதிமுகவில் சீமான்? – எடப்பாடி பேச்சு

Posted by - July 22, 2025 0
அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைய விஜயின் தவெக மற்றும் சீமான் ஆகியோருக்கு, எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். தொண்டர்களை குஷிப்படுத்த ஆட்சியில் பங்கு என, பாஜகவினர் பேசி…

திருச்சியில் விஜயின் எண்ட்ரி – தமிழக அரசியல் ஆட்டம் காணுமா? திராவிட கட்சிகளின் செண்டிமெண்ட்…

Posted by - September 13, 2025 0
 தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு பயணம், திருச்சியில் இன்று தொடங்குகிறது. தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கிய பிறகு முதன்முறையாக, விஜய் மாநிலம்…

திமுகவுக்கு பலனளிக்குமா ‘டாப்ஸ்’ ஓய்வூதியத் திட்டம்? – மீண்டும் போராடத் தயாராகும் சங்கங்கள்

Posted by - January 7, 2026 0
கடந்த 2021- சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் ‘பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அமல்​படுத்​து​வோம்’ என திமுக வாக்​குறுதி அளித்​தது. அது திமுக-​வின் வெற்​றிக்கு பெரிதும் உதவியது. ஆனால், 4 ஆண்​டு​களுக்​கும்…

தவெக மாநாடு ஏற்பாட்டில் ஒப்பந்ததாரர் கைவிரிப்பு: அரசியல் அழுத்தமே காரணம்!

Posted by - August 20, 2025 0
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாட்டில் இருக்கைகள் அமைப்பதற்கு தமிழக ஒப்பந்ததாரர்கள் தீடிரென கைவிரித்தனர். இதனால், கேரளாவில் இருந்து இருக்கைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. தவெக 2- ஆவது…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *