‘மார்ச் 1ல் முக்கிய முடிவு – மாநாடு’ திமுக மாஸ்டர் ப்ளான்..!

37 0

’கே.என்.நேரு தலைமையில் ஏ.வே.வேலு உள்ளிட்டோரை உள்ளடக்கிய தொகுதி பங்கீட்டு குழுவை திமுக அமைக்கவிருப்பதாக கூறப்படுகிறது’

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக தன்னுடைய  பிரச்சாரத்தை தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக, அரசின் திட்டங்களை கடைசி நிமிடம் வரை மக்கள் மத்தியில் கொண்டுபோய்ச் சேர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே, தினந்தோறும் குறைந்தது மூன்று முதல் நான்கு அரசு நிகழ்சியில் பங்கேற்று வருகிறார். அதுமட்டுமின்றி, கட்சி நிகழ்வுகள், திமுகவின் சமூக வலைதள பிரச்சார முன்னெடுப்புகள் என தொடர்ச்சியாக அவர் பணியாற்றி வருகிறார்.

திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் ?

இந்நிலையில், திமுக கூட்டணியில் புதிய கட்சிகளை இணைக்கவும் முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் திரைமறைவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்த முறை தேர்தலில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் திமுக இருப்பதால், கூட்டணியை இன்னும் பலமாக்க பல்வேறு வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. அதற்காக வியூக வகுப்பு நிறுவன நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு குழுக்களுக்கு பணிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.

தொதி பங்கீடு எப்போது ?

அதோடு, கூட்டணியில் இருக்கும் கட்சிகள் மற்றும் புதிதாக திமுக கூட்டணிக்குள் வரவிருக்கும் கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை முடிக்க வேண்டிய தேவை திமுகவிற்கு இருக்கிறது. ஏற்கனவே, காங்கிரஸ் கட்சி சார்பில் தொகுதி பங்கீட்டு குழு அமைக்கப்பட்டு, அவர்கள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசிவிட்டு வந்திருக்கும் நிலையில், இதுவரை திமுக தரப்பில் தொகுதி பங்கீட்டு குழு அமைக்கப்படவில்லை. அதற்கு காரணம், திமுக இன்னும் சில கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருப்பதே. ஆனால், ஏற்கனவே தொகுதி பங்கீட்டு குழுவில் யார், யாரை நியமிக்கவேண்டும் என்பது முடிவு செய்யப்பட்டுவிட்டது. கூட்டணி இறுதி செய்யப்படும் நிலையில், அந்த அறிவிப்பும் வெகு விரைவில் வரவிருக்கிறது. கடந்த தேர்தலைகளை பார்த்தாலும் திமுகவில் அனைத்து முடிவுகளும் எடுக்கப்பட்ட பின்னரே, தொகுதி பங்கீட்டு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த முறை அமைச்சரும் திமுக முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு, ஏ.வ.வேலு உள்ளிட்டோர் அடங்கிய தொகுதி பங்கீட்டு குழு அமைக்கப்படும் என அறிவாலய வட்டாரங்களில் பேச்சு அடிப்பட்டு வருகிறது.

பிப்ரவரி இறுதிக்குள் அனைத்தையும் முடிக்க திமுக முடிவு

இந்நிலையில், பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் கூட்டணிக்கான முடிவுகள், தொகுதி பங்கீடு என அனைத்தையும் முடித்துவிட திமுக தலைமை திட்டமிட்டிருக்கிறது.  அதனால், அதற்கான பணிகள் திமுக தலைமையால் வேகப்படுத்தப்பட்டு வருகின்றன. கூடுதல் தொகுதிகள் கேட்கும் காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை சமாதானப்படுத்தும் படலமும் தொடங்கியிருக்கிறது.

மு.க.ஸ்டாலின் பிறந்தநாளில் முக்கிய அறிவிப்பு

பிப்ரவரி இறுதியில் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீட்டு முடிவுகள் என அனைத்தும் எடுக்கப்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்ததினமான மார்ச் 1ல் முக்கிய அறிவிப்பு ஒன்றை திமுக வெளியிட இருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திருச்சியில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்?

கூட்டணி இறுதிச் செய்யப்பட்டு, தொகுதி பங்கீட்டை முடித்த பின்னர், மார்ச் 2வது வாரம் அல்லது மார்ச் 8ஆம் தேதி திருச்சி அல்லது மதுரையில் கூட்டணி கட்சித் தலைவர்களை வைத்து பிரம்மாண்ட மாநாடு நடத்த திமுக தலைமை திட்டமிட்டு வருகிறது. அதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Related Post

“ஆட்சியில் பங்கு குறித்து இனி யாரும் பேசமாட்டார்கள்” – ஆர்.எஸ்.பாரதி உறுதி!

Posted by - February 14, 2026 0
சென்னை: “கூட்டணி ஆட்சி குறித்து நாளை முதல் யாரும் பேசமாட்டார்கள். விஜய்யை நாங்கள் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை” என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். இது குறித்து…

வாக்காளர் பட்டியல் திருத்தம் – வாக்குரிமை, யாருக்கு பிரச்னை? செய்ய வேண்டியது என்ன? உரிய ஆவணங்கள்

Posted by - November 4, 2025 0
அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள், தமிழ்நாட்டில் இன்று தொடங்குகிறது.TN SIR ECI:  சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள், இன்று…

ஜனநாயகனை விடுங்கப்பா.. அரசியலை பார்ப்போம்- விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Posted by - January 9, 2026 0
ஜனநாயகன் திரைப்படம் இன்று வெளியாகும் என எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். ஜனநாயகனுக்கு செக் வைத்த சென்சார்…

கருணாநிதி சூழ்ச்சி..ஜெயலலிதாவோடு மாட்டி விட்டுட்டாரு..

Posted by - March 3, 2026 0
பிற்காலத்தில் ஜெயலலிதாவுக்கு பின்னால் இந்த பெண் அதிமுகவுக்கு தலைமையாக வரக்கூடும் என 1996ல் கருணாநிதி கணித்தார். அதனால் தான் என்னை சொத்து குவிப்பு வழக்கில் இணைத்து விட்டார்…

நடிகைகள் என்ன உங்க சொத்தா.. நயன்தாரா விவகாரத்தில் கொந்தளித்த நடிகை குஷ்பு

Posted by - March 18, 2026 0
சமீப காலமாக அரசியல் பிரபலங்கள் பலரும் சினிமா நடிகைகளின் பெயர்களை குறிப்பிட்டு கொச்சையாக பேசுவது அதிகரித்து வருகிறது. விஜய் த்ரிஷா வீட்டை விட்டு வெளியில் வர வேண்டும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *