பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!

55 0

ஜனநாயக உரிமைகள் பற்றி வாய்கிழியப் பேசும்  திமுக, பகுதி நேர ஆசிரியர்களின் உரிமைக்காக போராடுவதைக் கூட அனுமதிக்காமல் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுகிறது – அன்புமணி.

பணி நிரந்தரம் கோரி போராடிய பகுதி நேர ஆசிரியர்களைத் தாக்கி கைது செய்வதா என்று கேள்வி எழுப்பி உள்ள பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ், அடக்குமுறைகளுக்கு தண்டனை தோல்வி என்று சாடியுள்ளார்.

சம வேலைக்கு சம ஊதியம் கோரி, இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் 10 நாட்களுக்கும் மேலாகத் தொடர்ந்து தலைநகர் சென்னை மற்றும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல பகுதிநேர ஆசிரியர்களும் போராடி வருகின்றனர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களைக் காவல் துறையினர் கைது செய்து வருகின்றனர். இதற்கு அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை பள்ளிக் கல்வித்துறை அலுவலகம் முன் போராட்டம் நடத்திய பகுதி நேர ஆசிரியர்களை காவல் துறையினர் கொடூரமாகத் தாக்கி கைது செய்துள்ளனர்.

தலைமுடியை பிடித்து இழுத்து வாகனத்தில் ஏற்றுவதா?

சில பெண் ஆசிரியர்களின் தலைமுடியை பிடித்து இழுத்து  காவல்துறை வாகனத்தில் ஏற்றிய கொடுமையும் நடந்திருக்கிறது. ஆசிரியர்களுக்கு எதிரான திமுக அரசின் அடக்குமுறை கண்டிக்கத்தக்கது.

அரசுப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி ஆகிய பாடங்களை கற்றுத் தருவதற்காக  2012-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட  16,500-க்கும் கூடுதலான பகுதி நேர சிறப்பாசிரியர்களில் இப்போது சுமார் 12 ஆயிரம் பேர் மட்டுமே இப்போது பணியாற்றி வருகின்றனர். இவ்வளவு காலத்திற்கு பிறகும் மாதம் ரூ.12,500 மட்டுமே ஊதியம் பெறும் அவர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோருவது மிகவும்  நியாயமானது.

அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுவதா?

ஆனால், ஜனநாயக உரிமைகள் பற்றி வாய்கிழியப் பேசும்  திமுக, பகுதி நேர ஆசிரியர்களின் உரிமைக்காக போராடுவதைக் கூட அனுமதிக்காமல் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுகிறது.

இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றாத திமுக அரசு, போராடும் ஆசிரியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப் போவதாக எச்சரித்திருக்கிறது. அரசு ஆசிரியர்களுக்கு மோசடியான ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்து, அதையும்  செயல்படுத்தாமல் ஏமாற்றி வருகிறது.

ஆசிரியர்கள் மீது அடக்குமுறையா?

ஆட்சியும், அதிகாரமும் கைகளில் இருக்கும் திமிரில்  திமுக ஆட்சியாளர்கள்,  அரசு ஊழியர்கள் மீதும், ஆசிரியர்கள் மீதும் அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுகின்றனர். இதன் மூலம் போராட்டங்களை முடக்கி விடலாம் என்று கனவு காண்கின்றனர்.

மக்கள் சக்தியை அதிகாரத்தின் மூலம் ஒடுக்க முடியாது.  அதிகாரத் திமிரில் அடக்குமுறைகளை ஏவுபவர்களுக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் படுதோல்வி எனும் தண்டனையை வழங்கவிருப்பது உறுதி’’ என்று அன்புமணி அதில் தெரிவித்துள்ளார்.

Related Post

’அண்ணாமலை பெஸ்ட் – கூட்டணியை விட்டு வெளியேற காரணம் இதுதான்’ டிடிவி தினகரன் அதிரடி..!

Posted by - September 6, 2025 0
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஏன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியது என்பதை டெல்லியில் உள்ள பாஜக தலைவர்கள் அறிவார்கள் என்றும், எங்களுக்கு என்ன இடர்பாடு…

இன்னும் சிறிது நேரத்தில் குட் நியூஸ்.. ஆசிரியர்களுக்கு சம ஊதியம்- அமைச்சர் பேச்சுவார்த்தை!

Posted by - January 5, 2026 0
தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுடன் இன்று 05.01.2026 பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் உள்ள பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. சம வேலைக்கு சம…

‘மார்ச் 1ல் முக்கிய முடிவு – மாநாடு’ திமுக மாஸ்டர் ப்ளான்..!

Posted by - February 9, 2026 0
’கே.என்.நேரு தலைமையில் ஏ.வே.வேலு உள்ளிட்டோரை உள்ளடக்கிய தொகுதி பங்கீட்டு குழுவை திமுக அமைக்கவிருப்பதாக கூறப்படுகிறது’ சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக தன்னுடைய  பிரச்சாரத்தை தீவிரமாக…

விஜய்க்கு விசில் சின்னம்..

Posted by - January 22, 2026 0
முதன்முறையாக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் தவெக-விற்கு விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் இன்னும் 4 மாதங்களுக்குள் நடைபெற உள்ள நிலையில், மிகப்பெரிய…

கள்ளக்குறிச்சிக்கு வழி தெரியாது; காசாவை பற்றி கவலை எதற்கு? – ஸ்டாலினை சாடிய அண்ணாமலை

Posted by - October 8, 2025 0
சென்னை: கள்ளக்குறிச்சியில் மக்களை காவு கொடுத்த முதல்வர் ஸ்டாலின், காசாவிற்கு கருணை காட்ட சொல்வது ஆகசிறந்த நகைச்சுவை என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். காசா…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *