அமைச்சருடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு: தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது

60 0

அமைச்​சர் நடத்திய பேச்​சு​வார்த்​தை​யில் உடன்​பாடு ஏற்பட்டதால் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் முடிவுக்கு வந்​தது.

சென்னை மாநக​ராட்​சி​யில், ராயபுரம், திரு.​வி.க.நகர் மண்​டலங்​களில் தூய்​மைப் பணியை தனி​யார்​மய​மாக்​கியதற்கு எதிர்ப்பு தெரி​வித்​து, இம்​மண்​டலங்​களில் தற்​காலிக​மாக பணிபுரிந்த தூய்​மைப் பணி​யாளர்​கள் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தொடர் போராட்​டங்​களை நடத்தி வந்தனர்.

தூய்​மைப் பணி​யாளர்​களுக்கு பணி​யின் போது 3 வேளை உணவு, குடி​யிருப்பு வசதி, மருத்​து​வக் காப்​பீடு உள்​ளிட்ட 7 அறி​விப்​பு​களை முதல்​வர் ஸ்டா​லின் வெளி​யிட்​டார். அதன் பின்​னர், தூய்​மைப் பணி​யாளர்​கள் பலர் பணிக்கு திரும்​பிய நிலை​யில், ஒரு பிரி​வினர் தொடர் போராட்​டத்​தில் ஈடு​பட்டு வந்​தனர்.

இந்​நிலை​யில், அமைச்​சர் சேகர்​பாபு, தூய்​மைப் பணி​யாளர்​கள் மற்​றும் உழைப்​போர் உரிமை இயக்​கத்தை சேர்ந்த பாரதி ஆகியோ​ருடன் நேற்று பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார்.

இதில் உடன்​பாடு எட்​டப்​பட்ட நிலை​யில், அமைச்​சர், உண்​ணா​விரதம் மேற்​கொண்ட தூய்​மைப் பணி​யாளர்​களுக்கு பழச்​சாறு வழங்கி போராட்டத்தை முடித்து வைத்​தார்.

இது தொடர்​பாக, உழைப்​போர் உரிமை இயக்​கத்தை சேர்ந்த பார​தி​யிடம் கேட்​ட​போது, “மாநக​ராட்​சி​யிலேயே பணி வழங்​கப்​படும். ஏற்​க​னவே வாங்​கிய ஊதி​யமே வழங்​கப்​படும் என அமைச்சர் உறுதியளித்ததால் போ​ராட்​டத்தை முடித்​துக் கொண்​டோம்” என்றார்.

Related Post

பெட்ரோலுடன் கலந்த தண்ணீர்.. வாகனங்கள் பழுதானதால் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்..

Posted by - August 27, 2024 0
நீண்ட காலமாகவே பெட்ரோலில் கலப்படம் செய்யப்படுகிறது, தரமான பெட்ரோல் வழங்கப்படுவதில்லை என்ற புகார் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. இதனால் வாகனங்கள் எளிதில் பழுதாகி விடுவதாக தெரிவிக்கின்றனர்.…

சர்க்கரை நோயாளிகள் பிஸ்தா சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா அவங்க உடலில் என்ன நடக்குமாம் தெரியுமா?

Posted by - December 26, 2023 0
பிஸ்தா மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான நட்ஸ் வகைகளில் ஒன்றாகும். கூடுதலாக, எந்தவொரு ஆரோக்கியமான உணவுக்கும் இது ஒரு நல்ல கூடுதலாக இருக்கும். உங்கள் இரத்தத்தில் உள்ள…

உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.34 லட்சம் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை

Posted by - May 28, 2023 0
இந்த பணத்தை பெற்றதற்கான நியாயப்பூர்வமான காரணங்கள் எதையும்  அறக்கட்டளையின் நிர்வாகிகளால் தெரிவிக்க இயலவில்லை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் அறக்கட்டளைக்கு சொந்தமான வங்கிக் கணக்கில் இருந்த 34 லட்சத்து…

சென்னை மக்களை வாட்டி எடுக்கும் புதுவித வைரஸ் காய்ச்சல்

Posted by - February 22, 2023 0
சென்னை: சென்னை மக்களை வைரஸ் காய்ச்சல் ஒன்று பாடாய் படுத்திக் கொண்டிருக்கிறது. சளி மற்றும் வரட்டு இருமலில் தொடங்கும் இந்த காய்ச்சல் கடுமையான உடல் வலியையும் கூடவே…

சர்க்கரை நோயாளிகள்.. பேரீச்சம் பழம் சாப்பிடலாமா.. பேரீச்சம்பழம் சாப்பிட்டால் என்னாகும்? அட ஆச்சரியம்

Posted by - December 5, 2023 0
சென்னை: சர்க்கரை நோயாளிகள் இனிப்பு நிறைந்த பேரீச்சம் பழம் சாப்பிடலாமா? இந்த பழத்தை சாப்பிட்டால் என்னாகும்? தித்திப்பு நிறைந்த பழம் என்பதால், நீரிழிவு நோயாளிகள் பேரீச்சம் பழம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *