பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை:கோரிக்கை நிறைவேறும்வரை பின்வாங்கப் போவதில்லை என உறுதி

73 0

பள்ளிக்கல்வித் துறைஅதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், போராட்டம் தொடரும் என்று இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.

சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை முன் வைத்து, இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கம் (எஸ்எஸ்டிஏ), கடந்த டிச. 26-ம் தேதி முதல் தொடர் போராட்டங்களை நடத்திவருகிறது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆசிரியர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, 11-வது நாளாக ஆசிரியர்கள் சென்னை எழும்பூரில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

அரையாண்டு விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகளும் திறக்கப்பட்டன. எனினும், ஆசிரியர்கள் பலர் பணிக்குச் செல்லாமல் போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் மாற்று ஏற்பாடுகளை அனைத்து மாவட்டக் கல்வி அலுவலகங்களும் ஏற்பாடு செய்திருந்தன. எனினும், சில பகுதிகளில் மாணவர்களின் கற்றல், கற்பித்தல் பணிகள் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் பூ.ஆ.நரேஷ் ஆகியோர் போராட்டக் குழுவினருடன் நேற்று டிபிஐ வளாகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 3 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால், தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து, எஸ்எஸ்டிஏ பொதுச்செயலர் ஜே.ராபர்ட் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது. எங்கள் கோரிக்கையை உரிய ஆதாரங்களுடன் எடுத்து முன்வைத்தோம். அதற்கு டெல்லி சென்றுள்ள துறையின் செயலர் சந்திரமோகன் சென்னை திரும்பியதும் அவருடன் கலந்து பேசி பிரச்சினைக்கு உரிய தீர்வு காண்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதுவரை அமைதியான முறையில் எங்களின் போராட்டம் தொடரும். காவல் துறைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.

அதேநேரம், கோரிக்கை நிறைவேறும் வரை களத்தைவிட்டு வெளியேறப்போவதில்லை. எங்கள் ஊதிய முரண்பாடு பிரச்சினைக்கு ஓரிரு நாட்களில் தீர்வு எட்டப்படும் என உறுதியாக நம்புகிறோம். நாங்கள் விடுமுறையில் மட்டுமே போராட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். ஆனால், இந்த முறை பள்ளிகள் திறக்கப்பட்டும் வகுப்பறைக்குச் செல்ல முடியாத நிலைக்காக மாணவர்கள், பெற்றோரிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். விரைவில் மீண்டும் பள்ளிக்குத் திரும்பி முழு வீச்சில் கற்றல், கற்பித்தலில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Post

ரீல் ஜோடி இனிமேல் ரியல் ஜோடியா..

Posted by - January 29, 2024 0
சிம்பு 40 வயதாகும் சிம்பு இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். இவருடைய காதல் கதைகள் அனைவருக்கும் தெரிந்தது தான். நடிகை நயன்தாராவை காதலித்து வந்த சிம்புவிற்கு ஒரு…

அமைச்சருடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு: தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது

Posted by - January 13, 2026 0
அமைச்​சர் நடத்திய பேச்​சு​வார்த்​தை​யில் உடன்​பாடு ஏற்பட்டதால் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் முடிவுக்கு வந்​தது. சென்னை மாநக​ராட்​சி​யில், ராயபுரம், திரு.​வி.க.நகர் மண்​டலங்​களில் தூய்​மைப் பணியை தனி​யார்​மய​மாக்​கியதற்கு எதிர்ப்பு தெரி​வித்​து,…

கனமழைக்கு வாய்ப்பு

Posted by - September 26, 2023 0
#Rain | #RainAlert | #ChennaiRains | #Weather | #pixeltv | #pixelmedia தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம்…

நான் முதல்வன் திட்டம்: இவர்களுக்கெல்லாம் ரூ.50,000 ஊக்கத்தொகை! இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?

Posted by - November 13, 2025 0
நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக 50.000 ரூபாய் ஊக்கத்தொகையாக நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். நான் முதல்வன் திட்டத்தின்கீழ் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி…

ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் விமான டிக்கெட் எடுத்தால் சேவை கட்டணம் கிடையாது

Posted by - September 25, 2023 0
சென்னை: இந்தியன் ரெயில்வே சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் (ஐ.ஆர்.சி.டி.சி) அடித்தள நாள் மற்றும் உலக சுற்றுலா தினத்தையொட்டி விமான டிக்கெட் முன்பதிவு செய்தால் 3 நாட்களுக்கு சலுகை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *