’அண்ணாமலை பெஸ்ட் – கூட்டணியை விட்டு வெளியேற காரணம் இதுதான்’ டிடிவி தினகரன் அதிரடி..!

188 0

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஏன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியது என்பதை டெல்லியில் உள்ள பாஜக தலைவர்கள் அறிவார்கள் என்றும், எங்களுக்கு என்ன இடர்பாடு என்பதை அறிந்த அவர்கள் அதனை சரிசெய்தால் மீண்டும் NDA கூட்டணிக்கு செல்வது குறித்து பரிசீலனை செய்வோம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அதோடு, கூட்டணியில் இருந்து வெளியேறியதற்கு பாஜக காரணம் அல்ல என்றும், எங்கள் தொண்டர்களின் கருத்தால் மட்டுமே வெளியேறியதாகவும் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

எதற்கும் அடிபணியமாட்டேன்

தான் எதற்கும் எந்த அழுத்தத்திற்கும் அடி பணிய மாட்டேன் என்றும் அந்த தைரியம் ஜெயலலிதாவிடமிருந்து தனக்கு வந்ததாகவும் கூறியுள்ள டிடிவி தினகரன், விரைவில் கூட்டணியை அறிவிப்போம் என்றும் நாங்கள் பங்குபெறும் கூட்டணி நிச்சயம் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், தங்களுக்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணையவேண்டும் என்பதுதான் முதல் விருப்பம் என்றும் அதற்கு அவர்கள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தினகரன் கூறியுள்ளார்.

நயினார் சரியில்லை ; அண்ணாமலை பெஸ்ட்

அதுமட்டுமின்றி, ஒபிஎஸ்,  தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறியபோது பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அளித்த பதில் ஆணவத்தனமானது என்றும் அவர் கூட்டணி கட்சிகளை கையாளும் விதம் சரியில்லை என்றும் அதிரடியாக தெரிவித்துள்ளார். மேலும், அண்ணாமலை மாநில தலைவராக இருந்தவரை கூட்டணியை அவர் சரியாக கையாண்டார் என்றும் நயினாருக்கு அண்ணாமலை மாதிரி செயல்பட தெரியவில்லை என்றும் தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Related Post

மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயர் சூட்டுவோம்! – இபிஎஸ் பிரகடனம் அதிமுகவுக்கு அனுகூலம் சேர்க்குமா?

Posted by - September 16, 2025 0
கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, வன்னியருக்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்கும் அரசாணையை அவசரகதியில் வெளியிட்டது அதிமுக அரசு. இதன் தாக்கம் தென் மாவட்டங்களில் அதிமுக-வுக்கு…

“சிறுமி முதல் பாட்டி வரை பாதுகாப்பில்லை, எங்கே போனார் அப்பா.?“

Posted by - July 19, 2025 0
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எழுச்சிப் பயணம் மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நேற்று இரவு திருவாரூரில் பேசியபோது, திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். ‘மக்களை…

ராமதாஸ் மிரட்டல்? பாமக-வில் வெடிக்கும் உட்கட்சி மோதல்!

Posted by - July 25, 2025 0
Anbumani Walking Rally: “அன்புமணி நடைபயணத்திற்கு எதிராக ராமதாஸ் மிரட்டுவதாக அன்புமணி ஆதவாளர்கள் புகார்” பாமகவில் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ஆகிய இருவருக்கும் மோதல்…

எதிர்க்கட்சிகளுக்கு செங்கோட்டையன் வார்னிங்!

Posted by - February 9, 2026 0
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் அரசியல் களத்தில் விறுவிறுப்பாக செயல்பட்டு வரும் நிலையில் தலைவர் விஜய் இதுவரை செய்தியாளர்களை சந்திக்காமல் இருப்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.…

புதுக்கட்சி தொடங்கிய ஓபிஎஸ்…..

Posted by - December 15, 2025 0
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சத்தமில்லாமல் புதுக்கட்சி தொடங்கி இருப்பதாக கூறப்படும் நிலையில், அது குறித்து வரும் டிச.23-ம் தேதி மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசித்து முறைப்படி அறிவிக்க திட்டமிட்டிருப்பதாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *